இன்று எமது நாட்டில் இலவச கல்வி முறைமையே இருந்து வருகின்றது. இலவசக் கல்வியின் தந்தை என போற்றப்படும் C.W.W. கன்னங்கரவினால் இக்கல்வி முறைமை எமது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனோடு தொடர்புபட்டதாக இலவச நூல்களை மாணவர்களுக்கு வழங்கல், இலவச சீருடை வழங்கல் மற்றும் இலவச மதிய உணவு வழங்கல் என்பன இத்துறையில் காலம் செல்லச் செல்ல புகுத்தப்பட்டது. மறைந்த ஜனாதிபதியான அமரர் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்-திலேயே இலவச நூல்கள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு தற்போதும் நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், மறைந்த ஜனாதிபதியான அம ரர் ரணசிங்க பிரேமதாஸ காலத்தி-லேயே இலவச மதிய உணவு பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்-டது. ஆயினும், அதுவும் இன்றைய நிலையில் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு, குறிப்பிட்ட தரத்துக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகிறது. இலவச சீருடையும் இவரின் காலத்திலேயே தொடங்கப்பட்டு தற்போ தும் அது செயற்படுத்தப்பட்டு வரு-கின் றது. ஆயினும், இலவசக்கல்வி முறைமையிலேயே பாடங்கள் பாடசாலையில் நடைபெற்று வருவதும் யாமறிந்ததே.
இதேவேளை, மலையக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் 'ரியூஷன் கல்வி முறை' இன்று ஆதிக்கம் செலுத்தி வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக-வுள் ளது. அரச பாடசாலையில் ஒரு சிலர் அர்ப்பணிப்புடனும் சேவை நோக்குட னும் தொண்டு அடிப்படையிலும் மேலதிக வகுப்புகளை பாடரீதியாக தரம் 05, க.பொ.த (சா/த), க.பொ.த. (உ/த) மற்றும் ஏனைய வகுப்புகளுக்கும் நடத்தி வரு-கின்றமை பாராட்டுக்குரியதே. அத்தோடு மட்டுமல்லாமல், மெல்லக் கற்கும் மாண-வருக்கான வகுப்புகள், மீத்திறன் மாணவர்களுக்கான வகுப்புகளும் சேவை நோக்கம் கொண்டவர்களால் நடத்தப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.
இதேவேளை, ஆசிரியர் சேவை என்பது விட்டுக் கொடுப்பு, தலைமைத்துவம், புரிந்துணர்வு, சேவை மனப்பான்மை, பொறுமை, திட்டமிடல், வேலைப்பகிர்வு, கொள்கை வகுப்பு, சமூக தொடர்பாடல், ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டியாகவும் முன்மாதிரியாகவும் இருந்து செயற்படும் தன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. இப்-படிப்பட்ட உயர் குணங்களையும் பண்புகளையும் கொண்ட இத்தொழிலுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் குறிப்பிட்ட ஒருசில ஆசிரியர்கள் இயங்கி வருவதானது வேதனையையும், கவலையையும் அளிப்பதாகவுள்ளது.
இந்நிலையில், மலையகத்தின் பிரதான நகரங்களான பதுளை, பண்டாவளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கம்பளை, கொட்டகலை, நாவலப்பிட்டி கண்டி மற்றும் மாத்தளை போன்ற நகரங்களிலும் சப்ரகமுவ, மேல் மாகாணத்திற்கு உட்-பட்ட பிரதான நகரங்களிலும் 'ரியூஷன்' கல்வியை பிரதான இலக்காகக் கொண்டு, வருமானத்தை மட்டுமே தனது குறிக்கோளாகக் கொண்டு, குறிப்பிட்ட ஒரு சில ஆசிரியர்கள் தனது கற்பித்தல் நடவடிக்கைகளை 'ட்ரியூட்டரி' களில் மேற்கொண்டு வருவது மாணவர்களை வேதனையின் விளிம்புக்கே இட்டுச் செல்லும் நடவடிக்கை-யாக அமைந்துள்ளது.இக்கட்டுரையானது பல மாணவர்களின் ஆதங்கமாகவும் மன-வெழுச்சியாகவும் உளக் குமுறலாகவும் இருப்பதனை பின்னணியாகக் கொண்ட-தையே இக்கட்டுரையின் மூலம் எடுத்தியம்பப்படுகின்றது.
