எதிர்வரும் ஜனாதிபதித் தேர்த லில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மூன்றாவது தடவையாகவும் போட்டியிடலாம் என்று உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களதும் முஸ்லிம் மக்களதும் வாக்குகளைப் பெறுவதற்காக அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. எனினும், தமிழ் மக்களின் வாக்குகள் அரசாங்கத்துக்குக் கேள்விக் குறியாகவே காணப்படுகின்றன.
முஸ்லிம் மக்களின் வாக்குகளும் எந்தளவுக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தைப் பொறுத்த வரையில் ஊவா மாகாண சபை த் தேர்தலுக்குப் பிறகு அரசாங்கம் சிந்திக் கத் தொடங்கியுள்ளது. இங்கு ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகள் அரசாங்கத்துக்கு பெரும் சவாலை ஏற்படு த்தியுள்ளது.
அதனால் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்ற நேரத்தில் இன்னும் ஒரு வருட காலத்தில் நடை பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலு க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நட த்தி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று முன்கூட்டியே ஜனாதி பதித் தேர்தலை நடத்த அரசாங்கம் அவசர ப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
இந்நிலையில் மலையகத்தின் பிரதான கட்சிகள் ஜனாதிபதிக்கு வெவ்வேறு வடிவங்களில் ஆதரவு தெரிவிக்க முன்வந்து அதற்கான சந்திப்புக்களையும் மேற்கொண்டுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இ.தொ.கா. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு டன் இணைந்தே கடந்த பாராளுமன்றத் தேர்தல், மத்திய மற்றும் ஊவா மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என சகல தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றியீட்டி வந்துள்ளது.
மேலும், இ.தொ.கா. வின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராகவும் அதன் தலைவர் முத்து சிவலிங்கம் பிரதி அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்கள். மத்திய மாகாணத்தில் எம்.ராம், ஊவா மாகாணத்தில் செந்தில் தொண்டமான் ஆகியோர் அமைச்சர்களாக உள்ளனர்.
இவ்வாறு அரசாங்கத்தின் பிரதான பங்கா ளியாக இ.தொ.கா. இருப்பதால் ஜனாதிபதிக்கு கட்டாயம் ஆதரவு வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. அத்தோடு, மலையகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக் கிக் கொடுத்துள்ளது.
எனவே தான் மலையக மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொடுத்து மீண்டும் ஜனாதிபதி வெற்றி பெறுவதற்கு இ.தொ.கா. எந்தவிதமான நிபந்தனையையும் விதி க்காமல் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள் ளது.
தொழிலாளர் தேசிய சங்கம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு அடுத்த படியாக தொழிலாளர் தேசிய சங் கம் இரண்டாவது பெரும்பான்மை பலம் கொண்ட சக்தியாக விளங்குகின்றது. மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து அதன் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் 12 உறுப்பினர்கள் பிரதேச சபைகளில் அங் கம் வகிக்கின்றார்கள்.
மேலும், அக்கட்சியின் தலைவர் பி. திகாம்பரம் பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருந்து வந்தார். கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அவர் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப் பாட்டு பிரதி அமைச்சராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார். பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 7 பேர்ச்சஸ் காணியுடன் வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும். அரசாங்கத்தினதும் இந்திய அரசாங்கத்தினதும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனா திபதியிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிரதியமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள் ளார்.
முதன்முதலாக பிரதியமைச்சர் பதவி பெற்றுள்ள திகாம்பரம் அரசியலில் இன் னும் வளர வேண்டிய நிலையில் உள்ளார். அரசாங்கத்தின் நிதியைக் கொண்டு மலையகத்தில் அபிவிருத்தி வேலைகளைச் செய்து வருவதால் தொடர்ந்து அரசுக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை அவரு க்கு இருக்கின்றது.
