பெருந்தோட்டப் பகுதிகளிலு ள்ள பெற்றோர்கள் தமது குழந்தைகளுக்கு சரியான தரத்திலும் முறையான ஒழுங்கிலும் துணை உணவுகளைக் கொடுக்க முடியாதுள்ளனர். சரியான பருவத்தில் துணை உணவுகள் கிடைக்காதபோது (6 – 18 மாதப்பருவத்தில்) குழந்தைகளின் வளர்ச்சி குன்றி நோய் வாய்ப்படுவதற்கு இடமுண்டு. போசாக்கு குறைந்த குழந்தைகள் மேலும், மேலும் மோசமாகப் பாதிக்கப்படலாம். இதற்கு முக்கியமானக் காரணங்களாக தாய்ப்பாலின் அளவு குறைதல், துணை உணவுகளின் தரக்குறைவு, நேரத்திற்கு உணவு கிடைக்காமை என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவ்வாறு துணை ஆகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது அறிந்து கொடு க்கக்கூடிய அறிவு பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு குறைவாக உள்ளது. அத்தோடு தொடர்ச்சியாகக் குழந்தைகளுக்குத் துணை ஆகாரங்கள் கொடுக்கக்கூடிய வகையில் இவர்களுடையச் சமூகப் பொருளாதார காரணிகள் தடையாக இருக்கின்றதைக் குறிப்பிடலாம்.
இதனால், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய விசேட உணவுகள் கிடைக்காமையினால் போசாக்கு குறைபாட்டுக்கும் ஆரோ க்கியப் பிரச்சினைக்கும் தொடர்ச்சியாக உட் படுகின்றன. இவ்வாறு பாதிப்படையும் குழந்தைகள் கல்வியில் சிறப்புற்று விளங்கமுடியாத நிலை ஏற்படும். பெருந்தோட்டப்பகுதிச் சிறுவர்கள் கல்வியில் பின்னடைந்து காணப்படுவதற்கு இதுவும் ஓர் காரணமா கும்.
குடும்பத்திற்கு உகந்த உணவுப்பொருள்களைத் தேர்ந்தெடுப்பதில் முழுப்பொறு ப்பும் பெற்றோர்களையே சாரும். குடும்பத்திற்கான போசாக்குள்ள உணவுப் பொருட்களைத் திட்டமிடும் போது சத்துமிக்க உணவுப்பொருள்கள் யாவை? அவற்றின் விலைகள் போசனைப்பெறுமானங்கள் மற் றும் சேமி த்து வைக்கக்கூடிய வசதிகள் உற்பத்தித் திகதி, முடிவுத் திகதி போன்றவற்றை அவதானித்து கொள்வனவு செய்ய வேண் டும்.
ஆனால், பெருந்தோட்டப் பிரதேசத்தில் இவ்வாறான நடைமுறைகள் பெரும்பாலும் குறைவாகவே காணப்படுகின்றன. இவர்களின் குறைந்த வருமானம் காரணமாக மாதாந்தம் கடனுக்கே அதிகமாக உணவுப்பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள். குறிப்பிட்ட மாத சம்பளத்தில் அந்த கடனை கொடுத்துவிட்டு மீண்டும் கடனு க்கே பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். சில வேளைகளில் கடை முதலாளியே இவர்களின் உணவுப்பொருட்களை தேர்ந்தெடுக்கும் துர்ப்பாக்கிய நிலையும் உள்ளது.
வீட்டுத்தோட்டத்தில் இலகுவாக கிடைக்கக்கூடிய கரும்பச்சை கீரைகள், பழங்கள், காய்கறிகள், வல்லாரை, மரக்கறிகள், சாதாரண கீரைகள் போன்றவற்றை தங்களுடைய உணவு வேளைகளில் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இவர்களுக்கு போசனைப்பற்றியும் உணவுப்பொருட்க ளின் போசனைப் பெறுமானங்கள் பற்றியும் போதிய விளக்கமும் அறிவும் குறைவான தால் இவற்றிலிருந்து அதிகமாகக் கிடைக்கக்கூடிய போசனைப்பெறுமானங்களை இழக்கின்றனர்.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் உழைக்கின்ற தாய்மார்களுக்கும் ஆண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்றவாறு உணவுப் பொருட்களின் கொள்வனவு அமைய வேண் டும். ஆனால், பெருந்தோட்டப் பிரதேசத் தில் போசாக்கான உணவுப்பொருட்களை முழு குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்ற வகையில் கொள்வனவு செய்ய முடியாத வறுமை நிலையில் வாழ்கின்றனர்.
தோட்டங்களிலிருந்து கடைத்தெருக்கள் தூரத்தில் அமைந்திருப்பதாலும் போக்குவரத்துச் செலவுக்குப் போதிய பணம் இல்லாமையினாலும் தோட்டப்பிரதேசத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் தங்களுக்குத் தேவையான அன்றாட உணவுப்பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள்.
இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிறையுணவு கிடைக்காமையினால் கர்ப்பிணித் தாய்மார்களும் சிறுவர்களும் இப்பிரதேசத் தில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை நோயுற்ற வேளைகளிலும் அதன் பின்னரும் ஊட்டும் உணவுகள் முறைப்படி அமையாவிட்டால் விரைவாக குணமடைவதும் தாமதமடைகிறது. குழந்தைகள் நோயு ற்ற போது மிகக்குறைவான உணவுகளையே உண்பர். இதனை நிவர்த்திச் செய்யும் வகையில் குணமடையும் வரை கூடுதலா னப் போசாக்கு உணவுகளைக் கொடுக்க வேண்டும். பெருந்தோட்டப்பிரதேசத்தில் போசாக்கின்மைக்கு பல காரணங்கள் செல்வாக்குச் செலுத்தினாலும் குறிப்பாக, குழந் தைக்குத் தேவையான நிறையுணவை பெற்றுக் கொடுக்கக்கூடிய வருமானத்தை இவர்கள் கொண்டிருக்காமையும் போதிய நிறையுணவு கிடைக்காமையுமே பிரதான காரணங்களாக காணப்படுகின்றன.
நோயுற்ற வேளையில் பசி உணவுச்சத்துச் செறிவும் குறையும் போது குழந்தையின் வளர்ச்சித் தடைப்படுகின்றது. சில சமயங்க ளில் ஊட்டச்சத்துக்கள் அதிக விரயமாகின்றன. ஆனால், நோயுற்றிருக்கும் போது ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இதனால் குழந்தைகளுக்குத் தாய்மார்கள் தொடர்ந்தும் அடிக்கடியும் பாலூட்ட முயல வேண்டும்.
அத்துடன் வழக்கமாக குழந்தை உண் ணும் உணவுகளையும் போசாக்குக் கூடிய உணவு வகைகளையும் தொடர்ந்து ஊட்ட வேண்டும்.
கீரை, பழங்கள் என்பவற்றுடன் முட்டை, கிழங்கு போன்றவற்றையும் குழந்தைகளுக் குக் கொடுக்க வேண்டும். குழந்தையின் உடல் நீர்வற்றுதலைத் தடுக்கும் பொருட்டு இளஞ்சாயத் தேநீர், சுத்தமான கொதித்தாறிய நீரில் கரைத்த பழரசங்கள், செவ்விளநீர், சோற்றுக்கஞ்சி போன்ற நீராகாரங்களை தாராளமாகக் கொடுக்க வேண்டும் வயிற்றோட்டம் காணும் குழந்தைகளுக்குத் தாய்மார் மேலதிக நீரும் ஜீவனி கலவையும் பருக்க வேண்டும்.
குறிப்பாக நோயுற்றக் குழந்தைகளை மிகவும் பொறுப்பாகவும் முறையாகவும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிறு, சிறு தவறுகள் கூட குழந்தைக்கு ஆபத்தை உண்டாக்கலாம். பெருந்தோட்டப் பிரதேசத்தில் தாய்மார்கள் வேலைப்பழு, குடும்பச்சூழல், வீட்டுச்சூழல், தொடர் குடியிருப்புக்கள், போக்குவரத்து வசதி குறைவு, சுகாதாரமான சூழல் இன்மை, நோய் பற்றிய பூரண அறிவு இன்மை, மூட நம்பிக்கைகள் போன்றன காரணமாகவே நோயுற்ற குழந்தைகள் மிகவும் பாதிப்படைகின்றனர்.
வீட்டின் சுகாதாரச்சூழல் இன்மையால் வீட்டில் உள்ள அனைவருக்கும் நோய்த்தொற்றக்கூடிய ஆபத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. நோயுற்றக்குழந்தைகளை பக்கத்தில் இருந்து கவனிக்கக்கூடிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. வறுமையின் காரணமாக குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும் தேவைப்படும் போது மருந்துகளைப்பெற் றுக் கொடுக்கவும் முடியாதளவிற்கு இவர்க ளின் வருமான மட்டம் குறைவாகக் காணப்படுகின்றது. குழந்தைகளை வீட்டிலிருந்து கவனிக்கும் போது தொடர்ந்து வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அவ்வாறு வீட்டில் இருக்கும் நாட்களுக்கு சம்பளம் கிடைக்காமையால் குறிப்பிட்ட மாதச்சம்பளம் குறைகின்றது. இதனால் இவர்கள் நோயுற்றக் குழந்தைகளைக்கூட சரியான முறையில் கவனித்து மேலதிக உணவுகளை யோ, பாதுகாப்பையோ வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் வாழ்கின்றனர்.
நோயுற்றக் குழந்தைகளுக்கு உணவூட்டுவதிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. சுத்தமான உணவூட்டும் பாத்திரம், சுத்தமான குடி நீர், முறையாகத் தயாரித்த உணவுகள் போன்றன கிடைக்காமையினால் இக்குழந்தைகள் மேலும், மேலும் நோய்வாய்ப்படக்காரணமாகின்றன.
பெருந்தோட்டப்பிரதேசத்தில் குழந்தை கள் நோய்வாய்ப்படும் போது தோட்ட மருத்துவமனையிலேயே நோய்க்கான பரிகாரங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அத்துடன் வெளி வைத்தியசாலைகளுக்கு கொண்டுச் சென்று சிகிச்சையளிக்க முடியாத நிலையும் உள்ளது. அத்துடன் குழந்தைக்குத் தேவையான போசாக்கான உணவுகளையும் விற்றமின்களையும் பெற்றுக்கொடுக்க முடியாதள விற்கு அவர்களின் குடும்பச்சூழல் அமைந்துள்ளது.
தொடர்ந்து வைத்தியர்களின் ஆலோசனை ப்படி நோயுற்ற குழந்தைகளை கவனித்து உணவுகளைக் கொடுக்கும் அளவிற்கு இவர்களுக்கு குழந்தைப் பராமரிப்பு பற்றிய அறிவு. சுகாதாரக்கல்வி பற்றிய அறிவு போன்றன குறைவான மட்டத்திலேயே காணப்படுகின்றதை அவதானிக்கலாம்.
குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும் ஆரோ க்கியத்திற்கும் துரிதமாக வளரும் பருவங்களிலும் போசாக்கான உணவு மிகவும் அதிக மாகத் தேவைப்படுகிறது. முக்கியமாக உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்தும் வளர்ச்சிக்குத்தேவையான மாப் பொருளும் கொழுப்பு சத்துள்ள உணவும் அதிகளவில் தேவைப்படுகிறது. கருவில் வளரும் குழந்தைக்கும் பால் குடிக்கும் குழந்தைக்கும் தேவையான அதிக சத்து க்களை குழந்தை தாயின் உடம்பிலிருந்தே பெறுவதால் தாயின் ஊட்டச்சத்து தேவையும் அதிகமாகிறது.
கருத்தரித்தவுடன், குழந்தை பிறந்தவுட னும் பாலூட்டும் காலத்திலும் தாய் போசா க்கான உணவுகளை உண்ண வேண்டும். இவ்வாறு உண்ணாவிட்டால் கருவின் ஊட் டமும் குழந்தையின் ஊட்டமும் பாதிக்கப் படுவதால் அக்குழந்தையானது வளர்ச்சிக் குன்றிக் காணப்படும்.
மேற்கூறிய காரணங்களுக்குச் சான்றுகளா கப் பெருந்தோட்டப் பிரதேசத்தில் கர்ப்பகா லத்தின் போதும் குழந்தைப் பிறக்கும் போதும் பாலூட்டும் காலத்திலும் நல்ல உணவுகளை உண்ணாமல் விடுவதால் தாயின் போசாக்குக் குறைவதுடன் பிறக்கும் குழந்தையும் போசாக்கு குன்றியதாகப் பிறக் கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...