நானுஓயா புகையிரத நிலையத்திற்கும், நகரத்திற்கும் சிறிது தள்ளி ஒரு மண்டபம் தெரியும், அதுதான் காந்தி மண்டபம். இதன் வரலாற்றில் நடந்த ஒரு சம்வத்தை நான் சூரிய காந்தி பத்திரிகையில்,10,10,2012ம், -17,10,2012 திகதியில் வெளிவந்தன. அதனை மீளவும், புனரமைக்க இருப்பதாகவும் அதனைபற்றிய விபரங்களை தந்துதவினால் நல்லது என பலர் கேட்டதனால் தருகிறேன்.
மகாத்மா காந்தி 1928ம் இலங்கை வந்தபோதே அதனை ஆரம்பிக்கும் பணி ஆரம்பமாகியது. அதற்கான அமைப்புக் குழுத்தலைவராக அப்போது நானுஓயா புகையரத நிலைய அதிபர் திரு.எஸ். ராமலிங்கம் அவர்களுடன் எம்.வீரன். எஸ்.சின்னையா, எஸ். நாகப்பன், பி.ரெங்கன் கங்காணி ஆகியோர் கூட்டினால் 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
மண்டபம் திறப்பு விழா வைபவத்தை இலங்கை இந்திய காங்கிரசுமே கலந்து செய்தனர். இதன் திறப்பு விழாவைபவத்திற்கு இந்தியாவிலிருந் து கர்மவீரர் காமராஜர் வர இருப்பதாக வீதி எங்கும் போஸ்ட்டர்கள் ஒட் டப்பட்டன. குறித்த நாளும் வந்தது. தோட்டத்தொழிலாளர்கள் நானு ஓயாவிற்கு படையெடுத்துவிட்டனர். நகரம் முழுவதும் வாழை, மாவி லைத் தோரணங்களுடன் காட்சியளித்தன.
காமராஜர் வரவேண்டிய புகையிரதம் காலை 10மணிக்கு வந்துவிடும் என்பதனால், நேரத்தோடு நகரப் பெண்டிர் கூட்டம் பூரண கும்பத்துடன் முன்னால் நிற்க நாதஸ்வர மேளம், கும்மியடிக்கும் பெண்டிர், கோலாட் டம், கரகாட்டம், பொய்க்கால் புரவி போன்ற மலையக மக்களின் கலாச் சாரத்தோடு புகையிரதநிலையத்தில் நிற்க ,புகையிரதமும் வந்துவிட காமராஜரை அழத்துவர போனவர்கள் சிறிது நேரத்தில் வாடிய முகங்களுடன் வந்து அவர் வரவில்லை' என்றார்கள். அனைவருமே சோர்ந்து விழா மேடைக்கு வந்துவிட, வரவேற்பாளரோ ,ஒலிபெருக்கியின் முன் னால் "மிகவும் தொலைவிலிருந்தெல்லாம் எமது பெருந்த தலைவரை காண வந்த தொழிலாளர் சகோதரர்களே நகர மக்களே , ஏதோ துரதிஸ்ட வசமாக நம் தலை........."என்றவர் மேலும் பேச முடியாது தூரத்தே தமது பார்வையை நிலைகுத்தி நின்றார். பின் உணர்ச்சி மேலிட அதோ அய்யா இருக்கிறார்..." என்று கூறியபடி மேடையிலிருந்து கீழே ஒருவர் மீது குதித்துவிட ஒரேஅமளி துமிளியாகவிட்டது.
நடந்தது இதுதான்.அவரோ மிகவும் எளிமையாக ஒரு மஞ்சள் பையை கைகளில் வைத்தபடி வந்தார்.அவரை அழைத்துவர சென்றவர்களுக்கு அவரைத் தெரியாது ,அதனால் யாரோ நாட்டு புறம் என வந்துவிட்டார்கள் இதுதான் நடந்தது. பின்பு மறுபடியம் அவரை அழைத்துச் சென்று பழைய தபாற்கந்தோர் இருந்த இடத்திலிருந்து நாதஸ்வர மேளத்துடன் அழைத்து வந்துள்ளனர்.
இந்நிகழ்வில் சி.வி.வேலுப்பிள்ளையும் இருந்துள்ளார், காமராஜரை பார்க்க அவர் ,அவரது மைத்துனர்களான சி.எஸ்.காந்தியையம், சுந்த ரத்தையும் அழைத்து போயுள்ளார். இந்த விடயத்தை என்னிடம் கூறிய தோடுமட்டுமல்ல தமது கவிதையிலும் குறிப்பிட்டுள்ளார் சி.எஸ்.காந்தி அவர்கள்.
சுப்பையா ராஜசேகரன் அவர்களின் பதிவிலிருந்து நன்றியுடன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...