ஐக்கிய அமெரிக்காவின் நிவ்யொக் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமைக் காரியாலத்தில் நடைபெறவுள்ள (ஐ.நா) “நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி மற்றும் மில்லினியம் தொலைநோக்குகள்” பற்றிய செயல் அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக இலங்கையிலிருந்து மூன்று பிரமுகர்கள் அமெரிக்கா பயணமாகியுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. திலகராஜ், சர்வதேச விவசாய தொழிலாளர் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் பி.பி. சிவப்பிரகாசம், ஆசிய கிராமிய பெண்கள் வலையமைப்பின் செயற்குழு உறுப்பினர் திருமதி. பி. லோகேஸ்வரி ஆகியோர் ஐக்கிய அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளனர்.
மேற்படி நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி பற்றிய செயல் அமர்வுகள் செப்டம்பர் மாதம் 21ஆரம்பமாகி தொடர்ந்து எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நிவ்யொக் நகர், ஐ.நா சபை மற்றும் கொலம்பிய பல்கலைக்கழக வளாகம் என்பவற்றிலே நடைபெறவுள்ளது.
இலங்கை மக்களின் அபிவிருத்தி, மலையக மக்களின் அபிவிருத்தி நியமங்கள், ஆசிய நாடுகளில் தொழிலாளர் அபிவிருத்தி நியமங்கள், இலக்குகள் என்ற விடயங்கள் சம்பந்தமாக பி.பி. சிவப்பிரகாசம், ம. திலகராஜ், திருமதி. பி. லோகேஸ்வரி என்போர் கருத்துரை வழங்குவார்கள்.
நன்றி - tamilcnn
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...