இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் எதிர்வரும் அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சையை முன்னிட்டு பதுளை அல்-அதான் முஸ்லிம் மகா வத்தியாலயத்தில் இலவச செயலமர்வை நடாத்த தீர்மானித்துள்ளது. இந் நிகழ்வு எதிர்வரும் யூன் 20 ஆம் திகதி(சனிக் கிழமை) வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்விற்கு பதுளை வலய உதவிக் கல்வி பணிப்பாளர் திரு. வீ. கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்துக் கொள்வார். வளவாளா்களாக தேசிய கல்வி நிறுவக தலமைத்துவ வாண்மை அபிவிருத்தி நிலையத்தின் பகுதி முகாமைத்துவ ஆலோசகர் திரு. பி. ஆறுமுகம், உதவிக் கல்விப் பணிப்பாளரும் சம்மேளனத்தின் ஆலோசகருமான திரு. பி. ஈ. ஜி. சுரேந்திரன், கல்வி அமைச்சின் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள். செயலமர்வுக்கான ஏற்பாடுகளை சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் திரு. ஆர். சங்கரமணிவண்ணன், கல்விக் குழு தலைவர் எஸ்.குமார், தரண வெளிவாரி பட்ட பிரிவு நிறுவகத்தினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்..
முகப்பு »
» அதிபர் தரம் 111 க்கான போட்டிப் பரீட்சைக்கான இலவச செயலமர்வு- பதுளை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...