வைத்தியசாலைக்கு முன் பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்டத்தில் மண்சரிவினால் உயிரிழந்த இருவரின் சடலத்தின் பிரேத பரிசோதனையை பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் செய்யுமாறு கோரி பொதுமக்கள் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு செல்லும் பாதையை 02.12.2014 அன்று பிற்பகல் 1.30 மணியிலிருந்து மறைத்து செய்த ஆர்ப்பாட்டத்தினால் பொகவந்தலாவ பலாங்கொடை பிரதான வீதி தடைப்பட்டது.
பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு பாதுகாப்பு இல்லை என கோரி மேற்படி வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரிகள் உட்பட வைத்தியர்கள் தாதிமார்கள், ஊழியர்கள் கடமையிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார்.
02.12.2014 அன்று பிற்பகல் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு வந்த சிலர் தனக்கும் சக அதிகாரிகளுக்கும் அச்சுறுத்தியதாகவும் இந்த இரண்டு சடலத்தின் பிரேத பரிசோதனை இந்த வைத்தியசாலையிலேயே செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பொகவந்தலாவ பொலிஸாரால் அட்டன் நீதிமான் முன்னிலையில் இந்த மரண சம்பவம் தொடர்பாக தெரிவித்தபோது இந்த சடலங்களின் பிரேத பரிசோதனையை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் செய்யும்படி அட்டன் நீதிமான் அமில ஆரியசேன பொகவந்தலாவ பொலிஸாருக்கு உத்திரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவினால் இரண்டு சடலங்களின் பிரேத பரிசோதனையை தனக்கு செய்வதற்கு அதிகாரம் இல்லை என பொகவந்தலாவ வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
அத்தோடு தனக்கு அச்சுறுத்திய நபர்களை இனங்கண்டு கைது செய்ய வேண்டுமெனவும் கைது செய்யாவிட்டால் 03.12.2014 அன்று முதல் பொகவந்தலாவ வைத்தியசாலையை முழுமையாக மூடுவதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதாக எச்சரிக்கை விடுக்கின்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையையடுத்து டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின்சட்ட மருத்துவ அதிகாரி கே.எஸ். லொக்குஹோவாகம் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு வந்து இரண்டு சடலங்களின் பிரேத பரிசோதனைகளை செய்வதற்கு தான் விருப்பம் தெரிவித்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரவிக்கின்றனர்.
நன்றி - வீரகேசரி 02.12.2014
நன்றி - வீரகேசரி 02.12.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...