மலையக மக்கள் முன்னணி
மலையக மக்கள் முன்னணி அதன் ஸ்தா பகத் தலைவர் அமரர் பெ. சந்திரசேகரன் உயிரோடு இருந்த நேரத்தில் அதன் தனித்துவத்தைக் காப்பாற்றும் வகையில் தேர்தல்களில் தனித்து நின்றே போட்டியிட்டு வந்துள்ளது. அவ்வாறு பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரசேகரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சராகப் பதவி வகித்துள் ளார்.
அவரின் மறைவுக்குப் பிறகு அவரது துணைவியார் சாந்தினி தேவி சந்திரசேகரன் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமை யில் பாராளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஷ்ணன் அரசியல் துறைத் தலைவராக இணைந்து கொண்டார். கடந்த மாதம் அவர் தாவரவியல் பூங்கா மற்றும் பொது பொழுதுபோக்கு பிரதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
அத்தோடு, ஊவா மாகாண சபைத் தேர்த லில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போடு இணைந்து போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஏ.அரவிந்த குமார் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் ஊவா மாகாண சபைத் தேர்த லில் அரசாங்கம் வெற்றியீட்ட அவரின் வாக்குகள் பெரிதும் துணை புரிந்துள்ளன. அவர் ஜனாதிபதியின் இணைப்புப் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ளார்.
இவை தவிர மலையக மக்கள் முன்னணி சார்பில் மத்திய மாகாண சபை உறுப்பினராக ஒருவர் இருக்கின்றார். நுவரெலியா பிரதேச சபைத் தலைவராக அக்கட்சியைச் சேர்ந்த என்.சதாசிவன் இருப்பதோடு பிரதேச சபைகளில் 7 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.
அரசியல் ரீதியில் வெள்ளி விழா கண்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் சார் பில் அதன் பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்து தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவி த்துள்ளார்கள்.
மேலும், மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 7பேர்ச் காணியும் தனியான வீடமைப்பு, இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு, உள்ளூராட்சி நிர்வாகத் தில் தோட்ட மக்களும் உள்வாங்கப்படு தல் முதலான தேவைகளை ஜனாதிபதியி டம் நிபந்தனையாக அல்லாமல் கோரிக்கையாக முன்வைப்பதாக பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையகத் தலைமைகளின் கடமை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை கோரிக்கைகளாக முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு நிபந்தனை விதித்துள்ளார்கள். அதேபோல் முஸ்லிம் மக்களின் சார்பிலும் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதேநேரம் பெரும்பான்மை மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதோடு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என் றும் வலியுறுத்தி வருகின்றன.
எனவே, மலையக மக்களின் அடிப்ப டைத் தேவைகளை வலியுறுத்த வேண்டிய அவசியம் மலையகத் தலைமைகளுக்கு உண்டு. கொஸ்லந்தை மண்சரிவு அனர்த் தத்துக்குப் பிறகு லயன் வீடுகள் அகற்றப் பட்டு தனித்தனி வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரி க்கை வலுப்பெற்றுள்ளது.
இந்த அனர்த்தத்துக்குப் பின்னர் தொழி லாளர்கள் தாமாகவே லயன் முறைக்கு எதி ர்ப்பு தெரிவித்தும் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும் தமது அபிலாஷை களை வெளிப்படுத்தியுள்ளார்கள். இப் போது மழை ஓயத் தொடங்கியுள்ளது. வெயில் அடிக்கின்றது. எனவே நேற்று மழை பெய்தபோது நேர்ந்த அனர்த்தம் நாளுக்கு நாள் மறந்து கொண்டு வரும். எனினும், மீண்டும் மழைக்காலம் ஆரம் பிப்பதற்கு முன்னர் மண்சரிவு ஆபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர நிவார ணம் கிட்டவும் வீடுகளை அமைத்துக் கொடுக்கவும் அழுத்தங்களைப் பிரயோ கிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் மலை யக மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு காட்டுகின்ற ஆர்வத்தை அந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றங் கள் ஏற்படுவதற்கு மலையகத் தலைமை கள் முன்வர வேண்டும். அவர்களின் அடி ப்படை தேவையான குடியிருப்புக்கும் காணி உரிமைக்கும் ஜனாதிபதித் தேர்தலை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...