இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள பல்வேறு பிரதான செயற்திட்டங்களின் விளைவாக பிராந்திய பெருந் தோட்டக்கம்பனிகளின் (RPC) தோட்டங்களில் வாழும் சுமார் பத்து இலட்சம் குடிமக்களின் வாழ்க்கைத் தரம், குறிப்பாக புதிதாக தனிக்குடிமனை கள், பிள்ளை அபிவிருத்தி நிலையங்கள் (CDC), தேகாரோக்கிய வசதிகள் மற்றும் பாதுகாப்பான குடிநீருக்கான வசதிகள் முதலியவற்றில் கவனஞ் செலுத்தும் முன்னெடுப்புக்களினால் கணிசமான அளவு
மேம்படுத்தப்படவுள்ளதாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது. முதலாளிமார் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது
அரசினால் 1992 இல் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டதிலிருந்து வீடமைப்பு, தேகாரோக்கியம், பிள்ளை பாரமரிப்பு மற்றும் அபிவிருத்தி ஆரம்பக் கல்வி பெண் வலுவூட்டல் போன்று பிள்ளை மற்றும் தாய்மார் இறப்பு மற்றும் வறுமை முதலியன உட்பட அநேகமான சமுக மற்றும் சுகாதா ரச் சுட்டிகளில் கணிசமான அளவு முன்னேற்றங்களை பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPC) தோட்டங்கள் கண்டுள்ளன.
உதாரணமாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பின்படி பெருந்தோட்டத்துறையின் வறுமை கணிசமான அளவு அதாவது 28% வீழ்ச்சியைக் காட்டுகின்றது.
(1995/96 இல் 38.4% வீதத்திலிருந்து 2012/13 இல் 10.9% வரை) இவ்வாறான விளைவுகள் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC), பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT), சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் (INGO), நன்கொடை முகவராண்மைகள் போன்றன உட்பட அநேகமான பங்குதாரார்களின் நடவடிக்கைகள் காரணமாகவே சாதிக்கப்பட்டன.
ஆயினும் பாரியளவிலான பெருந்தோட்ட குடியிருப்பாளர்கள் காரணமாகவும், பிரச்சினைகளின் சிக்கலான தன்மையினாலும் பல்வேறு அம்சங்களில் மேலும் முன்னேற் றம் காணப்பட வேண்டும் என்பதில் கருத்தொற்றுமை காணப்படுகிறது.
இவ்வாறானவற்றுள் பெரும்பாலனவற்றுக்கு முன் வரக்கூடிய செயற்றிட்டங்களின் மூலம் தீர்வு காணப்படலாம். இதன் மூலம்
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் (RPC) தோட்டக்குடியிருப்பாளரின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படலாம்.
நுவரெலியா, கண்டி மற்றும் ஹட்டன் பிராந்தியங்களிலுள்ள பெருந்தோட்டங்களின் நீர் மற்றும் தேகாரோக்கிய வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 1800 மில்லி யன் ரூபா நிதி அர்ப்பணிப்புடனான உலக வங்கியின் ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் 20 தோட்டங்களில் உள்ள 16000 குடிமனைகளுக்கு பயன் தருவதுடன் 220 தனிப்பட்ட நீர் செயற்திட்டங்களையும் 8000க்கும் அதிகமான மலசலகூடங்கள் நிர்மாணிக்கப்படுதலையும் உள்ளடக்கும்.
முன்பள்ளிக் கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உலக வங்கி
யின் இன்னுமொரு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டம் 140 பிள்ளை அபிவிருத்தி நிலை
யங்கள் (CDC) போலவே 175 விளையாட் டுப் பகுதிகளை நிர்மாணிக்கவும் தற்போது பாவனையில் உள்ள 175 பிள்ளை அபிவிருத்தி நிலையங்களையும் (CDC) 210 விளையாட்டுப் பகுதிகளையும் விருத்தி செய்வ தற்காகவும் 1400 மில்லியன் ரூபாவை வழங்கவும் உள்ளது.
சகல புதிய பிள்ளை அபிவிருத்தி நிலையங்களும் விளையாட்டுப் பகுதிகளையும் எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதுடன் தேவையான தரங்களுக்கு அமைய அவசியமான தளபாடங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் கொண்டு அமைந்திருக்கும். நாட்டில் உள்ள அனைத்து பெருந் தோட்டப் பிராந்தியங்களிலும் இந்த நிகழ்ச் சித் திட்டம் அமுல் செய்யப்படும்.
இந்திய அரசினால் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள நுவரெலியா மற்றும் ஊவாவில் உள்ள பெருந்தோட்டங்களில் 4000 தனிக் குடிமனைகளுக்கான செயற்திட்டம் சில தாமதங்களை எதிர்நோக்கியிருந்த போதிலும் இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும் நகர்ப்புறங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் புதிய தொலைநோக்குக்கு அமைய விளையாட்டு மைதானம், தபால் நிலையம், கூட்டுறவுச் சங்கக்கடை பிள்ளை அபிவிருத்தி நிலையம் (CDC) போன்றவற்றிற்கு மேலதிகமாக 184 வீடுகள் ஹட்டனில் கொட்டியாகலைத் தோட்டத்திலும், 150 வீடுகளுடன் நுவரெலியாவில் ஹோட்வில் தோட்டத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
தோட்டப்பகுதி குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத்தரங்களை விருத்தி செய்வதற் குப் பொறுப்பாக உள்ள பெருந்தொட்ட மனித அபிவிருத்தி நிதியத்தின் (PHDT) நிர் வாகச் செலவினமாக வரியொன்றையும் பிராந் திய பெருந்தோட்டக் கம்பனிகள் (RPC) செலுத்துகின்றன. இந்நிதியமானது பல் வேறு வழிவகைகள் மூலம் இவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு தனது ஒத்துழை ப்பை நல்குகின்றது.
இவற்றுள் பகுதியளவில் நிதியுதவி வழங்கல் செயற்திட்டத்திற்காக பொருத்தமான காணிகளை விடுவித்தல் குறிக்கப்பட்ட இடங்களைத் துப்பரவு செய்வதற்கான ஆட்பலத்தை வழங்குதல் பொருட்சாதனங்களைப் போக்குவரத்து செய்ய உதவுதல் போன்றன உள்ளடங்கும்.
மேலதிக அபிவிருத்திக்கான தேவைகள் இருந்த போதிலும் தோட்டங்கள் தனியார் உடமையாக்கப் பட்டதிலிருந்து பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கான (RPC) தோட்டங்களில் வசிக்கும் குடியிருப்பாள ரின் வாழ்வு நிலைமைகள் தொடர்பாக கணிசமான அபிவிருத்திகள் சாதிக்கப்பட் டுள்ளன.
60 வீதத்துக்கும் மேற்பட்ட வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டோ அல்லது மீளவும் கூரைகள் இடப்பட்டோ உள்ளன.
பிள்ளை அபிவிருத்தி நிலையங்களின் (CDC) 77 வீதமான தேவைகள் பூர்த்தி செய் யப்பட்டுள்ளன.
நீர் மற்றும் தேகாரோக் கியத்தைப் பொறு த்தளவில் அவற்றுக்கான தேவைகள் முறையே 55% மற்றும் 53% என்ற வகையில் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...