சுவர்களும் பதாதைகளும் எப்பொழுதும் சாதாரணமார்களது வெளிப்பாட்டு ஊடகங்களாக இருந்துவருகின்றன. சுவர்களில் பதாதைகளில் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் கவனிப்பைப் பெறுவதுடன் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகவும் இருந்துவருகின்றன. இது சாதகபாதகங்களைக் கொண்டிருக்கும். பொதுவில் பேசமுடியாததையும், பேசப்படாததையும் பேசுவதாகவும் இவை இருக்கும். தனிப்பட்ட வம்புதும்புகளின், காழ்ப்புக்களின் களங்களாக இருப்பதுடன் மாற்று அல்லது எதிர்ப்பு சமூக, பண்பாட்டு, அரசியல் குரலாகவும் தொழிற்படுவதைக் காணமுடியும்.
இந்தவகையில் அதிகாரம் மற்றும் ஆதிக்கங்கள் என்பவற்றுக்கு சவால்விடும் வகையிலான வெளிப்பாட்டு ஊடகங்களாக சுவர்கள் மற்றும் பதாதைகள் இருந்துவருகின்றன.
கற்பனை, சிந்தனை, விமர்சனநோக்கு, படைப்பாற்றல், கலைஆற்றல் என்பவற்றின் வெளிப்பாட்டுக் களங்களாக இருப்பதுடன் இயலாமையின் வெளிப்பாட்டுக் களமாகவும்கூட சுவர்கள் மற்றும் பதாதைகள் இருந்துவருகின்றன.
உரிமைகோருபவர்கள், உரிமைகோராது ஊகங்களுக்கு இடமளிப்பவர்கள் என வெளிப்பாட்டுக் களமாக பயன்படுத்துபவர்களை வகைப்படுத்தலாம். இதன் இன்னொரு பரிமானமாக கொள்ளத்தக்க வகையில் முகநூல்களின் இருப்பையும் இயக்கத்தையும் கருத்திற் கொள்ளலாம்.
வெகுசன ஊடகங்களின் வெளிப்படுத்த முடியாதவற்றை முகநூல்களில் பதிவேற்றம் செய்வது வழக்கமாகி இருக்கிறது. ஒருவர் குளிக்கிறாரா? வாய் கொப்பளிக்கிறாரா? என்பதையுங்கூட அருகிலும் உலகின் இன்னொருகோடியிலும் இருக்கும் தொடர்பாளர் அறியக் கூடியவகையில் முகநூல்கள் இயங்கிவருவதைக் காணலாம்.
மேலும் வெகுசன ஊடகங்களில் வருபவற்றை பகிரவும், வெகுசன ஊடகங்களில், மாற்று ஊடகங்களில் வெளிவராதவற்றை பதிவேற்றிப் பரிமாறவும் தனிநபர்களால் முடிகிறது. தனிநபர்களால் மற்றும் சிறுகுழுக்களால் பதிவேற்றப்பட்டு பரிமாறப்படும் வி;டயங்கள் ஒத்தஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களால் தொடர் பரிமாற்றத்திற்கு உட்படுவதுடன் புதியவர்கள் பரீட்சயம் கொள்ளவும், உடனடி உரையாடலுக்கும் வாய்ப்பானதாக முகநூல் இயங்கிவருகின்றது.
அறியப்படாத மறக்கப்பட்ட, நிராகிக்கப்பட்ட சமூக பண்பாட்டு விடயங்களை அறிமுகத்திற்கும், நினைவூட்டலுக்கும், உரையாடலுக்கும ;கொண்டு வருவதன் மூலமாக செயலூக்கத்திற்கும் செயற்பாட்டிற்கும் தூண்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான முன்னெடுப்புதான் உள்ளுர் அறிவுத் திறன் செயற்பாடுகளுக்கான மூன்றாவதுகண் நண்பர்களின் முகநூல் பதாதைகள் முன்னெடுப்பு.
இந்த முகநூல் பதாதைகள் முன்னெடுப்பு மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட ஆளுமைகள் மற்றும நிராகரிக்கப்பட்ட, ஒரங்கட்டப்பட்ட, கைவிடப்பட்ட, மறக்கப்பட்ட சமூக பண்பாட்டு விடயங்கள், விழுமியங்கள், கலை பண்பாட்டு மரபுகள் சமூக பொருளாதார பண்பாட்டு நடவடிக்கைகள், ஒடுக்குமுறைகள், ஆதிக்கங்கள், நிராகரிப்பிற்கு ஆளானவைகள ;கொண்டாடப்பட வேண்டியவைகள் என இவை; விரிவுகொள்ளும்.
மனிதர்களும் எல்லா உயிரினங்களும் இந்தப் பூவுலகில் இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கான உலகந் தழுவிய மனித முயற்சிகளின் கண்ணியாக உள்ளுர் அறிவுதிறன்சார் செயற்பாடுகளுக்கான மூன்றாவது கண் நண்பர்களின் முகநூல் பதாதைகள் முன்னெடுப்பும்...
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...