வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் மலையகம் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியன இணைந்து இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூன்று கட்சிகளுக்குமிடையில் கடந்த 3 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான பி.திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் மற்றும் மலை-யக மக்கள் முன்னணி அரசியல் பிரிவு தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சரு-மான வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவராக ஜனநாயக மக்கள் முன்-னணி தலைவரும் பிரதித் தலைவர்களாக தொழிலாளர் தேசிய சங்கத் தலைவரும் அமைச்சருமான பி. திகாம்பரம் மற்றும் மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவுத் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் தெரிவாகினர். கூட்டணியின் பொதுச் செயலாளராக மலைய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ. லோறன்ஸ் நியமிக்கப்பட்டார்.
இந்தக் கூட்டணி, தேர்தல் காலத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு உருவாக்-கப்பட்டதல்ல என்றும் வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் வாழும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதென்றும் கூட்டணியின் தலைவர்கள் கூறினர்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மலையகம் உட்பட ஏனைய பிரதேசங்களில் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் உரி-மைகளையும் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தக் கூட்டணி செயற்-படும் எனவும் தெரிவித்தனர்.
எவ்வாறெனினும் இந்தக் கூட்டணியில் மூன்று கட்சிகள் மட்டுமே இணைக்கப்-பட்டுள்ளன. மலையகத்தைப் பொறுத்தவரையில் மேலும் பல கட்சிகள், தொழிற்சங்-கங்கள் இருக்கின்றன. அந்தக் கட்சிகள் இக்கூட்டணியில் இணைத்துக் கொள்ளப்பட-வில்லை. அந்தக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா அல்லது அந்தக் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைந்து கொள்ள மறுப்பு தெரிவித்தனவா என்று தெரிய-வில்லை.
கடந்த சப்ரகமுவ மாகாண சபை தேர்தலின் போது சில மலையகக் கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. தேர்தல் முடிந்ததும் கூட்-டணி காணாமல் போனது. அவ்வாறானதொரு நிலைமை இந்தக் கூட்டணிக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
மலையகத்தைப் பொறுத்தவரையில் தொழிற்சங்கம் சார்ந்த அரசியல் கட்சிகளே காணப்படுகின்றன. அதாவது தொழிற்சங்கங்களே அரசியல் பங்கினையும் வகித்து வரு-கின்றன.
இன்றுவரை ஒருமுழுமையான அரசியல் கட்சி உருவாகவில்லை. அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்கனவே தவறவிடப்பட்டுள்ளன. மலையகத் தலைமைகள் இதைப் பற்றி சிந்திக்கவே இல்லை.
எனவே, தமிழ் முற்போக்குக் கூட்டணி அந்த தேசிய அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு முன்வருமானால் அது பெரிதும் வரவேற்கத்தக்க விடயமாக அமையும் அதுவே தற்போதைய மலையக மக்களின் தேவையுமாகும். அதனூடாகவே அரசியல் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...