வாக்கு அரசியலுக்கு அப்பாலும், சந்தா அரசியலுக்கு அப்பாலும் நின்று செயற்படக்கூடிய புதிய அரசியல் கலாசாரமே இன்றைய தேவையென மலையக சமூக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலையக சமூக ஆய்வு மையத்தின் சார்பில் அதன இணைப்பாளர் அருட்தந்தை மா. சத்;திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவித்ததாவது,
பதுளை மாவட்ட கொஸ்லந்த பிரதேச மீரியபெத்த தோட்டத்தில் இடம் பெற்ற அனர்த்தம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்கின்ற அனைத்து மக்களையும் குறிப்பாக தமிழ் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சோகத்தை தமது சோகமாக்கி உதவிய, உதவுகின்ற அனைத்து நேச உள்ளங்களுக்கும் மலையக சமூக ஆய்வு மையம் தமது நன்றியை தெரிவித்துக் கொள்;கின்றது. இழப்பின்; வலியை உணர்ந்து உடனடி தேவைகளுக்கு உதவிக்கரம் நீட்டிக கொண்டிருக்கும் வடகிழக்கு வாழ் மக்களுக்கும், யாழ்ப்;பல்கலைகழக, கிழக்கு பல்கலைக்கழக சமூகங்களுக்கும் நன்றிகள்.
மேலும், உள்ளுராட்சி, மாகாணசபை, பாராளுமன்ற வாக்கு அரசியலுக்கு அப்பால் நின்று வலிசுமந்து நிற்கும் மலையக மக்களுக்கு ஆறுதல் கூற வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் திரு. கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் எமது நன்றிகள். இப்புதிய அரசியல் கலாசாரமே வாழ்வைத் தேடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடிவைத் தேடிக் கொடுக்கும்.
வாக்கு அரசியலுக்கு அப்பால் நின்று நீங்கள் நீட்டியிருக்கின்ற நேசக்கரத்தை எமது மலையக அரசியல் தலைமைகள் பற்றிக்கொள்ளுமா அல்லது உதறித் தள்ளிவி;ட்டு நிபந்தனையற்ற ஆதரவினை அரசிற்கு வழங்குமா? இதுவே மலையக சமூக ஆய்வு மையத்தின் எம்மவர்களை நோக்கிய கேள்வி.
இலங்கையில் மலையகம் எனும் பிரதேசம் உள்ளது. இங்கு தமிழர்கள் 200 ஆண்டுகாலமாக வாழ்கிறார்கள். சுதந்திர இலங்கையில் இவர்கள் இன்னும் சமூக அரசியல் உரிமைகள் சுதந்திரமற்று வாழ்வுக்காக போராடுகின்றார்கள் என்ற செய்தி மீரியபெத்த அனர்த்தத்தின் பின்னர் உள்நாட்டு வெளிநாட்டு தமிழர்களைத் தொட்டுள்ளது.
மலையக அரசியல் தலைமைகளே நீங்களும் வாக்கு அரசியலுக்கும், சந்தா அரசியலுக்கும் அப்பால் சென்று வலிசுமந்து சுதந்திர வாழ்வுக்காக தினம் தினம் போராடுகின்ற வடகிழக்கு தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டுங்கள். சிவில் அமைப்புக்களோடு உறவுகளை ஏற்படுத்துங்கள். இதுவே தமிழ் மக்களின் விடிவை நோக்கிய பயணத்திற்கு வழிசமைக்கும்.
மீரியபெத்த தோட்டத்தில் 50 இற்கு மேற்பட்ட மலையக உறவுகள் மண்ணுக்குள் புதைந்து, மலையக மக்களின் இன்றைய நிலையை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளனர். இதனை உலகமட்டத்திற்கு கொண்டு சென்று பேசுபொருளாக்குவது மலையக மக்கள் மீது அக்கறை கொண்ட அனைவரதும் கடமையாகும்.
வட-கிழக்கு அரசியல் தலைமைகளே! உங்களுக்கும் ஒரு வேண்டுகோள். வட-கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கான தீர்வின் முழுமை என்பது மலையக மக்களின் சுதந்தர சுகவாழ்விலேதான் தங்கியுள்ளது. வட-கிழக்கின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச தளத்திலே பேசுகின்ற போது மலையக தமிழ் மக்களையும் மறந்துவிட வேண்டாம.; அவர்களின் அரசியல் அபிலாஷைகளையும் சர்வதேச தளத்தில் முன்வையுங்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...