இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் பலாங்கொடை கனகநாயகம் தமிழ் மத்திய கல்லூரியில் அதிபர் தரம் 111 போட்டிப் பரீட்சைக்கான இலவசக் கருத்தரங்கைஇன்று ஒழுங்கமைத்திருந்தனர். இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்வி. ஆர். கலாரமணி கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில் ” பலாங்கொடை பிரதேசத்தில் கல்வித் துறையில் வாண்மைத்துவ அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் இத்துறையில் நிபுணத்துவம் மிக்கவர்கள் அர்பணிப்புணர்வுடன் இங்கு வந்து இலவசக் கருத்தரங்குகளை நடாத்துவது வரவேற்றக்கத்தக்கது. இவ்வாறான செயலமர்வுகளை ஒழுங்கமைத்த இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு தொடர்ந்து அவா்களது பணி தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்“ என்றார்.
சம்மேளனத்தின் நோக்கு, அதன் இயங்குதளம் குறித்து உரையாற்றிய பொதுச் செயலாளர் ஆர். சங்கர மணிவண்ணன் தமது உரையில்”தனிநபர்களின் தனித்துவங்களையும் வேறுப்பாடுகளையும் கருத்திற் கொண்டு பொது இலக்கொன்றிக்காக ஒன்று சேர்ப்பது எமது இலக்காகும். இவ்வமைப்பு ஜனநாயக தன்மைக் கொண்ட அமைப்பாகும். நாங்கள் நாடு தழுவிய கல்வி அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்றோம்"எனக் குறிப்பிட்டார்.
வளவாளர்களாக தேசிய கல்வி நிறுவக தவைமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதிநேர முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். அதிபர்கள் சார்பில் திருவாளர்கள் தம்பிராஜ், எம். கணேசராஜ், எம். வேல்முருகன் ஆகியோரும் கலந்துக் காண்டனர். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தே. கணேசன்,பாலாங்கொடை பிரதேச இணைப்பாளர் பி. பிரதீபன், ஆகியோர் ஒழுங்கமைத்திருந்தனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...