பாடசாலை மட்டத்தில் இளம் பருவ வயதினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இப்பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. எதிர்காலத்தில் நல்ல மனநிலையினையும் அறிவினையும் உடைய மாணவர்களை உருவாக்கும் பணி ஆசிரியர்களிடத்திலேயே உள்ளது. மாணவர்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சிறந்த பிரஜைகளாவதற்கு சமுதாயமும், சூழலும் சிறப்பாக அமைய வேண்டும். அதற்காக பாடசாலை மட்டத்தில் வழிகாட்டலும் ஆலோசனைகளும் இன்றியமையாதவையாகும்.
நாட்டில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இந்த ஆசிரியர்கள் மாணவ சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவை செய்து வருகின்றனர்.
பல்வேறு தரங்களில் பயிலும் மாணவர்கள் பலவகையான பிரச்சினைகளையுடைய வர்களாகக் காணப்படுகின்றனர். சில மாண வர்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில் எதி ர்கால சிந்தனையற்றவர்களாகக் காணப்படு கின்றனர். நெறி பிறழ்வான நடத்தைகளி னால் விரோதச் செயல்களில் ஈடுபடும் மன உணர்வு கொண்டவர்களாகவும் செயல்படுகின்றனர்.
ஆறாம் தரம் முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களே இவ்வாறான நிலைக்கு உட்பட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.
மாணவர்கள் பிள்ளைப் பருவத்திற்கு மா றும் போது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாக வும் சமூகவியல் ரீதியாகவும் பலவித மாற்ற ங்களுக்கு உட்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் இவர்களுக்கு மனரீதியான நெருக்கடிகளும் முரண்பாடுகளும் உண்டாகும். பெற்றோர் முதியோர் கட்டுப்பாட்டில் இருந்து சுதந்திரமாக நடக்க எத்தனி க்கும் தன்மை முதியோரின் கணிப்புகளை விட தமது சகபாடிகளின் கணிப்பி னைச் சிறந்த தாகக் கொள்ளும் மன நிலையில் உள்ளனர்.
எதற்கெடுத்தாலும் கோபம், தான் செய்வது தான் நியாயம் என்று நினைப்பர். பின் விளைவுகளைக் கவனத்தில் கொள்ளாமல் செயற்படும் தன்மைகள் மேலோங்கியவர்களாகவும் இருப்பார்கள்.
இவ்வாறு இப்பருவத்தினருடைய செயற்பாடுகள் இருந்தாலும் இவர்கள் பாடசாலை மட்டத்தில் அல்லது சமூக குடும்ப மட்டத்தில் பல பிரச்சினைகளை கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவற்றுள் பாடத் தெரிவுகள், புகைத்தல், மது பாவனை சம்பந்தமான பிரச்சினை, உடல் நிலை சம்பந்தமான தாழ்வு மனச்சிக்கல் உளச் சோர்வு ஆகியன முக்கியமானவை.
பெற்றோர், பிள்ளை, குடும்பப் பிரச்சினை, எதிர்ப்பார்ப்புகள் தோல்வி சம்பந்த மான பிரச்சினைகளுக்கும் இவர்கள் உட்படுகின்றனர். இதனால் தமது இனிமையான எதிர்காலத்தினை பறி கொடுக்கும் நிலைக் குத் தள்ளப்பட்டவர்களாகத் தத்தளிக்கின்ற னர்.
தற்போது சில மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரத்தில் என்ன பாடத்தினை தெரிவு செய்வது என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. சில மாணவர்கள் தமது பெற்றோர்கள், குடும்ப கௌரவத்தினையும், பொருளாதார அந்தஸ்தையும் வெளி உலகி ற்கு காட்ட வேண்டும் என்னும் நோக்கோடு செயற்படுவதை அவதானிக்கலாம். பிள்ளையினை கணிதப் பிரிவிற்கோ அல்லது விஞ்ஞானப் பிரிவிற்கோ சேர்ப்பதற்கு துடியாய் துடிக்கின்றனர்.
மாவட்ட ரீதியில் உயர் தர பாடசாலைகள் எங்கு உள்ளதோ அங்கே கொண்டு இணை க்க முயல்கின்றர். ஆனால் அப்பிள்ளையின் விருப்புகளைக் கேட்பதும் இல்லை. அத னால் பிள்ளை முழு மனதுடன் இத்துறை யில் பங்களிப்புச் செய்யாமல் க.பொ.த. உயர் தரப் பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் தோல்வியைச் சந்திக்கிறது. மற்றும் சில பிள்ளைகள் பாடம் சம்பந்தமாக தேர்வு செய்யும் போது அப்பாடசாலையில் கற்பிக்கப்படாத பாடங்களை எடுக்க முற்படுவதும் சிக்கல்களை தோற்றுவிப்பதாகவே உள்ளன.
அடுத்தாக எதிர்காலம், தொழில், வாழ் க்கை சம்பந்தமான பிரச்சினையும் இன்று இப்பருவத்தினரிடையே மேலோங்கிக் காணப்படுகின்றது. ஏனெனில் இப் பரீட் சைகள் ஒருவரின் எதிர்காலத்தினை நிர்ண யிப்பதாக அமைகிறது. இன்று க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெற்ற மாணவன் ஓர் துறையினைத் தெரிவு செய்கையில் அதனோடு அவனது தொழிலுக்கும் அடித்தளம் இடுகின்றான். அதாவது தான் ஒரு வைத்தியனாக வரவேண்டும் என நினைக்கும் ஒருவன் விஞ்ஞான பிரிவினைக் கற்க முற்பட வேண்டும். தான் ஒரு பொறியியலாளனாக வரவேண்டும் என நினைக்கும் ஒருவன் கணிதத் துறையினை மேற்கொள்ள வேண் டும். தான் ஒரு கணக்காளராக முகாமையாளராக வரவேண்டும் என எண்ணம் கொண்டவன் வர்த்தகப் பிரிவினை தெரிவு செய்ய வேண்டும். எனவே தங்களின் எண்ணப்படி கற்க வேண்டும் என்றால் அப்பாட நெறியினை கருத்தாழமுடன் கற்க வேண்டும். ஆனால் இன்று தம் தொழிலைக் கூடத் தீர்மானிக்க திறமையற்றவர்களாக இன்றைய இப்பருவத்தினர் தடுமாறுகின்றனர்.
இக்காலப் பகுதியில் புது அனுபவங்க ளைப் பரீட்சித்துப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமுடனும் துடிப்புடனும் இளையவர்கள் செயல்படுவர். ஆனால், இதில் ஒரு சிலரே போதைப் பொருளுக்கு அடிமையாகின்ற னர். வேறு சிலர் தூண்டுதல்கள் காரணமாக வும் இதைப் பாவிக்க முற்படுகின்றனர். வேறு சிலர் தமது நண்பர்களின் அழுத்தம், வற்புறுத்தல், உளத்தாக்கம், நெருக்கடிகள் தாழ்வுச் சிக்கல் போன்றவற்றால் இப்பழக்கத்திற்கு உந்தப்படுகின்றனர்.
இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி மீள முடியாதவர்களாகத் தத்தளிக்கின்றனர். இன்றைய கால கட்டத்தில் இப்போதைப் பொருள் பாவனை கூடுதலாக நகரப் பாடசாலைகளிலும் நகர்ப்புற த்தை அண்டிய பாடசாலைகளிலும் பரவலாக காணப்படுகிறன. இதற்கு முக்கிய கார ணம் சினிமாவின் பங்களிப்பு. இதனால் அச் சினிமாவினை பார்க்கின்ற பருவ வயதினர் அதன்படி நடக்க முனைகின்றமையும் ஓர் காரணமாகக் கொள்ளலாம்.
இன்று சமூகத்தில் குடிகாரன் எனும் கௌரவப் பட்டம் பெற்றுள்ள ஒருவனைக் கேட்டுப் பார்த்தால் அவனது அனுபவத் தைச் சொல்லுவான். ஒருவன் தான் எதிர்காலத்தில் ஒரு சிறந்த குடிகாரனாக வரவேண் டும் எனும் எண்ணத்தில் தமது மது போதை பாவனையினைத் தொடங்கவில்லை. அவன் அன்று நண்பர்களுடன் இணைந்து மகிழ்ச்சிக்காகவும் உல்லாசத்திற்காகவும் பாவிக்க முற்பட்டவன். இன்று மதுவின் போதை க்கு அடிமையாகி குடிகாரனாய் சமூகத்தின் முன் காட்சிப்படுத்தப்படுகிறான். ஆகவே நாளைய குடிகாரப் பட்டம் பெறுபவர்கள் இன்றைய நிலையில் இப்போதைப் பொருள் பாவிப்பவர்களாகவே இருப்பார்கள்.
இளம் பருவத்தினருக்கு மன உளைச்சல்களைக் கூட ஏற்படுத்துவனவாக இவை காணப்படுகின்றன. அதாவது பிள்ளை தன க்குப் பிடித்த ஒரு பொருளினை அப்பெற் றோரிடம் கேட்கும் போது பெற்றோர் அதை தட்டிக் கழிக்கின்றனர். ஒரு சில பெற் றோர்கள் ஏசுகின்றனர். இன்னும் சிலர் தண்டனை வழங்க முற்படுகின்றனர். இந் நடவடிக்கையானது பிள்ளையின் முழு ஆளு மையினையும் சிதைக்கும் நடவடிக்கையாய் அமைந்து விடுகிறது. பாடசாலை மட்டத் தில் இப்பிள்ளையினுடைய உணர்வுகளை வெளிக்காட்டும் போது அப்பிள்ளை மற்றவர்களுக்கு ஒரு குற்றவாளியாகவும் காட்சிப்படுத்தப்படும் சூழல் உருவாகிறது. நெறி பிறழ்வான பிள்ளையாகவும் சொல் கேளாத பிள்ளையாகவும் வன்முறை கொண்ட பிள்ளையாகவும் மாற்றமடைய உந்து சக்தி இதன்மூலம் அளிக்கப்படுகிறது.
இவ்வாறாக இன்று பாடசாலை மட்டத் தில் இளம் பருவ வயதினர் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இப்பிரச்சினைகளிலிருந்து காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பு ஆசிரியர்களிடமே உள்ளது. எதிர்காலத்தில் நல்ல மனநிலையினையும் அறிவினையும் உடைய மாணவர்களை உருவாக்கும் பணி ஆசிரியர்களிட த்திலேயே உள்ளது. இவைகளிலிருந்து விடு பட சமுதாயமும் சூழலும் இம் மாணவர்களுக்கு சிறப்பாக அமைய வேண்டும். மேலும், பாடசாலை மட்டத்தில் வழிகாட்ட லும் ஆலோசனைகளும் இன்றியமையாத தொன்றாகும்.
இலங்கை பாடசாலை கல்வி வரலாற்றில் 1940ஆம் ஆண்டு வழிகாட்டல் ஆலோசனை சேவை ஆரம்பிக்கப்பட்டு 1950ஆம் ஆண்டு ஒவ்வொரு பாடசாலைகளிலும் திரள் பதிவு கள் பேணும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இடையில் கைவிடப்பட்டது. இதன் பின் 1960ஆம் ஆண்டு பல கல் வியியலாளர்கள் பாடசாலை மட்டத்தில் இவ் ஆலோசனை வழிகாட்டலின் அவசி யம் பற்றி பல கருத்துக்களை முன் வைத்த னர். ஆனால் காலாவதியாகியுள்ளன. 1981 ஆம் ஆண்டு வெளி வந்த கல்வி வெள் ளை அறிக்கையில் 34ஆம் உறுப்புரை முதல் 50 வரையிலான உறுப்புரைகளில் வழி காட்டலின் முக்கியத்துவம் வலியு றுத்தப்பட்டு 1982 இல் ரியாவுன் மித்துரோ எனும் ஆலோசனை சேவை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் மலையகத்தில் மிகவும் குன்றிய நிலை காணப்படுகிறது. ஆலோசனை வழிகாட்டல் முறையாக நடை பெறாமையினால் இளம் பருவ மாணவர்கள் பல பிரச்சினைகளுக்கு உட்படுகின்றனர். எதிர்கால வாழ்வினை பாலை வனமாக்கி வருகின்றனர். பிரதேச கோட்டக் கல்வி மாவட்ட கல்விப் பணிப்பாளர்களும் பாட சாலை அதிபர்களும் முன் நின்று செயற் பட்டு வருகின்றனர். எம் சந்ததியினரை நற் பிரஜைகளாக்க முன் வருவது அவர்களின் தலையாய கடமைகளில் ஒன்றாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...