மேலும், இன்று மலையகப் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் ஓய்வு பெற்ற ஒருசில ஆசிரியர்களும் பாடசாலையில், தனியார் நிறுவனங்களில் பணிபு-ரியும் ஒரு சிலர், ஏன் அரச பாடசாலைகளின் ஒருசில ஆசிரியர்களும்கூட பாட-சாலைக் கல்வி முடிந்த பின் மாலை நேரங்களில் ட்ரியூட்டரிகளிலேயே தனது முழுமையான காலத்தைச் செலவிடுகின்றனர். அதற்கான மேலதிக ஊதியத்தையும் அங்கு அவர்கள் பெறுகின்றனர். இக்கட்டுரையின் நோக்கம் ட்ரியூட்டரிகளில் ரியூஷன் கற்பிக்கும் ஆசிரியர்களை புண்படுத்தும் விதத்தில் எழுதப்பட்டதல்ல. நல்நோக்கம் கொண்ட ரியூஷன் முறைகளை வரவேற்கின்றோம். அதேநேரம் மாணவர்களின் பொருளாதார நிலைமை, அவர்களின் ஒழுக்கம், பண்பாடு, விழுமியம், கற்றல் செயற்-பாடு மற்றும் நடத்தைப்பாங்கு அறிவு, திறன், மனப்பாங்கு ஆகியவற்றை விருத்தி செய்யும் நல்ல எண்ணம் கொண்ட ட்ரியூட்டரிகளையும் அதன் நிர்வாகிகளையும் எம்மால் குறை கூற முடியாது.
இருப்பினும் ஒரு பிள்ளைக்கு 1000 ரூபாய் தொடக்கம் 1500 ரூபாய் வரை ஒரு பாடத்திற்கு ஒரு நாளைக்கு ஓரிரு மணித்தியாலங்களுக்கு அறவிடும் ஆசிரி-யர்கள்,மாத ரீதியாக பெருந்தொகைப் பண த்தை அறவிடும் ஆசிரியர்கள், பாடசா-லைகளில் தனது கற்பித்தலை முழுமைப்படுத்தாது, மாணவர்களை தனது மேலதிக வகுப்புக்கு இழுத்தெடுக்கும் ஆசிரியர்கள், கூடுதலான பணத்திற்கு குறைந்தளவு மணி நேரத்தை கற்பித்தலுக்காக செலவிடும் ஆசிரியர்கள், பின்னேரம் ரியூஷனுக்கு வாருங்கள், அங்கு நான் கற்பித்துத் தருகிறேன் என தனது சுயவருமானத்தை மாத்-திரம் இலக்காகக் கொண்டு கூறும் ஆசிரியர்கள், மாணவர்களின் எந்தவிதமான நன்-நடத்தைகளையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிந்திக்காத ஆசிரியர்கள் மற்றும் சேவை மனப்பான்மை கிஞ்சித்தும் இல்லாத ஆசிரியர்கள் ஒருவிடயத்தை தனது சிந்த-னையில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதாவது நாட்டிற்கு ஏற்ற நற்பிரஜைகளை உருவாக்குவதானது கல்வியின் பல நோக்கங்களில் ஒன்றாகும். அந்நோக்கத்தை நிறைவேற்றும் வகையிலும் ஒரு நல்ல ஆசானாக, வழி காட்டியாக, முன்மாதிரியாக திகழ்வதே நல்லாசிரியரின் கட-மையாகும். அதைவிடுத்து மாணவர்களை தவறான வழியில் இட்டுச் செல்பவரா-கவும் பெற்றோரின் பொருளாதார நிலைமைகளை அறியாதவராகவும் தனது சுய இலாபத்தை மாத்திரமே மையமாகக் கொண்டு தனது கற்பித்தலை செய்யும் ஒரு சில ஆசிரியர்கள், தனது தவறுகளை திருத்தி ஓர் நல்லாசானாக இச் சமுதாயத்தில் மிளிர்வதற்கு தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், ஒரு சிலர் வீடுகளுக்குச் சென்று தனிப்பட்ட வகுப்புகளையும் குழு-முறை வகுப்புகளையும் தரம் 05, க.பொ.