அன்புடையீர்,
அமரர் எஸ்.விஜயகுமாரன் அவர்களின்
நான்காவது சிரார்த்த தினம் - 17.10.2014
மலையக மக்கள் முன்னணியின் மறைந்த செயலாளர் நாயகம் அமரர் எஸ்.விஜயகுமாரன் அவர்களின் நான்காவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17.10.2014ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு அட்டன் தலைமைக்காரியாலயத்தில் சிரார்த்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் திருமதி சந்திரசேகரன், அரசியற்துறைத்தலைவரும், பிரதி அமைச்சருமான சௌரவ வி.எஸ்.இராதாகிருஸ்ணன் மற்றும் கட்சி முக்கியஸ்த்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்வார்கள்.
எனவே இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
அ.லோறன்ஸ்,
செயலாளர் நாயகம்,
மலையக மக்கள் முன்னணி.
மறைந்த செயலாளர் நாயகம் எஸ்.விஜயகுமாரன் அவர்கள் மறைந்து நான்கு வருடங்கள் கழிந்துள்ள நிலையில், இம்மாதம் 16ம் திகதி அவரின் 4வது சிரார்த்த நிகழ்வு கூட்டம,; எதிர்வரும் 17ம் திகதி, மலையக மக்கள் முன்னணியின் அட்டன் தலைமையகத்தில் நினைவு கூறப்படவிருக்கின்றது.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரன் 2010ம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி மறைந்ததை தொடர்ந்து ஏற்பட்ட ஒரு இக்கட்டான சூழலில், கட்சியின் செயலாளர் என்ற அடிப்படையில் இந்த இழப்பை ஈடு செய்து, கட்சியின் ஏனைய சிரேஸ்ட்ட கட்சி உறுப்பினர்களின் உதவியுடன், அந்த இக்கட்டான நிலையில், கட்சியை கொண்டு நடத்துவதில் செய்த பங்களிப்பு காத்திரமானது, என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ், அவரது சிரார்த்த தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்
திரு.விஜயகுமாரன் அவர்கள் மலையகத்தில் அந்நேரத்தில், காணப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய மலையக பட்டதாரிகளில் ஒருவராகவும், இளைஞர் சேவை மன்றத்தில், ஒரு அரசாங்க உத்தியோகத்தராக கடமையாற்றியவர் அவ்விதமான ஒருவர் மலையக மக்கள் முன்னணியோடு இணைந்து செயல்பட்டதால், அவர் தமது பதவியையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. அரசியலில் பதவிகளையும், பட்டங்களையும், பெற சிலர் முற்படும் வேலைகளில் கட்சிக்காக தனது பதவியை கூட விட்டுக்கொடுத்து மலையக மக்கள் முன்னணியின் அரசியலில் அவர் முழு நேரமாக இணைந்து செயல்பட்டார்.
பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த காலத்திலிருந்தே இடதுசாரி அமைப்புகளோடு, மலையக வெகுஜன இயக்கத்துடன் P.A. காதர், V.T தர்மலிங்கம் போன்றோருடன் செயல்பட்ட விஜயகுமாரன் 1989ம் ஆண்டு, மலையக மக்கள் முன்னணியின் செயலூக்கமுள்ள செயற்பாடுகளில், தனது பங்களிப்பை செலுத்திவந்ததோடு, விஜயகுமாரன் அவர்கள் 2005 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு ஒக்டோபர; மாதம் வரை, கிட்டத்தட்ட 6 வருடங்கள் கட்சி செயலாளராக, அவர் இவ்வுலகைவிட்டு அகலும் வரை செயல்பட்டார் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் அ.லோறன்ஸ் மறைந்த மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் எஸ்.விஜயகுமாரன் தொடர்பாக அவரது 4வது சிரார்த்த தினம் தொடர்பான தனது ஊடக அறிக்கையில்ல குறிப்பிட்டுள்ளார்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...