இலங்கையில் வாழும் சிறுபான்மையின சமூகங்களுக்கிடையில் மலையக மக்கள் மிகவும் வலிமைமிக்க சமூகமாகத் திகழ்வதாக மூத்த ஆய்வாளரும், எழுத்தாளருமான பீ.ஏ.காதர் தெரிவித்துள்ளார். எனினும் அந்த மக்களின் பலத்தை எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் அண்மையில் லண்டனில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்துத் தெரிவித்த காதர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன முதல் அனைத்து சிங்களத் தலைவர்களும் மலையக மக்களின் பலத்தை அறிந்து, அந்த பலத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன், தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளார். அதேவேளை தமது சுயலாப அரசியலுக்காக மலையக அரசியல் கட்சிகளும், அதன் தலைமைகளும் ஒற்றுமையுடன், பலமான சமூகமாகத் திகழும் மலையக மக்களை தொடர்ந்தும் சீரழித்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுமாத்திரமன்றி மலையக மக்களை பார்த்து அனுதாபப்படுவதோ அல்லது அவர்களை ஒரு தொழிலாளர்களாக மாத்திரம் கருதி அவர்களை அணுக முற்படுவதோ மிகவும் மோசமான ஆணவத்தினதும், அகங்காரத்தின் வெளிப்பாடுகள் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
நன்றி - ஆதவன் நியுஸ்
நன்றி - ஆதவன் நியுஸ்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...