த. சாதா ரண தரம், உயர்தர வகுப்புக-ளையும் நடத்தி வருகின்றனர். இதற்காக அளவுக்கதிகமான பணத்தை மாணவரிடமி-ருந்து வசூலிப்பதாகவும் மாணவர்களது பெற்றோர்களும் இப்பகுதி வாழ் நலன்புரி-களும் அங்கலாய்க்கின்றனர். அத்தோடு பாடசாலையின் பாட ரீதியான பாடத்திட்-டத்தை உள்ளடக்கியதாகவே இது அமைய வேண்டும். ரியூஷன் பணம் என்பது பெற்றோரின் பொருளாதார நிலை, தொழில் புரிவோரின் எண்ணி க்கை, பிரயாணச்-செலவு, பாடம் நடைபெறும் நாள், மணி, குடும்ப சுயவிபரம், வகுப்பிலுள்ள மாணவர் எண்ணிக்கை என்பனவற்றைக் கொண்டே அறவிடப்பட வேண்டும். இது பெற்-றோரால் ஒரு பாட த்திற்கு செலுத்தக்கூடிய சாதாரண கட்ட ணமாகவும் யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணமாகவும் அமைதல் வேண் டும். அதைவிடுத்து தான் நினைத்த கட்டணமாக பெற்றோராலும் மாணவராலும் விமர்சிக்கப்படும் கட்டணமாக இது அமையக்கூடாது.
இதேவேளை, முன்பள்ளி காலம் முதல் வெளிவாரி பட்டப்படிப்புகள் வரை அநேகமான பெற்றோர் தனது பிள்ளைகளை பணத்தைச் செலவழித்தாவது கல்வி-யூட்டுவதற்கு மேலதிக வகுப்புகளையே நாடுகின்றனர். இதற்கான காரணங்களாக அமைவது யாதெனில், பாடசாலைக் கல்வியில் ஒரு சிலரின் எண்ணங்களில் தப்-பான அபிப்பிராயம் நிலவுவது, ஒரு சில பாடசாலைகளில் பாட ரீதியாக நிபுணத்-துவம் பெற்ற ஆசிரியர் நியமிக்கப்படாமை. குறிப்பிட்ட ஆசிரியரின் புலமை, பக்கத்து வீட்டுப்பிள்ளை ரியூஷன் வகுப்புக்குச் சென்றால் தனது பிள்ளையும் அந்த வகுப்-புக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு எண்ணப்பாடு, வகுப்பறைகளில் ஒரு சில ஆசிரியர்கள் மாணவர்களை மேலதிக வகுப்புக்கு வருமாறு கட்டாயப்படுத்தல், விடய ரீதியான முக்கியமான பகுதிகளை மேலதிக வகுப்பில் ஒரு சிலர் கற்பித்தல், மேல-திக வகுப்புக்கு வராவிட்டால் ஒரு சில ஆசிரியர்கள் வகுப்பறைகளில் மாணவர்க-ளுக்கு தண்டனை வழங்குதல், ஒவ்வொரு பெற்றோரிடமும் காணப்படும் முக்கிய அம்சமான, தனது பிள்ளை ஏனைய பிள்ளையப்போல் சமூகத்தில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற பெற்றோரின் உயர்ந்த எண்ணம் மற்றும் ஆசிரியர்களுக்கி-டையான போட்டி மனப்பான்மை (மேலதிக வகுப்பு வைப்பதில்) என்பனவற்றை குறிப்பிடலாம். இவ்வகையான காரணங்களினால் 'ரியூஷன் கல்வி' பல்வேறு துறை-யினராலும் ஊக்குவிக்கப்படுகிறது.
மேலும், அரச பரீட்சைகளில் பாடத்திட்டத்தை முழுமையாக தழுவியதாகவே வினாத்தாள் வழங்கப்படுகின்றது. இப்படியிருக்கும்போது பல்வேறு விதமான கடந்த கால வினாக்களையும் மாதிரி வினாத்தாள்களையும் மாணவர்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர். பயிற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். இது சரியாக அமைந்தாலும்கூட அது வியாபார நோக்கமாக முழுமையாக மாறக்கூடாது.
அது மட்டுமல்லாது, கருத்தரங்கு என்ற போர்வையில் மாணவரிடம் ஒரு சில பாடசாலைகளில் பணம் அறவிடப்படுகிறது. அதுவும் கூடுதலான மாணவர்களை உள்ளடக்கி, குறைந்த ஆளணியினரைப் பயன்படுத்தி, ஒலி பெருக்கி சாதனங்களின் மூலம் விளக்கவுரை நடத்தப்படுகின்றது. இது பிரயோசனமற்றதாகவே சில வேளைகளில் அமைந்து விடுகின்றது. இலவச கருத்தரங்கு என்று நடைபெறுமாயின் அது பாராட்டப்படவேண்டிய விடயமாகும். சில பாடசாலை அதிபர்கள் இலவச பாடரீதியான செயலமர்வுகளையும் கல்வித்திணைக்கள மூலமான இலவச செயல-மர்வுகளையும் நடத்துகின்றனர். கல்வித் திணைக்களம் மூலம் முக்கிய வகுப்புக-ளுக்கு இலவச ஒப்படைகளும் மாதிரி வினாத்தாள்களும் வழங்கப்படுகிறது. இந்த செயற்பாட்டை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதேவேளை, சுமார் 25 வருடங்களுக்கு முன்பு மலையக மாணவர்கள் பாட-சாலைக் கல்வியை மாத்திரமே நாடியிருந்தனர். அச்சமயத்தில் அநேகமானோர் குறிப்பிட்ட கால எல்லையில் கற்று இன்று சமூகத்தில் உயர் நிலையில் இருப்பதை யாமறிவோம். மேலதிக வகுப்புக்கள் அக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் மிக-மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
மேலும், குறிப்பிட்ட திகதியில் தனது பிள்ளைகளின் ரியூஷன் பணத்தைக்கூட செலுத்த முடியாத நிலைமைக்கு ஒரு சில பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். பணம் செலுத்தாத பட்சத்தில் உளவியல் ரீதியான தாக்கத்திற்கும் மாணவன் வகுப்-புக்குச் செல்ல முடியாத நிலைமைக்கும் தள்ளப்படுகிறான். தாழ்வுச்சிக்கல் மாண-வனை தொற்றிக் கொள்கிறது.
மலையக தோட்டப்புறங்களிலிருந்தும் மலையகத்தைச் சூழவுள்ள நகர்ப்புறங்-களிலும் களுத்துறை மாவட்டம், கேககாலை மாவட்டம், இரத்தினபுரி மாவட்டம், காலி, மாத்தறை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப் பிள்ளைகளும் பெரும் சிரமத்-திற்கு உள்ளாகின்றனர். அது மட்டுமல்லாது ஊவா, மத்திய மாகாணத்தில் வதியும் பிள்ளைகளும் தர்மசங்கடமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏன் கம்பஹா, கொழும்பு மாவட்ட பிள்ளைகள்கூட இக்கட்டான நிலைமையினையே எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆகவே, ஆசிரியர் நியமனம் பெற்றுக் கொண்டு எமது சமுதாயத்திற்கு சேவை புரிய வந்துள்ள ஆசிரியர்கள், தங்களது சேவையை முழுமையாக எமது பிள்ளை களுக்கு வழங்குங்கள். ஒரு சிலரின் செயற் பாடுகளால் அனைத்து ஆசிரியர்களை யும் இதில் உள்ளடக்க முடியாது. அந்த ஒரு சிலர் தங்களது தவறை உணர்ந்து கொள்ளவும். ஆசிரியர் தொழிலை ஒரு சேவை நோக்கம் கொண்ட தொழிலாக எண்ணவும். ஆசிரியர் எனப்படுபவர் தன் னலமற்றவராகவும் பரந்த மனப்பான்மை யுடையவராகவும் பொறுமையுள்ளவராக வும், சிறந்த நற்பண்புகள், ஆளுமையுடை யவராகவும் ