கடந்த ஞாயிறு (06.07.2014) மக்கள் தொழிலாளர் சங்கத்தின் அழைப்பின் பேரில் ஹட்டனில் இடம்பெற்ற மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுக் கோரிக்கைகள், பொது வேலைத்திட்டம், பொது அமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும்; ஆர்வலர்களிடையே ஒரு பொது இணக்கப்பாட்டை காண்பதற்கான கலந்துரையாடலிலே மலையக மக்கள் தனி வீடு அமைத்துக் கொள்ள காணித் துண்டுகள் உரித்துடனும் சுய தொழில்ஃவிவசாயத்திற்கான காணியும் வென்றெடுக்கப்பட வேண்டும் என்ற கொள்கை ரீதியான உடன்பாடு எட்டப்பட்டது. இந்த கோரிக்கையை குறிப்பாக வரையறுத்துக் கொள்வது பற்றியும் அதனை வென்றெடுப்பதற்கான வேலைத்திட்டம் பற்றியும் அவ்வேலைத்திட்டத்தை வென்றெடுப்பதற்கான பொது அமைப்பு பற்றியும் இக்கலந்துரையாடலின் அடுத்த மாத அமர்வில் இணக்கம் காண்பது என அமைப்புகள் இணங்கிக் கொண்டன. பொது அமைப்பை கட்டும் வரை மக்கள் தொழிலாளர் சங்கம் ஏற்பாட்டாளராக செயற்பாடுவது என இணக்கம் காணப்பட்டது.
பொது கலந்துரையாடலில் பங்குபற்றிய 16 அமைப்புகளின் (அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள்) விபரம் வருமாறு:
1. விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம்
2. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
3. அருனலு மக்கள் முன்னணி
4. சமூக நல நிறுவனம்
5. இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி
6. ஜனநாயக மக்கள் முன்னணி
7. மனித அபிவிருத்தி தாபனம்
8. சமூக அபிவிருத்தி நிறுவகம்
9. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
10. லியோ மார்கா ஆஸ்ரம்
11. ஐக்கிய தேசிய முற்போக்கு சங்கம்
12. மலையக மக்கள் முன்னணி
13. மலையக சமூக ஆய்வு மன்றம்
14. மலையக தமிழ் பண்பாட்டுப் பேரவை
15. மலையக தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்
16. விடிவெள்ளி சமூக அபிவிருத்தி நிறுவனம்
நன்றி - மக்கள் தொழிலாளர் சங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...