பெருந்தோட்டப் பகுதிகளில் மிருகங்களின் தாக்குதல் மற்றும் குளவி கொட்டுதல் முதலான அனர்த்தங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் அத்தகைய ஆபத்து ஏற்படுகின்றபோது தொழிலாளர்களுக்கு நிவாரணம் நட்டஈடு பெற்றுக் கொடுக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தி மற்றும் வனவளபாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா அவர்களுடனான சந்திப்பு பேராதனை தாவரவியல் பூங்கா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இச்ச்ந்திப்பில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்.
பெருந்தோட்ட பகுதிகளில் வ ன விலங்குகளின் தாக்குதல்களுக்கும் குளவி கொட்டுதல்களுக்கும் இலக்காகும் தொழிலாளர்கள் பாரிய சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். நேற்றும் கூட சாமிமலை பிரதேசத்தில் ஒரு பெண் தொழிலாளி சிறுத்தையின் தாக்குதலுக்குள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிரதேச மக்கள் இது குறித்து எனது கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இத்தகைய அனர்த்தங்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் பாதிப்புற்ற தொழிலார்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கவும் அமைச்சருடனான சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவித்தார். இத்தகைய அன்ர்த்தங்கள் அபாயங்களின்போது 1992 என்ற அவசர தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு வனபாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளட்டுள்ளனர்.
வனவிலங்குகளை அழித்தொழிக்க முடியாது அதேநேரம் அவற்றிடம் இருந்து நம்மைத் பாதுகாக்கவும் வேண்டும். எனவே பிரதேச செயலக மட்டத்தில் மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்ளவும் மரங்களை வெட்டுதல் , காடுகளை அழித்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தோட்ட கம்பனிகள் மரங்களை வெட்டி விற்பனை செய்வத்ற்கு எதிராக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தி மற்றும் வனபாதுகாப்பு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் இடம்பெற்ற இச்ச்ந்திப்பில் அமைச்சின் செயலாளர் மீகஸ்முல்ல, நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலார்கள், வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...