காலத்தின் தேவைதான் பெரும அரசியல், சமூக, பெருளாதார, கலாசார நிறுவனங்களை தோற்றுவிக்கின்றது எனக் கொண்டால் இன்றைய
சமூகத் தேவைதான்- வரலாற்றுத் தேவைதான் இலங்கை கல்வி
சமூக சம்மேளனத்தையும் (Sri Lanka Educational Community Organisation- SLECO)
தேற்றுவித்தது எனலாம். அந்தவகையில் கல்விசார் பணியாளர்களான ஆசிரியர்கள், அதிபர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள், ஆகியோர் எதிர் நோக்கும் பிரச்சனைகளை அவர்களின் துன்பத் துயரங்களை வெவ்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் உணர்ந்து அதற்கான மாற்றுச் செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுப்பதே இவ்வியக்கத்தின் நோக்கமென அவ்வமைப்பினர் பிடகடனப்படுத்தியுள்ளனர். அவ்வாறே, தமது செயற்பாடுளை எத்தனங்களை ஒரு பிரதேச எல்லைக்குள் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் தேசம் தழுவிய அமைப்பாக இது செயற்படும். ஐக்கியம் புதிய தளம் அமைக்கும் என்ற தாரக மந்திரத்துடன் தோற்றங்கொண்டுள்ள இவ்வமைப்பு எந்தவொரு கட்சிக்கும் சார்பானதோ எதிரானதோ இல்லை. அந்தவகையில் எந்தக் கட்சியிலும் உள்ள ஒருவர் தனது கட்சிக்குரிய அமைப்பாக்கும் நோக்கம் இல்லாமல், தனது கட்சிக்கு விரோதமாயல்லாத வெகுஜன செயற்களங்களில் இவ்வமைப்போடு சேர்ந்து இயங்க இயலும். இது பரந்துபட்ட சமூக தளம் என்கிறவகையில், வெவ்வேறு சமூகத்தின்- குறிப்பாக பின்தங்கிய சமூகங்களின் கல்வி வளர்ச்சியை தமது இலக்காக கொண்டே இவ்வமைப்பு செயற்படும்.

Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...