ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே பிரதான மலையகக் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதி பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்போவதாக அறிவி த்து விட்டன.
சில கட்சிகள் ஏற்கனவே தமது தலைமைப்பீடம் எடுத்த தீர்மானத்துக்கமைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை ஆதரிப்பதாக அறிவிப்புச் செய்தன. வேறு சில கட்சிகள் எந்தவித தீர்மானமுமின்றி திடீரென ஆதரவு வழங்குவதாக அறிவித்து விட்டு தற்போது விழிபிதுங்கி நிற்கின்றன. மற்றும் சில கட்சிகளிலோ இழுபறி நிலை காணப்படுகிறது. அதாவது, கட்சி யில் ஒரு சாரார் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதேவேளை, மற்றொரு சாரார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கட்சி முக்கிய தீர்மானத்தை எடுப்பதாக இருந்தால் அதன் சாதக – பாதக நிலைமைகளை ஆராய்ந்து ஓர் உறுதியான முடிவுக்கு வரவேண்டும். அதுதான் கட் சிக்கும் அதன் தலைமைக்கும் மதிப்பு. அதனை விடுத்து அவசர குடுக்கைகளாக ஒரு தீர்மானத்தை அறிவித்துவிட்டு பின் னர் அதனை வாபஸ்பெறுவது விவேகமானதல்ல.
மலையக மக்கள் முன்னணி மலையகத் தின் பிரதான கட்சிகளில் ஒன்றாகும்.
அமரர்கள் பெ. சந்திரசேகரன், வி.டி. தர்மலிங்கம் மற்றும் பி.ஏ. காதர் உள்ளிட்ட பலரால் இலட்சியத்துடன் ஆரம் பிக்கப்பட்டதொரு கட்சியாகும். அந்த இலட்சியத்துக்கு வலுச்சேர்க்கும் வகை யில் ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்கள் அணிதிரண்டனர். தொழிலாளர் கள், தோட்ட உத்தியோகத்தர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலதரப்பின ரும் மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட்டு கட்சியை கட்டியெழுப்பினர்.
மலையகத்தில் ஒரு மாற்று சக்தியாக அடையாளம் காணப்பட்ட அந்தக் கட்சி அரசியலில் ஏனைய மலையகக் கட்சிகளிலிருந்து வித்தியாசமானதாகக் காணப்பட்டது. ஒத்த கருத்துக்களுடன் தீர்மானங்கள் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன.
ஆனால், இன்று நடப்பதென்ன? மலையக மக்கள் முன்னணிக்கு நடந்தது என்ன?
கடந்த 10ஆம் திகதி அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக மலையக மக்கள் முன்னணி தெரிவித்தது. ஜனாதிபதியை சந்தித்துத் தமது ஆதரவை தெரிவித்த குழுவில் ம.ம.மு. அரசியல் பிரிவுத் தலைவர், கட்சியின் தலைவர், செயலாளர் நாயகம், பொருளாளர், ஏனைய முக்கியஸ்தர்கள், மாகாணசபை உறுப்பினர், பிரதேச சபைத் தலைவர் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றிருந்தனர்.
மலையக மக்களுக்கு காணி, தனி வீடு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற கோரிக் கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்ததாகத் தெரிவித்ததுடன் தமது முழுமையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பான செய்திக ளும் புகைப்படங்களும் சகல பத்திரிகைக ளிலும் வெளியாகியிருந்தன. அது மலையக மக்கள் முன்னணியின் ஒன்றுபட்ட ஒரே குரலாகவே அனைவராலும் பார்க்கப்பட்டன. ஆனால், அது பிழையான பார்வை என்பது அடுத்து வந்த இரண்டு வாரங்களுக்குள் தெரிய வந்தது.
மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான ஏ. லோரன்ஸ் கடந்த 23ஆம் திகதி ஹட்டனில் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்த கருத்து இத னை ஓரளவு ஊர்ஜிதப்படுத்தியது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கிய ஆதரவு குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது என்று தெரிவித்திருந்தார்.
திடீரென ஆதரவை மறு பரிசீலனை செய்வதற்கான காரணம் என்ன?
