Headlines News :
முகப்பு » » முக்கிய தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது ஏன் - ஏ.டி. குரு

முக்கிய தமிழ் வேட்பாளர்கள் தோல்வியை தழுவியது ஏன் - ஏ.டி. குரு


ஊவா மாகாண சபைத்தேர்தல் முடிந்து இர ண்டு வாரங்கள் கடந்து விட்டிருக்கின்றன. சிறிய பெரும்பான்மையுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மீண்டும் ஊவா மாகாண சபை யின் ஆட்சி அதிகாரத்தை தன்னகப்படுத்தி யுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து தெரிவாகியுள்ள பதுளை, மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த 19 உறுப்பினர்களும் கடந்த 30ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ முன்னிலை யில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு ள்ளனர். ஊவாவின் முதலமைச்சராக மீண் டும் சஷிந்திர ராஜபக் ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் ஐ.ம.சு. கூட்டமைப்பின் அதிகாரம் ஊவா வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபைக்கான அமைச்சரவை 30ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பதுளை மாவட்டத்தின் விரு ப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐ.ம.சு. கூட்டமைப்பில் 3ஆம் இடத்தை பெற்று க்கொண்ட இ.தொ.கா. உப தலைவர் செந்தில் தொண்டமானுக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படு மென்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் அமைச்சரவை நியமனம் எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெற வுள்ள ஊவா மாகாண சபையின் முதல் அமர்விற்கு பின்னரே இடம்பெறுமென மாகாண ஆளுநர் நந்தா மெத்தீயூ தெரிவித்துள்ளார். இது அமைச்சு பொறுப்புக்களை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இம்மாகாண சபைத்தேர்தலில் தமிழர் பிரதிநிதித்துவம் 5ஆக உயர்ந்துள்ளது. இ.தொ.கா.வின் 3 வேட்பாளர்களும் பசறை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் வடிவேல் சுரேஷும் ஆளு ங்கட்சி சார்பாகவும், ஐ.தே.க. கட்சியில் பாராளுமன்ற உறுப்பினரான கே. வேலா யுதத்தின் புதல்வர் ருத்திர தீபனும் தெரி வாகியுள்ளனர்.

புதிய ஊவா மாகாண சபையில் 5 தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தா லும் பிரதான தேசியக் கட்சிகள் இரண்டி லும் இணைந்து போட்டியிட்ட 10 தமிழ் வேட்பாளர்களுள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் பலர் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அ.அரவிந்குமார், தொழிலாளர் தேசிய சங்க வேட்பாளர் அதிபர் இராஜமாணிக்கம் ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட முன்னாள் பிரதி கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், முன் னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம். பி. லோகநாதன், பி. பூமிநாதன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியிருந்தனர்.
மலையக மக்கள் முன்னணி கடந்த இரு மாகாண சபைகளிலும் மண்வெட்டி சின்னத்தில் களமிறங்கி ஒரு உறுப்பினரை பெற்றிருந்தது. எனினும் இம்முறை பதுளை மாவட்டத்தில் இடம்பெற்ற மாகாண சபை ஆசனக்குறைப்பை கவனத் தில் கொண்டு வெற்றிலை சின்னத்தில் களமிறங்கி ஊவாவில் தனக்கிருந்து வந்த மாகாண சபை உறுப்பினரையும் இழந்து ள்ளது.
ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிட்ட அரவிந்குமார் தனித்தே தனது தேர் தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அதே தரப்பு வேட்பாளர்களான வடிவேல் சுரேஷ், இராஜமாணிக்கம் ஆகிய இருவரோடு அரவிந்குமாரை இணைத்து தேர்தலில் வாக்கு சேகரிக்கவென பதுளையில் பல்வேறு தரப்பினர் இறுதி இரு வாரங்களுக்கு முன்புவரை மேற்கொண்ட முயற்சிகள் பலனற்று போ யின.

விருப்பிலக்க தேர்தல் பிரசாரமே மத்திய மாகாண சபைத்தேர்தலில் ஆளுந்தரப்பில் 9 தமிழ் பிரதிநிதிகளின் வெற்றிக்கு வழிவகுத்திருந்தது. அதே பாணியை ஊவாவி லும் கையாண்ட இ.தொ.கா. வின் தேர்தல் வியூகத்திற்கு கைமேல் பலன் கிட்டியுள்ளதென்றால் அது மிகையில்லை.

அரவிந்குமார் இ.தொ.கா. வின் 1 விரு ப்பு வாக்கு தமக்கு கிட்டும் என்ற கூடுதல் நம்பிக்கையுடன் பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார். அத்தோடு ஐ.தே.க.வின் எழுச்சி குறித்த தோட்டப்புற பகுதி களநிலவரத்தையும் அவர் சரியாக கணிக்கவில்லை. இறுதி நேரத்தில் அவருடன் பிர சாரப் பணியில் ஈடுபட்டிருந்த பதுளை பிரதேச சபை அமைப்பாளரும் ம.ம.மு. வின் லுணுகலை, ஹாலிஎல பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் தொழிலாளர் தேசிய சங்கத்துடன் இணைந்தமையும் இ.தொ.கா.வின் பண்டாரவளை தேர்தல் பிரசார அசம்பாவிதமும் அவரது வெற்றி வாய்ப்பை பறித்து விட்டன.

இதேபோன்று ஐ.ம.சு. கூட்டமைப்பு வேட்பாளரான இராஜமாணிக்கம் தொ.தே. சங்கத்தின் சார்பில் களமிறங்கிய போதிலும் அவரால் 10 ஆயிரம் என்ற விருப்பு வாக்கு எண்ணிக்கையை கூட எட்ட முடியவில்லை. வடிவேல் சுரேஷு டன் தேர்தலில் இணைந்து பிரசார நடவடிக்கைகளை ஆரம்பத்தில் மேற்கொண்ட போதிலும் சிறு சிறு கருத்து முரண்பாடு கள் காரணமாக அவர்கள் தனித்தே செய ற்பட்டிருந்தனர். இம்முரண்பாடுகள் இரு தரப்பு ஆதரவாளர்களினால் ஏற்பட்டவை. பிரதியமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத் தலைவருமான பி. திகாம்பரம் கலந்து கொண்ட தேர்தல் பிரசார கூட்ட ங்களில் திரண்ட மக்கள் கூட்டத்தை இராஜமாணிக்கம் வாக்குகளாக மாற்றத்தவறி யமையும் தேர்தல் பிரசாரத்திற்காக 9 தேர் தல் தொகுதிகளிலும் அவரால் ஏற்படுத் தப்பட்ட குழுக்களில் பெரும்பாலான முறையாக செயற்படாமையும் இப்பெரிய தோல்விக்கு காரணமாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் நிச்சயம் வெற்றி பெறுவாரென எதிர்பார்க்கப்பட்ட எம்.சச்சிதானந்தனுக்கு 11ஆவது இடமே கிட்டியுள்ளது. ஆரம்பத் தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியி ட்ட மூவர் இணைந்து விருப்பு வாக்கு களை பெற்றுக்கொள்ளும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. எனினும் விருப்பிலக்கங்களை பெற்றுக்கொண்ட 4 தமிழ் வேட்பாளர்களும் முதலமைச்சர் வேட்பாளர் ஹரின் பெர்னாண்டோவு டன் சேர்ந்து தமக்கு 1 விருப்பு வாக்கை பெறும் வகையிலே பிரசாரங்களை மேற்கொண்டனர்.

எம்.சச்சிதானந்தன் பண்டாரவளை, அப்புத்தளை, வெலிமடை தொகுதிக ளில் மட்டுமே கூடுதல் கவனத்தை செலு த்தி பிரசாரங்களை மேற்கொண்டார். அவருக்கு ஆதரவுள்ள தொகுதிகளான பதுளை, பசறை, ஹாலிஎல போன்ற பகுதிகளில் இரவது பிரசார பணிகள் பூஜ்யமாகவே இருந்துள்ளது. சிலர் இவரின் விரு ப்பு வாக்கிலக்கத்தை கேட்டு வாக்களித்ததாக கூறப்படுகிறது.

அதேபோன்று ஐ.தே.க. வேட்பாளர்களான எம்.பி. லோகநாதன், பி. பூமிநாதன் ஆகிய இருவரும் தமது வெற்றிக்காக தனித்து வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு தோல்வி கண்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டிற்கும் இம்மாகாண சபைத்தேர்தலில் தலா 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

இவ்வாக்கு எண்ணிக்கைகளின் படி நோக்கும்போது இரு தேசிய கட்சிகளிலும் வாக்களிப்பு மூலம் நேரடியாக தலா 4 பிரதிநிதிகள் வீதம் 8 பேர் தெரிவாகக்கூடிய நிலை உருவாகியிருந்தது. எனினும் அவ்வாய்ப்பு வேட்பாளர்களின் தனித்துவ வெற்றி கருதிய சுயநலப் போக்கால் தவறவிடப்பட்டுள்ளது. நிச்சயம் வெற்றி பெறுவர் என எதிர்பார்க்கப்பட்ட அரவிந்குமார் 12 ஆயிரத்து 721 வாக்குகளையும் எம். சச்சிதானந்தன் 16 ஆயிரத்து 808 வாக்குகளையும் பெற்றுள்ளனர். வேட்பாளர் இராசமாணிக்கம் (ஐ.ம.சு.கூ) 6 ஆயிரத்து 333 வாக்குகளையும் ஐ.தே.க வேட்பாளர்களான எம்.பி லோகநாதன் 9 ஆயிரத்து 690 வாக்குகளையும் பி. பூமிநாதன் 5 ஆயி ரத்து 899 வாக்குகளை பெற்றுள்ளனர்.

இரு தரப்பு தமிழ் வேட்பாளர்களினதும் வாக்கு எண்ணிக்கையை நோக்கும்போது அவர்கள் தனித்து செயற்பட்டமைக்கான ஆதாரங்களை அவர்கள் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மூலம் அறிய முடியும். வேட்பாளர்களிடையே காணப்பட்ட தனி ப்பட்ட முரண்பாடுகளும் சுயநல அரசி யல் போக்கும் அதிகளவான தமிழ் உறு ப்பினர்கள் ஊவா மாகாண சபைக்குத் தெரிவாகும் வாய்ப்பை இல்லாமல் செய் துள்ளது.
இத்தவறுகள் களையப்படுவதற்கான வாய்ப்புகள் இன்னும் சில காலங்களில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்த லில் கிட்டியுள்ளது. அதை வேட்பாளர்கள் சரிவரப் பயன்படுத்தி ஒற்றுமையுடன் செயற்படுவதற்கான அழுத்தங்கள் ஊவா மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் தரப்பின ரால் விடுக்கப்பட வேண்டியது அவசிய மாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates