Headlines News :
முகப்பு » » மக்களை பின்தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசியல்வாதிகள் – எஸ். கணேசன்

மக்களை பின்தொடரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசியல்வாதிகள் – எஸ். கணேசன்


கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துவிட்டது. நாட்டு மக்கள் இச்சம்பவத்தை படிப்படியாக மறந்து விட்டனர். ஆனால் இந்த மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் எதுவித இருப்பிட வசதிகளும் இல்லாமல் அவல வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

மீரியபெத்த மண்சரிவு அனர்த்தத்தை மறந்துவிட்ட இந்த நாட்டு மக்களை கடந்த முதலாம் திகதி இரவு 11.45 மணியளவில் பொகவந்தலாவ லொய்னோர்ன் தோட்டத்தில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தம் அதிர்ச்சியடையச் செய்துள் ளது.

கொஸ்லந்த மீரியபெத்த மண் சரிவு அனர்த்தம் ஏற்பட்டு நவம்பர் 29ஆம் திகதியுடன் ஒரு மாதம் கடந்து விட்டது. 38 பேரே உயிரிழந்ததாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டது. இந்த அனர்த்தத்தில் 14 பேரின் சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்டன. ஏனைய சடலங்கள் மண்சரிவு இடம்பெற்ற இடத்திலேயே மண்ணோடு மண்ணாகிப் போயின. நாட்டு மக்களின் கவனம் இந்த மக்களை விட்டும் திசைதிரும்பி விட்டது. மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், ஊவா மாகாண சபை அமை ச்சர் செந்தில் தொண்டமாண், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் பலர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர் .

ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ, ஆறுமு கன் தொண்டமான் உட்பட ஊவா மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது பல வாக்குறுதிகளை அள்ளி வீசினர். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர நவம்பர் 15ஆம் திகதி 75 புதிய வீடுகளுக்கு அடிக்கல் நாட்டப்படும் என்றும் 3 மாதங்களில் இராணுவத்தினர் நிர்மாணப் பணிகளை முடித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கையளிப்பர் என்றும் தெரிவித்தார். இதை மீரியபெத்த மீட்புப் பணிகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த இரா ணுவ ஜெனரலும் உறுதி செய்தார். ஆனால், வாக்குறுதியளித்தபடி நவம்பர் 15ஆம் திகதி அடிக்கல் நடப்படவில்லை அது மட்டுமின்றி, வீடுகளை நிர்மாணிப்பதற்கான எந்தவித தடயங்களும் காணப்படவில்லை என்றே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசி யல்வாதிகள், மீரியபெத்த மக்களை அது வும் மண்சரிவு அனர்த்தத்தில் அனைத்து உடைமைகளையும் இழந்து, இன்று இருக்க இடமின்றியும் தொழிலின்றியும் அவல வாழ்க்கை நடக்கும். மக்களை மறந்துவிட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட சமைத்த உணவு நிறுத்தப்பட்டது. அதற்குப் பதிலாக அவர்களுக்கு உலர் உணவு வழங்கப்பட்டது. பிள்ளை களுக்கு பால் மா இல்லாமல் அம்மக் கள் இன்று கண்ணீர் சிந்துகின்றனர். அரசியல்வாதிகளினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கேற்ப எமக்கு வீடுகள் வேண்டும். வீடுகள் நிர்மாணிக்கப்படும் அறிகுறிகள் கூட ஒரு மாதம் கடந்தும் தென்படவில்லை. ஒரு மாதமாக எமக்கு தொழிலில்லை. வாழ வழியில்லை என தெரிவித்து மீரியபெத்த மக்கள் கடந்த 30ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற தினத்தன்று ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை சந்தித்தார் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்திருந்தது. ஆனால், அவர் அந்த மக்களுக்கு என்ன வாக்குறுதி வழங்கினார் என்று ஊடகங்களில் வெளிவரவில்லை.
கொஸ்லந்த மீரியபெத்த மக்கள் கடந்த ஒரு மாதமாக எதுவித தொழிலுமின்றித் தவிக்கின்றனர். இவர்களுக்கு வருமானம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மண்சரிவு அனர்த்தத்தில் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த பிள்ளைகளுக்கு கல்விக்கு புலமைப்பரிசில் வழங்குவதாக கண்டியிலுள்ள இந் தியத் உதவித் தூதுவர் ஏ.நடராஜன் உட்பட பல தரப்பினர் உறுதியளித்திருந்த னர். ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு கற்க இப்போது உதவி வழங்கப்படுகின்றதா என்பது தெரியவே இல்லை.

இதேவேளை, அனர்த்தம் நடைபெற்று சில தினங்களில் அவசர தேவைகளுக்கென அரசு 60 இலட்சம் ரூபாவை வழ ங்கியிருந்தது. இப்பணத்தை இம்மக்க ளின் வீடுகளை நிர்மாணிக்கப் பயன்படு த்தியிருக்கலாம்.ஆனால் இப்பணத்துக்கு என்ன நடந்தது என அந்த மக்கள் இப்போது கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அநாதரவாக விடப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க உறுதியளித்துள்ளவர்களிடமிருந்து அவற்றை பெற்றுக் கொடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்றும் அம்மக்களிடமிருந்து கேள்விகள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தல் இப்போது அறிவிக்கப்பட்டு விட்டது. அரசியல்வாதி கள் ஜனாதிபதித் தேர்தல் வேலைகளில் மூழ்கி இருக்கின்றனர். இருந்தும் மக்க ளின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்த்தால்தான் இந்த மக்கள் அரசியல்வாதி கள் சுட்டி க்காட்டும் மக்களுக்கு வாக் களிப்பர். இதையும் அரசியல்வாதிகள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண் டும்.

அன்று மலையக மக்கள், அரசியல் வாதிகள் ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்ட ங்களுக்கு அவர்களின் தேவைக்காக பின்னால் சென்று எதுவும் புரியாமல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் அப்போது இவர்களுக்கு சாராயமும் சோற்றுப் பார்சல்களும் வழங்கப்பட் டன. இன்று நிலை மாறிவிட்டது. மலையக மக்கள் தமது தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் தாமே முன்வந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம்பித்து விட்டனர். இப்போது அரசியல் வாதிகள் ஆர்ப்பாட்டம் செய்யும் மக்களுக்குப் பின்னால் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. உண்மையாகக் கூறப்போனால் இன்று மலையக மக்கள் மலையக அரசி யல் தலைவர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டனர் என்றே கூற வேண்டும்.

மலையகத்தில் கடும் மழை பெய்து கொண்டிருக்கும்போது கொஸ்லந்தை யில் மண்சரிவு ஏற்பட்டது. இதை தொட ர்ந்து நுவரெலியா, கண்டி, இரத்தி புரி மாவட்டங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து 3000 இற்கும் அதிகமான குடும்பங்கள் அவர்களது வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. அந்த மக்களும் தமக்குப் பாதுகாப்பான இடங்களில் தனிவீடுகள் அமைத்துத் தரப்பட வேண்டுமென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால், இந்த ஆர்பாட்டங்கள் எதற்கும் முறையான பதிலை வழங்க அரசாங்கத்தில் பங்காளிக் கட்சிகளாக இருக்கும் மலையகக் கட்சிகள் முன்வரவில்லை.

மலையக அரசியல்வாதிகள் இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் உணர்வுபூர்வமாக விழித்தெழுந்து தமது தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காக வும் ஆர்ப்பாட்டங்களை நடத்த ஆரம் பித்து விட்டனர். மலையகத்தில் எதிர்கா லத் தில் அரசியல் நடத்த வேண்டுமானால் தமது தேவைகள், குறிப்பாக வீட்டுப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என் பது இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் உணர்த்திவிட்டனர். இனி முடிவெடுக்க வேண்டியது மலையக அரசியல் தலை மைகளே.

நன்றி - வீரகேசரி 07.12.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates