ராஜலிங்கபுரம்; திறப்பு விழாவில் எம.திலகராஜ் எம்.பி
கே.ராஜலிங்கம் |
மலைநாட்டு பதிய கிராமஙகள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் பதவியேற்றபின்னர்; மலையகத்தில் மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் கிடந்த வரலாறு மீளவும் நினைவுபடுத்தப்பட்டு வருகின்றது. புசல்லாவ பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த கல்விமானும் முன்னாள் நாடாளுமனற உறுப்பினருமான அமரர் கே.ராஜலிங்கம் அவர்களின் பெயரில் புசல்லாவை சோகம தோட்ட வீடைமப்புத்திட்டத்திற்கு அமையப்பெற்றிருப்பது அதற்கான சான்றாகும் என தொழிலாளர் தேசிய முன்னணியின்p பொதுச் செயலாளரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
புசல்லாவை சோகம தோட்டத்தில் மண்சரவின் காரணமாக வீடுகள் இன்றி அவதியுற்ற 21 தொழிலாளர் குடும்பங்களுக்கு புதிய தனிவீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கருத்து தெரிவிக்கையில் புசல்லாவை பிரதேசம் எனது சொந்த பிரதேசமான கொத்மலை பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள பிரதேசமாகும். இந்த வழியாக போகும் போது எனது குழந்தைகள் ஏன் இந்த தோட்டத்துக்கு சோகம என்று பெயர் வந்ததுஇ இங்குள்ள மக்கள் சோகமாக இருப்பார்களா என கேள்வி எழுப்புவார்கள். குழந்தைகள் வெகுளியாக கேட்டாலும் இங்கு ஒரு சோகம் இருந்தது. கடந்த 14 வருடங்களாக மண்சரிவு ஆபத்தினால் பாதிப்புற்ற இந்த தோட்ட மக்களுக்கு வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் நான் இன்று என் குழந்தைகளிடம் சொல்வதற்கு சந்தோஷமான செய்தி ஒன்று இருக்கிறது. அதுதான் சோகம தோட்ட மக்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் முன்னெடுப்பில் 21 புதிய வீடுகள் கையளிக்கப்பட்டு அந்த மக்கள் சந்தோஷமாக இருக்கின்றார்கள் என்கின்ற செய்தியாகும்.
இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தி இந்த வீடமைப்புத்திட்டத்திற்கு ‘ராஜலிங்கபுரம்’ என பெயரிட்டுள்ளiமாகும். மலைநாட்டில் தோட்டங்கள் என்பதற்கு பதிலாக புதிய கிராமங்களை அமைக்கும் அமைச்சர் திகாம்பரத்தின் தொலைநோக்கு சிந்தனை இன்று நடைமுறையாகிவருகிறது. அதன் ஒரு கட்டமே இன்று புசல்லாவையயில் இடம்பெறுகிறது. அமரர் கே.ராஜலிங்கம் மலையகம் கண்ட மகான். மலையக காந்தி எனப் போற்றப்பட்டவர். புசல்லாவை சரஸ்வதி கல்லூரியை ஸ்தாபித்தவர். அந்த கல்லூரியின் முதல் அதிபரும் அவரே. இந்த கல்லுரரியை அமைப்பதற்காக தமது குடும்ப சொத்துக்களை விற்றவர். இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆக மாற்றப்பட்டபோது அதன் ஸ்தாபகத் தலைவரும் அவரே. அதேபோல 1947 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
இந்த வரலாறுகள் திட்டமிடப்பட்டு மறைக்கப்பட்டன. மலையக மக்களின் உண்மை வரலாறுகள் மறைக்கப்பட்டன. இன்று உருவாகும் மலையக பதிய கிராமங்களுக்கு நமது வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டுவதன் மூலம் மறைக்கப்பட்ட அத்தகைய வiலாறுகள் மீளவும் நினைவுருத்தப்படுகின்றன. இந்த கிராம மக்கள் இனி தமது முகவரிகளை எழுதும்போது இராஜலிங்கபுரம்இ புசல்லாவை என எழுதி இங்கே மறைக்கப்பட்ட வரலாற்றை மாற்ற முனைதல் வேண்டும். அமரர் கே.ராஜலிங்கம் அவர்களின் பெயரை நிலைத்திருக்கச் செய்யும் பாரிய பொறுப்பு இந்த புசல்லாவை மக்களுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்த வீடமைப்புத்திட்ட திறப்பு விழாவில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்இ மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்இ ஆர். ராஜாராம் இ எஸ்.ராஜரட்ணம்இ ட்ரஸ்ட் நிறுவனத் தலைவர் வீ.புத்திரசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அமரர் கே.ராஜலிங்கம் சமாதிக்கு சென்ற அமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் அன்னாருக்கு அஞ்சலி செலுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...