Headlines News :
முகப்பு » , » கொஸ்லந்தை மீறியபெத்தையின் கோரிக்கைகள்

கொஸ்லந்தை மீறியபெத்தையின் கோரிக்கைகள்

கொஸ்லந்தை – மீறியபெத்தை இயற்கை அனர்த்ததின் ஒரு மாத நிறைவு தின (29.11.2014) நாளில் பூனாகலை, லிந்துலை, கந்தப்பளை ஆகிய இடங்களில் இடம்பெறும் நினைவஞ்சலி நிகழ்வுகளில் மக்கள் சார்பாக முன் வைக்கப்படும் பத்து அம்ச கோரிக்கைகள். 
கோரிக்கை - 01
பாதிக்கப்பட்ட மக்களையும் வாழ்விற்காக போராடும் மக்களையும் அரசியல் இலாபங்களுக்காக விளம்பர பொருளாக்காதீர். 
கோரிக்கை – 02
இழப்புகளை சந்தித்து வெறுமையாய் நிற்கும் மக்களுக்கு வாராந்தம் உதவி தொகை கொடுத்தல் வேண்டும்.
கோரிக்கை – 03
உயிர், உடமை இழந்த மக்களுக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
கோரிக்கை – 04
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு என்று மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். 
கோரிக்கை – 05
மண் சரிவு ஏற்படும் இடங்களை அடையாளப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செயதல் வேண்டும்;.
கோரிக்கை – 06
அரசே 2013 இல்  அறிவித்த ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து.
கோரிக்கை – 07
தனி வீடு, சொந்த காணி கோரிக்கையை ஏழுப் பேர்ச், பத்து பேர்ச் என கொச்சைப்படுத்தி மலையக சமூகத்தை அடிமை நிலைக்கு தள்ளாதே.
கோரிக்கை – 08
மலையக மக்களின் வீடு, காணி தேவையை பூர்த்தி செய்ய மலையகத்திற்கென சுதந்திர காணி ஆணைக்குழுவை நியமித்தல் வேண்டும்.
கோரிக்கை – 09
நாட்டில் காணி இல்லாதோருக்கு காணி வழங்கும் போது கடைப்பிடிக்கும் காணி கொள்கையை மலையகத்திலும் கடைப்பிடித்தல் வேண்டும். (ஆடுஇ மாடு, கோழி வளர்ப்பதற்கும், மரக்கறிச் செய்கையில் ஈடுபடுவதற்கும், பெருந்தோட்டத் தொழிலில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் தேவையான அளவு காணி வழங்கப்படுதல் வேண்டும்).
கோரிக்கை – 10
பாதிக்கப்பட்ட மீறியபெத்த மக்களுக்கு மாதிரி வீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இது தொடர்பாக மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படவும் வேண்டும்.












Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates