Headlines News :
முகப்பு » , » பொகவந்தலாவையில் இடம்பெற்ற மண்சரிவில் பலியானோர்

பொகவந்தலாவையில் இடம்பெற்ற மண்சரிவில் பலியானோர்


மலையக வரலாற்றில் மற்றுமொரு துயரச்சம்பவம் நேற்றைய தினம் (01.12.2014) பொகவந்தலாவ பிரதேசத்தில் அமைந்நுள்ள லொயிலோன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு இரவு 11.45 அளவில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 45 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளும் இறந்துள்ளனர். மலையகப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக ஆங்காங்கு மண்சரிவுகளும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டவண்ணுமுள்ளது.

ஏற்கனவே மீறியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் உயிரிழந்தவர்களின் 30 ஆம் நாள் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டு அடுத்த தினமே மற்றுமொரு துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது மக்கள் மத்தியில் தமது எதிர்காலம் தொடர்பான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

கொஸ்லாந்த அனர்த்தத்தை தொடர்ந்து மலையகத்தின் ஏனைய அனர்த்தமேற்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மலையக தலைவர்களும் அனர்த்த கண்காணிப்பு குழுவினரும் கூறிவந்த போதும் நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த மண்சரிவு அபாயம் குறித்து எந்த தரப்பினரும் அறிந்திருக்கவில்லையா? அல்லது அனர்தம் ஏற்படலாம் என அறிந்திருந்தும் மக்களுக்கு அறிவிக்க மறந்துவிட்டனரா.? இது எமது மக்கள் மீது அரசாங்கத்திற்கும், மலையக தலைவர்களுக்குமுள்ள அக்கறையை காட்டுகின்றது.?

இவ்வாறன அனர்த்தங்கள் பல மலையகப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் ஏற்படக்கூடிய சாத்தியப்பாடுகள் நிறையவே காணப்படுகின்றன. ஆகவே இவ்வாரான அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. இதனை தவிர்த்து தமது சுய நலனுக்காக எவராவது செயற்படுவார்களானால் இன்னும் குறுகிய காலத்தினுல் மலையகம் என்ற பகுதி இலங்கையின் வரைபடத்திலிருந்து காணாமல் போகக்கூடிய நிலை ஏற்படக்கூடும். இதனை தடுத்து நிறுத்துவதற்கு மனிதநேயம் மிக்க அனைத்து தரப்பினருக்கும் நாம் அழைப்புவிடுக்கின்றோம் எம் உறவுகளுக்காக. இறந்த எமது உறவுகளின் ஆத்ம சாந்திகாக பிரார்த்திக்கின்றோம்.

நன்றி - பசுமை மலையகம்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates