Headlines News :
முகப்பு » » ஊவா மாகாணத்தில் ஆளும் தரப்பின் வெற்றிக்கு தோட்ட மக்களின் வாக்குகளே காரணம் - எஸ்.கணேசன்

ஊவா மாகாணத்தில் ஆளும் தரப்பின் வெற்றிக்கு தோட்ட மக்களின் வாக்குகளே காரணம் - எஸ்.கணேசன்


ஊவா மாகாண சபையை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீண் டும் கைப்பற்றுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளார்கள். ஐ.ம.சு.முன்னணி சார்பில் ஆறு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் மூவர் ஐ.ம.சு.முன்னணி சார்பி லும் ஒருவர் ஐ.தே.கட்சியிலுமாக நான்கு பேர் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாண சபை தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பு வழங்கியுள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபை தேர்தலில் 20,448 வாக்குக ளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி பட்டிய லில் 12 ஆவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்ற இ.தொ.கா. வேட்பாளர் செந்தில் தொண்டமான் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் 31,858 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.ம.சு.முன்னணி வேட்பா ளர் பட்டியலில் 3ஆவது இடத்தை பெற்று பெரு வெற்றி பெற்றுள்ளார்.

ஐ.ம.சு.முன்னணி பட்டியலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறு வதற்கு பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று தொகுதிகளை மொனராகலை மாவட்டத்து டன் இணைத்ததும் காரணமென ஆய்வா ளர்கள் தெரிவிக்கின்றனர். 2009 ஊவா மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 14 வேட்பா ளர்களில் செந்தில் தொண்டமான் மாத்திரமே வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் கே.வேலாயுதம் 14,870 விருப்பு வாக்குகளைப் பெற்று ஐ.தே.கட்சிப் பட்டியலில் 4ஆவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்றார். 2009 மாகாண சபைத் தேர்தலில் இரண்டு தமிழர்களே வெற்றி பெற்றனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்று வெற்றி பெற்ற செந்தில் தொண்டமானு க்கு அனுதாப வாக்குகள் கிடைத்ததாக சிலர் தெரிவிக்கின்றனர். தேர்தலுக்கு இர ண்டு தினங்களுக்கு முன்னர் பண்டாரவளை நகரில் ஏற்பட்ட விபத்தில் காயமுற்றார். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செந் தில் தொண்டமானுடன் மேலும் 24 பேர் காயமுற்றனர்.
ஐ.தே.கட்சிப் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்ற வேலாயுதம் ருத்ரதீபனுக்கு தோட்டத் தொழிலா ளர்களின் வாக்குகளுடன் சிங்கள முஸ் லிம்களின் வாக்குகளும் பெருமளவு கிடை த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் லுணுகலை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்தவாறே மாகாண சபைத் தேர்த லில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஹரீன் பெர்னாண்டோ மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார். அந்த இடத்துக்கு ருத்ரதீபனின் தந்தையான கே.வேலாயுதம் நியமிக்கப்பட்டார். பசறை தொகுதியின் ஐ.தே.கட்சி அமைப்பாளரான கே.வேலாயுதம் நீண்டகாலம் அரசியலிலிருந்து செய்த சேவையே ருத்ரதீபனின் வெற்றிக்கு வழிவகுத்தது என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் இத் தேர்தலில் நான்கு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாராளுமன்ற உறுப்பி னர் கே.வேலாயுதத்தின் புதல்வர் வேலாயுதம் ருத்ரதீபன் 30,457 விருப்பு வாக்குக ளைப் பெற்று பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். தோல்வியுற்ற மூன்று வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதிக் கல்வி அமைச்சருமான எம்.சச்சிதானந்தன் 16,808 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னர் ஜே.வி.பி.யின் மாகாண சபை உறுப்பினராகயிருந்த பீ.பூமிநாதன் இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் 5,899 விருப்பு வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன ணிப் பட்டியலில் போட்டியிட்ட முன் னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி சுகாதார அமைச்சருமான வடிவேல் சுரேஷ் 21,967 விருப்பு வாக்குகளைப் பெற்று பட்டியலில் ஆறா வது இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள் ளார். இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறை தொகுதியின் அமைப்பாளராகவும் இருக்கின்றார். இத்தேர்தலில் போட்டியி ட்ட ஆறுமுகம் கணேஷமூர்த்தி 19,262 வாக்குகளைப் பெற்று ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணி சார்பில் ஐ.ம.சு.முன்னணிப் பட்டிய லில் போட்டியிட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.அரவிந்தகுமார் 12,721 விருப்பு வாக்குகளைப் பெற்று பட்டியலில் 18ஆவது இடத்தைப் பெற்றுத் தோல்விய டைந்தார். கடந்த 2009 நடைபெற்ற தேர்தலில் மலையக மக்கள் முன்னணி தனித் துப் போட்டியிட்டது. 7,863 விருப்பு வாக்கு களை மாத்திரம் பெற்று ஏ.அரவிந்தகுமார் ஊவா மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார். இத்தேர்தலில் அவர் 2009இல் நடைபெற்ற தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட 4,858 விருப்பு வாக்குகளை அதிகமாக பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதியமைச்சர் பீ.திகாம்பரத்தின் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பாக ஐ.ம.சு. முன்னணி பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் வெற்றிபெறவி ல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் 1,324 விருப்பு வாக்குகளைப் பெற்று தோல்வியுற்றார். இதே போல் கீதன் செல்வராஜ் 601 விருப்பு வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார்.

ஊவா மாகாண சபை தேர்தலில் மலையக முஸ்லிம் கவுன்ஸிலின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸும் இணைந்து ஜனநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டன. ஆனால் இக் கூட்டமைப்புக்கு மொத்தமாக 5,045 வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருந்தது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 4150 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி அமைக்கப்பட்டதன் நோக்கம் பதுளை மாவட்டத்தில் ஒரு முஸ் லிம் பிரதிநிதித்துவத்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே. ஆனால் நோக்கம் நிறைவேறவில்லை. ஐ.ம.சு. முன்னணி இத்தேர்தலில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையாவது நிறுத்தவில்லை.

இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சி தனது பதுளை மாவட்ட வேட்பாளர் பட்டிய லில் ஐ.எம்.நஸீர் மற்றும் ஏ.கே.ஏ. மொஹம்மட் ஆகிய இரு வேட்பாளர்களை நிறுத்தி யிருந்தது. அவர்கள் முறையே 15,686 மற்றும் 15,003 விருப்பு வாக்குகளை பெற் றிருந்தும் வெற்றி பெறவில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா மக்கள் காங்கிரஸ் கூட்டணி இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு பெற்ற மொத்த வாக்கு களைவிட மும்மடங்கு விருப்பு வாக்கு களை ஐக்கிய தேசியக் கட்சி பட்டியலில் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates