மக்கள் கவிமணி சி.வி.வேலுப்பிள்ளையின் நூற்றாண்டு ஆரம்பவிழா நாளை கொழும்பில் நடைபெறுகிறது.
நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஸ் தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இந் நிகழவு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் மல்லியப்புச் சந்தி திலகர் தொகுத்து வழங்கும் இந் நிகழ்வில் சி.வி. வேலுப்பிள்ளையின் மகள் திருமதி ஜீன் விமலசூரியா உருவப்படத்திற்கு மாலை அணிவிப்பார் .
மலைய கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஆலோசகரும் கொழும்பு தமிழ் சங்கதுணைத் தலைவருமான பேராசிரியர் சொ.சந்திரசேகரம் தொடக்கவுரை நிகழ்த்துவார்.
மக்கள் கவி மணி சி.வி.இன் வாழ்வும் பணியும் என்ற தலைப்பில் கொழுந்து ஆசிரியர் அந்தனி ஜீவா நினைவுப் பேருரை நிகழ்ததுவார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...