மறைந்த தலைவர் சந்திரசேகரன் இருந்த காலத்திலும் சரி இன்றும் சரி என்றும் சரி முக்கியமான தேர்தல் காலத்தில் சிந்தித்துப் பார்த்துதான் ஆதரவு கொடுப் போம். தற்போது அரசியல் ரீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் நாங்கள் தெரிவித்த ஆதரவை மீண்டும் சிந்தித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுப்பதா? அல்லது வேறு தீர்மானத்தை எடுப்பதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது? எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புள்ள ஒரு கட்சி இவ்வாறான பதிலை தெரிவிப்பது வியப்பாக இருக்கிறது. அமரர் சந்திரசேகரன் இருக்கும் போது சிந்தித்து செயற்பட்ட கட்சி இப்போது அவ்வாறு சிந்திக்காதது ஏன்? அந்தக்கட்சியின் வேறு சிந்தனையாளர்களே (செயலாளர் நாயகம் உட்பட) கிடையாதா?
இவ்வாறு சிந்தித்துப் பார்க்காமல்தான் 10 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அனைவரும் சென்று ஆதரவு வழங்குவதாகக் கூறினீர்களா? என்று கட்சியின் விசுவாசி கள் கேட்கின்றனர்.
கட்சியின் தலைமை, மத்திய குழு செய ற்குழு என என்னென்னவோ பிரிவுகள், தலைவர், செயலாளர் நாயகம் எல்லோ ரும் இருக்கின்றனர் அல்லவா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன்னர் இதை ஏன் சிந்திக்கவில்லை.
ஆதரவு வழங்குமாறு கட்சிக்குள் உள்ள ஒரு பிரிவினர் அழுத்தம் கொடுத்தனரா? அல்லது மற்றொரு பிரிவினர் ஆதரவு வழங்குவதை விரும்பாத காரணத்தினால் மீள்பரிசீலனை அறிக்கை விடப்பட்டதா? கட்சிக்குள் ஒற்றுமை இல்லை. பிளவுபட்டுள்ளது என்று சொல்லாமல் சொல்லப்படுகிறதா என்று ஆரம்ப கால விசுவாசிகள் அங்கலாய்க்கின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகள் வேட்பாளர் விபரம், தேர்தல் விஞ்ஞாபனம் அனைத்தும் வெளியான பின்னரே எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்று நாட்டிலுள்ள பிரபல கட்சிகள் எல்லாம் காத்திருக்கும் நிலையில் சிந்தித்துப் பார்க்காமல் முந்திக் கொண்டு ஆதரவு தெரிவிப்பதும் பின்னர் அதனை மீள்பரிசீலனை செய்வதாகவும் கூறுவது ஒரு பொறுப்பு வாய்ந்த கட்சிக்கு பொருத்தமானதா? எனவும் கேட்கின்ற னர்.
மலையக மக்கள் முன்னணி என்றும் தனித்துவத்தை இழக்காது என்றும் சகல தேர்தல்களிலும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டுச்சேராது தனித்தே போட்டியிடும் என்றும் அதன் தலைவர் கள் கூறி வந்துள்ளனர். அதற்கு மக்களும் தமது ஆதரவை வழங்கி வந்துள்ளனர் என்பது உண்மை.
ஆனால், கடந்த ஊவா மாகாணசபை தேர்தலின் போது நடந்தது என்ன? அரசுடன் இணைந்து போட்டியிட்டு இருந்த ஒரு பிரதிநிதித்துவத்தையும் இழந்ததுடன் தனித்துவம் என்ற கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டு விட்டது. இவையெல் லாம் சிந்திக்காமல் இடம்பெற்றதா? ஏன் சிந்திக்கவில்லை?
இதேவேளை, கட்சியின் செயலாளர் நாயகம் பத்திரிகையாளர் மாநாட்டில் ஆத ரவை மீள்பரிசீலனை செய்யும் கருத்து தொடர்பில் கட்சியின் தலை(வி)வர் சாந்தினி சந்திரசேகரனோ அரசியல்பிரிவு தலைவரும் பிரதியமைச்சருமான வே. இராதாகிருஷ்ணனோ அல்லது தகுதி வாய்ந்த எவருமோ இதுவரை கருத்து வெளியிடவில்லை என்றும் தெரிய வருகிறது.
எனவே, இங்கும் ஒரு சந்தேகம் எழுகி றது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து சிந்தித்து செயலாளர் நாயகத்தினூடாக ஆதரவை மீள்பரிசீலனை செய்யும் அறி விப்பை வெளியிட்டனரோ தெரியவி ல்லை என்றும் கூறப்படுகிறது. மற்று மொரு சந்தேகம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கான ஆதரவு மறுபரிசீலனை என்றால் வேறு யாருக்கு ம.ம.மு. ஆதரவு வழங்கப்போகிறது? பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கா? அல்லது வேறு யாருக்கு?
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...