மகிந்தவின் எல்லை கடந்த மொள்ளமாரித்தானத்தின் சாட்சிகள் நாளாந்தம் அதிகரித்த வன்னமுள்ளது என்பதற்கு இன்னொரு சாட்சி.
காட்சி 1
ரணிலும் மைத்திரியும் இரகசிய சதி ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக பிரச்சாரத்தை முதலில் முடுக்கிவிட்டர்கள்.
காட்சி 2
ஐ.தே.க விலிருந்து கட்சித் தாவிய அதன் செயலாளர் திஸ்ஸ அத்தாயக மற்றும் தயாசிறி ஆகியோரை பயன்படுத்தி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நேற்று கூட்டி அந்த போலி ஒப்பந்த கடதாசியை காட்டினர். இதில் உள்ள பயங்கரம் என்ன வென்றால் தமிழர்களுக்கு நாட்டை காட்டிக்கொடுக்க போகிறார்கள் இதோ ஆதாரம் என்கிற தொனியிலேயே அவர்கள் அந்த கடதாசியைக் காட்டினார்கள்.
“வடக்கிலுள்ள இராணுவத்தை 50 வீதமாக குறைக்கப் போகிறார்களாம். அதிபாதுகாப்பு வலயங்களை நீக்கி அதன் உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்குவது, 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகார பரவலாக்குவது என உடன்படிக்கை செய்திருக்கிறார்கள்.” என்று பயமுறுத்தினார் திஸ்ஸ
தயாசிறி ஜயசேகர இப்படி கூறினார்
“இந்த நாட்டில் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதியையும், நீர் பரப்பில் பெருமளவு பகுதியையும் காட்டிகொடுத்த ஒப்பந்தத்தை இதற்கு முன்னரும் ரணில் செய்திருந்தார்.” என்றார்.
தமது அரசியல் எதிரிகளை தாக்குவதற்கும் சிங்கள வாக்கு வங்கியை கைப்பற்றுவதற்கும் இலகு ஆயுதமாக “தமிழர்களுக்கு உரிமைகளை கொடுக்கப்போகிறார்கள்” என்று குற்றம்சாட்டுவதன் மூலம் அடைந்து விடலாம் என்று நம்புகிறார்கள்.
காட்சி 3
இன்று பல பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களாக "இதோ சதி ஒப்பந்தம்" என்று அந்த ஒப்பந்தத்தின் பகுதிகள் என்று கூறி சில வாசகங்களையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இன்று எதிரணி இதனை இந்த மோசடியை ஊடக மாநாட்டில் அம்பலப்படுத்தியது. ரணில், ராஜித, மைத்ரிபால, மங்கள போன்றோர் தெளிவிருத்தியதுடன் சவால் இடுகின்றனர்.
- விகாரமகாதேவி பூங்காவில் வைத்து ஏனையகட்சிகளும் சேர்ந்து செய்துகொண்ட உடன்படிக்கையை தவிர ரணிலுடன் வேறெந்த ஒப்பந்தமும் கிடையாது என்பதை விளக்கினார்கள்.
- முதலாவது குளறுபடி - பொதுவாக ரணில் சிங்களத்தில் உள்ள ஒப்பந்தத்தில் சிங்களத்திலும், ஆங்கிலத்தில் உள்ள ஒப்பந்தத்தில் ஆங்கிலத்திலேயே கையெழுத்திடுவது வழக்கம் இதில் ஆங்கிலத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
- பொலிஸ் மாதிபரிடம் இந்த போலி ஆவணம் குறித்து தீர விசாரணை செய்யும்படி மைத்ரிபாலவும், ரணிலும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.
- இந்த ஒப்பந்தம் நவ.1 கையெழுத்து வைத்திருப்பதாக தயாரித்து இருக்கிறார்கள். மைத்திரிபால எதிரணியுடன் இணைவது பற்றி நவம்பர் மாதம் இறுதியில் தான் தீர்மானத்திற்கு வந்தார்கள்.
- தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்திருக்கிறார்கள்.

மக்கள் சொத்துக்களை இதுவரை கூட்டு கொள்ளையடித்தது போதாது என்று மொத்த அரச இயந்திரத்தையும் ஆளும்கட்சியின் தேர்தல் மோசடிக்காக பயன்படுத்திவருவது முழு நாடும் அறியும். நேர்மையான தேர்தலில் கொண்டுள்ள அச்சம் அடாவடித்தனத்தின் உச்சத்துக்கு மகிந்தவை தள்ளியிருக்கிறது. இந்த நிலையில் இந்த கையெழுத்து மோசடி வேறு. வெள்ளம் தலைக்கேறிய பின்பு சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன என்று முடிவே கட்டிவிட்டார்களா... முழுக்க முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று தமது அரக்கத்தனத்தை முழுவதும் வெளிக்காட்டத் தொடங்கிவிட்டார்களா..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...