அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
புதிய நல்லாட்சி அரசாங்கம் முன்வைத்திருக்கும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்திலே கலந்துகொண்டு எனது கருத்துக்களை வழங்குவதற்கு வாய்ப்பளித்தமைக்கு கௌரவ சபாநாயகர் அவர்களுக்கு முதலில் நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நவம்பர் 3ம் திகதி வரவுசெலவுத்திட்டத்திற்கு முன்னதான மதிப்பீட்டு சமர்ப்பிப்புக்களின்போது இந்த உச்ச சபையிலே எனது கன்னியுரையை ஆற்றியபோது நான் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக மக்களுக்காக வரவு - செலவு திட்டத்திலே நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படல் வேண்டும்இ தேசிய திட்டமிடலில் எமது பெருந்தோட்ட மக்கள் இணைத்துக் கொள்ளப்படுதல் வேண்டும் போன்ற எனது எதிரப்;பார்ப்புகளை வெளியிட்டிருந்தேன். அந்த எதிரப்;பார்ப்புகளை ஓரளவு பூர்த்தி செய்யும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டத்திலே நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கும் கௌரவ நிதி அமைச்சர ரவி கருணாநாயக்கா அவர்களுக்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
முன்னதாக நவம்பர் 5ம் திகதி இந்த உச்ச சபையிலே புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைவிளக்க உரையை ஆற்றிய மாண்புமிகு பிரதமர் அவர்கள் பெருந்தோட்ட பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கவும் வீடுகளை அமைப்பதற்குமான அறிவிப்புகளைச் செய்திருந்தார் அந்த அறிவிப்புகள் இந்த வரவு செலவுத்திட்டத்திலே பிரதிபலிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே தேசிய திட்டமிடல் நிகழ்ச்சித்திட்டத்தில் எமது மக்கள் உள்வாங்கப்படுகின்றமைக்கான அறிகுறியாக நாம் இதனைக் கொள்ளலாம். இதற்காக கௌரவ பிரதமர் அவர்களுக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
இந்த வரவு செலவுத்திட்டத்தில் நான் மூன்று அம்சங்களையும் சமநிலையில் அவதானிக்கிறேன். ஒன்று மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணம் (சுநடநைக)இ இரண்டு அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட திட்டங்கள் (னுநஎநடழிஅநவெ)இ மூன்றாவதாக நடைமுறையில் உள்ள திட்டங்களை மீளமைக்கும் (சுநகழசஅள) ஏற்பாடுகள்.
முதலாவதாக கடந்த காலங்களில் தொடர்ச்சியான விலை உயர்வினால் பாதிப்புற்ற நமது நாட்டின் அடித்தட்டு மக்களுக்கு அரிசிஇ சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமையை வரவேற்கின்றேன். இது ஓரளவுக்கு குடும்பத்தலைவிகளின் சுமையை குறைக்கும் ஏற்பாடுகள் ஆகும். பொருளாதார ரீதியில் மிகவும் தாழ்ந்த மட்டத்தில் இருந்தும் பெருந்தோட்ட மக்களும் இந்த நிவாரணங்களினால் பயனடைவர்.
இரண்டாவதாக அபிவிருத்தி குறித்த நீண்டகால குறுங்காலத் திட்டங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்திலே முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணியுரிமைஇ வீடமைப்புஇ கல்வி வசதி வாய்ப்புகளை அதிகரித்தல்இ கைத்தொழில் பேட்டைகள் அமைத்தல் போன்றனவற்றைக் குறிப்பிடலாம்.
இதில் காணியுரிமை தொடர்பில் அரசாங்கம் கொள்கையளவில் வெளியிட்டிருக்கும் விடயங்கள் நடைமுறைக்கு வரும்போது எவ்வாறு அது கையாளப்படப்போகின்றது என்பது குறித்து அவதானம் தேவை என நினைக்கிறேன். ‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம்; கொடுக்காத நிலையாக’ அரசாங்கம் பல திட்டங்களை அறிவித்தாலும் அதிகாரிகள் மட்டத்தில் அது தட்டிக்கழிக்கப்படும் பல நிகழ்வுகளை நாங்கள் நாட்டிலே அவதானிக்கின்றோம்.
பொது நிர்வாகம் தொடர்பாக தனிநபர் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்ட வேளையிலும் இது தொடர்பாக நான் இந்த உச்சசபையிலே குறிப்பிட்டிருந்தேன்.
குறிப்பாக அரச பொது நிர்வாகப் பொறிமுறை முழுமையாக அமுலில் இல்லாத மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளிலே இந்த அதிகாரிகளின் கவனயீனமும் தட்டிக்கழிப்பும் அதிகம் இடம்பெற்று வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும் என நினைக்கிறேன்.
அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
மீரியபெத்தை வீடமைப்புத்திட்டத்திலே இதுதான் நடைபெற்றது. அரசாங்கம் இந்த திட்டத்தை அமுல்படுத்த நிதி ஒதுக்கீடுகளை செய்தபோதும் பொருத்தமற்றவகையில் அமுல்படுத்தும் அரச நிறுவனங்களைத் தெரிவு செய்தமையும்இ அதிகாரிகள் தங்களது அதிகார எல்லைகள்இ நிர்வாக ஒழுங்குகள் என காரணம் காட்டி தாமதம் ஆக்குவதன் காரணமாகஇ அரசாங்கம் அறிவிப்புகளைச் செய்கின்றபோதும் அந்த மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்று சேர்வதில் தாமதங்கள் தடைகள் ஏற்படுகின்றன. இறுதியில் மக்களுக்கு நிவாரணங்கள்இ உரிமைகளை வழங்கியும் அரசாங்கத்தின் மீது களங்கத்தையே ஏற்படுத்தும் அம்சமாகிவிடுகின்றது.
தோட்டங்களை புதிய கிராமங்களாக மாற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் மலையக மக்களுக்கு ஏழு பேர்ச் காணி வழங்கும் ‘பசுமை பூமி’ திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அரசியல் கோரிக்கையாக முன்வைத்து எமது தொழிலாளர் தேசிய முன்னணி கடந்த ஜனாதிபதி தேர்தலிலே பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தது. அதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கினார். அவருக்கு இந்த சந்தர்ப்பத்திலே நன்றி செலுத்துகின்ற அதேவேளைஇ இந்த திட்டத்தை மக்களுக்கு கையளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை நான் இந்த உச்ச சபையிலே எடுத்துச் சொல்லும் கடப்பாட்டைக் கொண்டுள்ளேன்.
காணி
அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
மலையக மக்களுக்கு வழங்கப்படும் ஏழு பேர்ச் காணியுறுதிக்கு ‘பசுமைபூமி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாகவிருந்த அப்போதைய ராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் அவர்களையும் நாம் நன்றியுடன் இந்த சபையிலே நினைவு கூரவேண்டியவர்களாக உள்ளோம். அவர் இப்போது நம்மிடையே இல்லை. அவர் பெருந்தோட்ட ராஜாங்க அமைச்சராகவிருந்தபோது இந்த ‘பசுமை பூமி’ காணியுறுதி பத்திரங்களை மக்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்ச்சியை ஒழுங்கமைக்க அதிக பிரயத்தனம் மேற்கொண்டார். அந்த பணிகளின் போது பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரத்தின் இணைப்பு செயலாளராக பணியாற்றிய நானும் பங்கெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அதிகாரிகள் மட்டத்தில் நிலவிய பல்வேறு சிக்கல்களை இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
இந்த நாட்டில் பெருந்தோட்டங்கள் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 1972 ஆம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டம் கொண்டுவரப்படும் வரை அவை பிரித்தானியர் வசமே இருந்து வந்துள்ளது. 1972ம் ஆண்டு பெருந்தோட்டக் காணிகள் சுவீகரிக்கப்பட்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தக்காணிகளில் பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஜனவசம எனப்படுகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திசபை மற்றும் எஸ் பி சி எனப்படுகின்ற அரச பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டது.
இதுவே பின்னாளில் 1992ஆம் ஆண்டு மீண்டும் தனியார் மயப்படுத்தப்பட்டு பிராந்திய பெருந்தோட்டக்கம்பனிகளுக்கு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டது. இதன்போது ஜனவசம எனப்படுகின்ற மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் எஸ்.பி.சி எனப்படுகின்ற அரச பெருந்தோட்டயாக்கம் ஆகியவற்றினால் பிராந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளில் இருந்தே பசுமைபூமி திட்டத்தின் கீழ் 7 பேர்ச் காணி வழங்கப்படுகின்றது.
