மனிதன் தனது சகல தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளும் இடமாக சூழலே காணப்படுகின்றது நம்மில் சிலர் சூழலின் முக்கியத்துவம் தெரியாது அதனை தனது சொந்த சுய நலபாவனைக்காக பல வழிகலிலும் சூரையாடி வருகின்றனர். சூூழலின் தரம் பேணப்பட வேண்டும் அப்போதே மனித குலம் உட்பட சகல ஜீவராசிகளும் தொடர்ச்சியான சீரான வாழ்வாதாரத்தை பேணமுடியும் ஆனால் இன்று சூழல் பல வழிகளிலும் தனது தரத்தை இழந்து வருகின்றது அதில் பெரும் பங்கு மனித நடவடிக்கையாலே ஏற்படுகின்றது என்று கூறலாம் சூழலின் தரம் பேணப்படுவது பற்றி அதிகம் கூறமுடியும் என்றாலும் மலையகத்தை பொறுத்தவரை சூழலே மனித வாழ்கை;கு மிகவும் உந்துசக்தியாக இருக்கின்றது மலைகள் ஆறுகள் வனங்கள், நீர் அருவிகள் பல இன உயிரினங்கள் விலை மதிப்பில்லா மூலிகைகள் மாணிக்கங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இது தொடர்பான விரிவான கட்டுரையை நாம் ஏற்கனவே பிரசுரித்திருந்தோம். தற்போது மலையகத்தின் மிக முக்கிய பகுதியாகவும் சூழலியல் நிபுணர்களால் பாதுகாக்கப்பட வேண்டியதுமான விலைமதிப்பில்லா இரத்தினகற்கள் நிறைந்த இடமாக காணப்படும் பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள கெமுல்கமு ஓயா தற்போது மனித குலத்திற்கே கேடு விளைவிக்கும் சில சமூக சுரண்டல் காரர்கலால் சூரையாடப்பட்டு வருகின்றன.
தங்க பள்ளதாக்கை பாதுகாப்போம் என்ற தொனி பொருள் இங்கு அருமையான வளம் கொண்ட இரத்தினகற்களையே ஆகும் இவ் ஓயாவில் பல காலமாக அரச அங்கீகாரத்துடன் இரத்தின கல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன இதன் காரணமாக பொரும் பகுதி வளங்கள் சூரையாடப்படடுள்ளதோடு இப்பகுதி பெரும் அரசியல் சமூக பொருளதார தாக்கத்திற்கு உட்பட்டிருந்தது.
அதிகளவான போதை பொருள் பாவனை சிறுவர்களுக்கெதிரான வன்முறை, பெண்கள் மீதான பாலியல் வன்புணர்சிகள், நோய் தொற்று, மனித உயிர் இறப்பு, உயரின பல்வகைமையில் மாற்றம் என்று இன்னும் பல காரணங்களை சுட்டி காட்ட முடியும் இப்பகுதி சிலகாலம் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் சந்தர்ப்பத்தில் சில சமூக சக்திகள,; இருக்கும் மீதி வளங்களை சூரையாட பொலிசாரின் உதவியுடன் இரத்தின கல் அகழ்வில் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர் இதனை பொலிசார் கண்டுகொள்ளாமலும் அதிலிருந்து வரும் இலாபத்தில் ஒரு பங்கை தானும் பெற்று கொள்வதும் பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.
அண்மையில் இவ் ஓயாவில் சட்டத்திற்கு விரோதமாக இரத்தினகல் அகழ்வில் ஈடுபட்ட சிலரை பொலிசார் கைது செய்திருந்தாலும் இங்கு அவர்களின் ஆதரவுடனே தொடர்ச்சியாக அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக இதனை அண்மித்து காணப்படும் சில தோட்ட பகுதிகள் எதில்காலத்தில் முற்றாக மண்ணுக்குள் புதையும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன. குறிப்பாக திரேசியா பாடசாலை உட்பட்ட திரேசியா, மோரா, சிங்காரவத்தை, கில்லானி, பொகவந்தலாவ தோட்டம், வானக்காடு, டன்பார் உட்பட்ட பல பகுதிகளில் நிலம் தாழ் இறங்கும் அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.
இதிலிருந்து இச்சமூகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவரையும் சார்ந்தது. அத்துடன் இப்பகுதி எதிர்வரும் காலங்களில் இரத்தினகல் அகழ்வுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கவும் கூடாது. சூழலியல் நிபுணர்களால் இப்பகுதியை ஆய்வுக்குட்படுத்தி பாதுகாக்கப்பட வேண்டும். இதனால் இப்பகுதியில் இடம் பெற்று வரும் சட்ட விரோத போதை பொருள் பாவனையை பொலிசார் சட்ட நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும்.
அத்துடன் இப்பகுதி வனங்களிலும், ஆறுகளிலும் சட்டத்திற்கு விரோதமான முறையில் பலர் இரத்தின கல் அகழ்வில் ஈடுபட்டுவருவதாகவும், அதற்கு பொலிசாரின் உடன்பாட்டுடன் இடம் பெற்ற வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை தகுற்த அதிகாரிகள் மூலம் தக்க நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.
தங்க பல்லதாக்கை பாதுகாக்கும் பொறுப்பு சமூத்தில் தானும் ஒரு அங்கத்தினர் என்ற வகையில் அனைவரு;கும் ஏற்பட வேண்டும்.
நன்றி - சுயாதீன ஊடகம் பசுமை தாயகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...