நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பூண்டுலோயா டன்சினன் மற்றும் சீன் தோட்டங்களில் மண்சரிவு ஆபத்தினை எதிர் நோக்கியுள்ள விரைவில் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாக தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்திலகராஜ் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்தில் மண்சரிவு பாதிப்புக்குள்ளான டன்சினன் தோட்டத்தின் அக்கரைமலை, தொழிற்சாலை பிரிவு, சீன் பழைய தோட்டம் ஆகிய பகுதிகளை நேற்றுமுன்தினம் பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜா மக்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இந்த பிரதேசத்தில் மண்சரிவு பாதிப்புக்கு உள்ளான இடங்களும் காணப்படுகின்றன. அக்கரைமலையில் 36, தொழிற்சாலை பிரிவில் 96, பழையதோட்ட மேற்பிரிவில் 8, கீழ்பிரிவில் 18 என அவசரமாக நிர்மாணிக்கப்படவேண்டிய வீட்டுத்தேவையுள்ளது. இந்த மக்கள் அதிக ஆபத்து நிலையை எதிர் கொண்டுள்ளனர்.
இந்திய வீடமைப்புத்திட்டத்தில் இந்த பகுதியில் வீடமைப்பதற்கான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பலமுறை இந்திய வீடமைப்புத் திட்டம் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்ப்பட்டபோதும் அது நடைபெறவில்லை. மக்கள் அதிக ஆபத்து நிலையை எதிர் நோக்கியுள்ளனர்.தொடர்ந்தும் தாங்கள் இந்திய வீட்டுத்திட்டத்தை நம்பியிருக்கத் தயாரில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்தனர்.எனவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் உட்டினயான கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டுவந்து அவசர தேவையான 160 வீடுகளையும் அமைச்சின் நிதியீட்டத்தில் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...