இதனை பிராந்திய கம்பனிகளிடம் கோரிக்கை விடுத்தே நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆனாலும் இந்த காணியின் உரிமை பிராந்திய கம்பனிகளுக்கு சொந்தமானது இல்லை என்பது தெளிவு. அதேநேரம் இந்த தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபை அல்லது அரச பெருந்தோட்டயாக்கத்திற்காக இந்த காணிகளுக்கு உறுதி வழங்கும் அதிகாரம் இருக்கின்றது அல்லது காணி சீர்திருத்த ஆணைக்குழு வசம் உள்ளதா? என்பதுபற்றிய தெளிவு இல்லை.
இத்தகைய குளறுபடிகளுக்கு மத்தியிலேயே ‘பசுமை பூமி’ காணிகள் வழங்கப்படுகின்றன. இது ஒரு பூரணமான காணி உறுதி இல்லை என்கின்ற விமர்சனம் உண்டு. அது உண்மையும் கூட. இது ஒரு காணியுரித்துக்கான ஏற்பாடு மாத்திரமே. (Pசழஎளைழையெட னநநன). எனவே இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காணியுறுதிகளுக்கு முழுமையான காணியுறுதியினை (ஊடநயச வுவைவடந) வழங்கும் அறிவுறுத்தல்களை அரசாங்கம் வழங்க வேண்டும். பிரதமரின் அறிவிப்பு அர்த்தமுள்ளதாக மாற்றப்படல் வேண்டும்.
அதேபோல 10 வருடத்திற்கு மேலாக குடியிருந்த வீடுகள் சொந்தமாக்கப்பட்டு அதற்கு உறுதிகள் வழங்கும் பிரதமரின் அறிவிப்பும் வரவு செலவுத்திட்டத்தின் 229 வது பந்தியிலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை லயன்களை சொந்தமாக்குவதாக அர்த்தப்படுத்திவிடக்கூடாது.
மலையகத் தோட்டங்களில் லயன் வாழ்க்கை முறை இல்லாதொழிக்கப்படல் வேண்டும். தனிவீட்டுத் திட்டங்களை புதிய கிராமங்களை உருவாக்குவதே எமது இலக்கு. அதற்கு அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.
எனவே இங்கு லயன்கள் சொந்தமாக்கப்படல் இங்கு நிகழக் கூடாது. அவை அழித்து இல்லாமல் ஆக்கப்பட வேண்டிய தேசத்தின் அவமான சின்னங்கள் என்பதை நான் கூறி வைக்க விரும்புகின்றேன்.
அதேநேரம் மலையகத் தோட்டங்களில் ஏற்கனவே பல தனிவீடுகள் வௌ;வேறு சந்தர்ப்பத்தில் அமைக்கப்பட்டவை உள்ளன. அவற்றுக்கான 'உரிமம்" வழங்கப்படல் வேண்டும். பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட பெரியாங்கங்காணிகள் என அழைக்கக்கப்பட்ட கங்காணிகளின் தனிவீடுகள் முதல் அமைச்சர் பெ.சந்திரசேகரன் தோட்டப்பகுதி வீடமைப்ப அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த காலம் வரை ஏறக்குறைய முப்பதாயிரம் தனிவீடுகள் உண்டு அவை சொந்தமாக்கப்படல் வேண்டும்.
புசல்லாவை சோகம தோட்டத்தில் அமரர் கே.ராஜலிங்கம் வாழ்ந்த வீடு அமைந்துள்ளது. அவர் இந்த உச்ச சபையிலே 1947 ஆம் ஆண்டு அங்கம் வகித்தவர். ஆனால்இ அவரது புசல்லாவை வீட்டுக்கு இன்றும் உரித்து இல்லை. அதேபோல நான் பிறந்து வளர்ந்த மடகொம்பரை தோட்டத்தில் இருந்து 1947 ஆம் ஆண்டு இந்த உச்ச சபையிலே உறுப்பினராகவிருந்த சி.வி வேலுப்பிள்ளை அவர்கள் வாழ்ந்த வீட்டுக்கு எவ்வித உரிமை பத்திரமும் இல்லை. அதேநேரம் அந்த வீடு திட்டமிட்டு தோட்ட நிர்வாகத்தினால் சுவீகரிக்கப்பட்டது. அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம் அல்ல ஒரு புகழ்பெற்ற கவிஞர்இ தொழிற்சங்கவாதிஇ சிறந்த சமூக செயற்பாட்டாளர். ஆனால் அவர் வாழந்த வீடுகள் இது போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வீடுகள் உரிமை வழங்கி அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
இதுபோன்ற தோட்டங்களில் பல வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என பெருந்தோட்ட அமைச்சினால் கடிதங்கள் அனுப்பப்பட்டு மக்கள் எமக்கு பல முறையீடுகளைச் செய்துள்ளார்கள். அவர்கள் தற்போது தொழிலாளர்கள் அல்லாதபோதும் முன்பு அந்த தோட்டங்களில் பணி செய்தவர்கள். இந்த நாட்டுக்காக உழைப்பினால் பங்களிப்பு வழங்கியவர்கள். இவர்களது பணி கௌரவிக்கப்படல் வேண்டும்.
அதேபோல தோட்டத் தொழிலாளர்களைப் போன்று தோட்ட சேவையாளர்கள் (நுளவயவந ளுவயகக) நிலைமையும் காணி மற்றும் வீடு விடயத்தில் மிகவும் சிக்கலாக மாறியுள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக தோட்டங்களில் பணியாற்றிவிட்டு ஓய்வுபெறும்போது வீடற்றவர்களாக வீதியில் நிற்கிறார்கள். அவர்களது உழைப்பினால் சேமித்த சேமலாப நிதித் தொகையில் வெளியிடங்களில் காணிகளை வாங்கினாலும் வீடு கட்ட அவர்களிடம் நிதி இல்லை. எனவே அவர்களின் சேமிப்பில் அவர்கள் வீடுகளை அமைத்துக்கொள்ளும் வண்ணம் அவர்களுக்கும் குறைந்த பட்சம் காணிகள் வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என நான் கோரிக்கை வைக்கின்றேன்.
அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
தனி வீடு
அதேபோல இந்த வரவு செலவுத்திட்டதில் தோட்டப்பகுதி வீடமைப்பு மற்றும் புதிய கிராமங்களை அமைக்கவென 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு விஷேட அறிவிப்பாக வரவு செலவுத்திட்ட உரையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது நல்லாட்சியை அமைக்க ஒட்டுமொத்தமாக திரண்டு வாக்களித்த மலையக மக்களளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்த அறிவிப்புக்காக நிதி அமைச்சர் ரவி கருணா நாயக்க அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அதேநேரம் லயன் வாழ்க்கை முறையை இல்லாமல் ஆக்க ஏறக்குறைய 160,000 தனி வீடுகள் தேவை என வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ட்ரஸ்ட் எனப்படும் பெருந்தோட்ட மனிதவள அபவிருத்தி நிதியத் தகவல்கள் படி 177,518 வீடுகள்; தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டு வரைபில் தொகுதி 2,ன் 140 வது அத்தியாத்திலே இந்த புள்ளிவிபரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. என்னைப் பொறுத்தவரை இது தற்போதைய தொழிலாளர்களுக்கு மட்டுமான வீடுகளின் தேவையாகும். லயன் முறை இல்லாமலாக்க ஏறக்குறைய 250இ000 வீடுகள் தேவை என்பது எனது கருத்து. இது பற்றிய சரியான மதிப்பீடுகள் சுயாதீனமாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.
கிடைக்கக் கூடிய தகவல் அடிப்படையில் 160,000 வீடுகளை அமைக்க பத்து வருடங்கள் எடுத்துக்கொண்டாலும் குறைந்தது வருடமொன்றுக்கு 16,000 வீடுகள் அமைக்கப்படல் வேண்டும். எனவே ஒதுக்கப்படடிருக்கும் 1000 மில்லியன் அடுத்த ஆண்டில் 1600 வீடுகளைத் தானும் அமைக்கப் போதுமானதன்று. நல்லெண்ண அடிப்படையில் இந்த ஒதுக்கீட்டினை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றோம். அதே நேரம் தேவைப்பாடுகள் அடிப்படையில் இது எதிர்வரும் வரவு செலவுத்திட்டங்களில் அதிகரிக்கப்படல் வேண்டும் எனும் கோரிக்கையையும் நான் இங்கு முன்மொழிகின்றேன்.
மலையக புதிய கிராமங்களின் அபிவிருத்திக்கான தேசிய நடவடிக்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பத்தாண்டு திட்டத்தைஇ மலைநாட்டு புதிய கிராமங்கள்இ உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்திக்கான கௌரவ அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பித்த வேளை அதனை அவதானித்த அதி மேதகு ஜனாதிபதி அவர்கள் அதனை ஐந்தாண்டு திட்டமாக துரிதப்படுத்துமாறு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் இந்த நல்லெண்ணத்துக்கு மலையக மக்களாகிய நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக உள்ளோம். அவருக்காக வாக்களித்த மக்களை மனங்கொண்டு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தலைச் செய்துள்ளார். அதேநேரம் அதனை நடைமுறைப்படுத்தவும் நிதியீட்டங்களைச் செய்து ஒத்துழைப்பு வழங்குவார் என நாங்கள் பூரண நம்பிக்கைக் கொண்டுள்ளோம். அப்போதுதான் எங்களது எதிர்பார்ப்பும் மேதக ஜனாதிபதி அவர்களின் ஆசையும் நிறைவேறும்.
அதேநேரம் அரச தனியார் துறை ஊழியர்களுக்கு 150இ000 வீடுகளையும் சேரி வாழ் மக்களுக்கு 100இ000 லட்சம் வீடுகளையும் அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவை மன மகிழ்ச்சியோடு வரவேற்றப்படவேண்டிய திட்டங்களாகும்.
இந்த சந்தர்ப்பத்தில் மலையகப் பெருந்தோட்டங்களில் இருந்து வெளியேறி வேறு சுய தொழில்களை செய்துகொண்டு நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு கடன் அடிப்படையில் வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் முன்வருதல் வேண்டும்.
சேரிப்புறங்கள் என்று வரும்போது நகர சுத்தித் தொழில்களை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களை நாம் மறந்து விடக்கூடாது. நமது நகரங்களை அழகுபடுத்த சுத்தமாக வைத்திருக்க உதவும் அந்த மக்களின் வாழ்விடம் அழகாக இல்லை. சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் இந்த மக்களின் வாழ்க்கை நாகரிகமானதாக மாற்றப்படல் வேண்டும். அண்மையில் கண்டி மகியாவை பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்களின் வீட்டு கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர். கண்டியில் மாத்திரமல்ல கொழும்புஇ குருநாகல்இ ஹட்டன்இ பதுளை பண்டாரவளை பல்வேறு நகரங்களில் இந்திய வம்;சாவளியினரான இந்த மக்கள் கூட்டம் தொடர்ந்தும் கவனிப்பாரற்று கிடக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களைப் போன்ற இந்த மக்களிடம் தொழிற்சங்க கலாசாரம் இல்லை. இந்த பாவப்பட்ட மக்களுக்காக சேரிகள் புனரமைப்புத்திட்டத்தில் வீடுகள் வழங்கப்படல் வேண்டும் எனவும் கேரிக்கை முன்வைக்கின்றேன்.
கல்வி
அவைக்கு தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே…
இந்த வரவு செலவுதிட்டத்தில் மலையக மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இன்னுமொரு முக்கியமான அறிவிப்பு பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையாகும்.
இவ்வாறு பெருந்தோட்டப்பகுதி பாடசாலகளுக்கு விஷேடமாக நிதி ஒதுக்கீட்டினைக் கோருவதற்கு காரணம் தோட்டப்பாடசாலைகள் 1980களின் பின்னரே அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெறத் தொடங்கின. ஏனக்கு நினைவு இருக்கிறது நான் முதன் முதலில் சேர்ந்த பாடசாலை தோட்டப்பாடசாலை. புpன்னர்தான் நாங்கள் அரச பாடசாலைகளளுக்கு மாற்றலாகி சென்றோம். தோட்டங்களின் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட தோட்டப் பாடசாலைகள் அனைத்தும் இன்று அரசாங்க பாடசாலைகளாக மாற்றம் பெற்றுள்ளன. இன்று தோட்டப்பகுதிகளிலே 100மூ அரசாங்க பங்களிப்பு உள்ள துறையாக நாம் கல்வித் துறையை மாத்திரமே கொள்ள முடியும். மற்ற எல்லா விடயத்திலும் நாம் தனியாரிடம் தங்கியிருக்கும் நிலை உள்ளது.
அதனை தோட்டப்பகுதி பாடசாலைகள் தொடர்பில் மாகாணசபை கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய வே.ராதாகிருஷ்ணன் அவர்களின் பொறுப்பில் வழங்குவதன் ஊடாக நாட்டின் ஏனைய பாடசாலைகளின் தரத்திற்கு இந்த மலையக பிரதேச பாடசாலைகளைக் கொண்டு வர முடியும்.
நுவரெலியா மாவட்டத்தில் குறைந்தது ஐந்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயரடத்தப்படல் வேண்டும். குறுகிய அரசியல் லாப நோக்கத்தோடு மாகாணசபை மட்டத்திற்குள் மாத்திரம் பாடசாலைகளை வைத்;திருக்ககாமல் மலையக மாணவர்களையும் தேசிய மட்டத்திலான வாய்ப்புகளையும் சலுகைகளையும் பெறும் வகையிலான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்துவதற்கு முன்பு வைக்கப்பட்ட கோரிக்கையை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றேன்.
இந்த முறை வரவு செலவு திட்ட உரையின் 313 வது பந்தியில் 250 மில்லியன் ரூபா 25 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்கு என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் 314 வது பந்தி நிரந்தர ஆய்வு கூட வசதிகள் அற்ற பாடசாலைகள் மற்றும் விஞ்ஞான கல்வியை மேம்படுத்த 450 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவ செல்வுத்திட்ட உரை அச்சிடும்போது அவை இரண்டு அம்சங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் இவையிரண்டும் பெருந்தோட்ட பகுதி சாரந்த பாடசாலைகளுக்கு உரியது என நான் எண்ணுகிறேன். ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்டத்தில் ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணணன் இதனை முன்னெடுத்துள்ளார். ஆக மொத்தமாக 700 மில்லியன் தோட்டப்பகுதி பாடசாலைகளுக்கு செல்வதை நிதி அமைச்சு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். குழுநிலை விவாதங்களின்போது இந்த நிலைமை சரி செய்யப்படல் வேண்டும்.
அதேநேரம் மலையகப் பல்கலைக்கழகம் ஒன்று குறித்து மலையக கல்வியாளர்கள் சமூக அக்கறையாளர்களால் அதிமாகப் பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்களின் ஆட்சிக்காலப்பகுதியில் சிறிது காலம் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பணியாற்றிய கௌரவ அமைச்சர் டிலான் பேரேரா அவர்கள் மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றிற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயார் செய்திருந்தார். துரதிஷ்டவசமாக அமைச்சு பொறுப்பு கைமாறியதன் காரணமாக அவருக்கு அதனை சமர்ப்பிக்க முடியாது போனது.
நாங்கள் மக்கள் பிரதிநிதிகள் கல்வியாளர்களுடன் இணைந்து மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை தாபிப்பதற்கான சாதிய வளக்கூற்று அறிக்கையை மீளவும் செம்மைப்படுத்த முயற்சித்து வருகின்றோம். எனவே எதிர்வரும் காலப்பகுயிதியில் இதில் காட்டப்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப மலையகப் பல்கலைக்கழகம் ஒன்றை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என கௌரவ நிதியமைச்சர் அவர்களை வேண்டிக்கொள்கின்றேன்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் மகாபொல பல்கலைக்கழகம்இ கிளிநொச்சியில் பொறியியல் பீடமொன்றையும் மற்றும் வவுனியாவில் விவசாய பீடமொன்றையும் உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு இதனைப் பெற்றுக்கொடுப்பதையிட்டு நாங்கள் பெரு மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.
அதேபோல இதன் ஆரம்ப கட்டமாக குறைந்த பட்சம் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை முதலில் தாபிக்க முடியும். இந்த வரவு செலவுத்திட்டத்தின் 340 வது பந்தியிலே ஏற்கனவே ஐந்து பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ள நிலையில்; பட்டன்கல எனும் இடத்தில் இன்னுமொரு பல்கலைக்கழக கல்லூரியை அமைக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
மலையகப்பிரதேசத்திலும் குறைந்த பட்சம் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்கும் காலம் கனிந்துள்ளது என நினைக்கிறோம். கொத்மலைப் பிரதேச சபைக்கு உட்பட்ட அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் இயங்கும் கொலப்பத்தன தோட்டத்திலே இதற்காக ஐந்து ஏக்கர் காணியை கல்வி ராஜாங்க அமைச்சர் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படல் வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.
அவைக்கு தலைமை தாங்கும் கௌரவ உறுப்பினர் அவர்களே…
இங்கு நான் உரையாற்றிய விடயங்கள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் மற்றும் அபிவருத்தி அம்சங்கள் மாத்திரமே. அதேநேரம் மீளமைப்புப் பக்கத்தில் பெருந்தோட்டங்கள் மேலும் 50 வருடங்களுக்கு பிராந்திய கம்பனிகளுக்கு ஒப்படைத்தல் மற்றும் மாற்றுப்பயிரிடல்இ டீPழு முறை அறிமுகம் போன்ற விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அது தொடர்பாக விரிவாக பேச வேண்டியிருப்பதால் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்குரிய ஒதுக்கீட்டு நேர குழு விவாதங்களின்போது எனக்கு அந்த வாய்ப்பினை வழங்குவீர்கள் எனக் கேட்டு அளிக்கப்பட்ட வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...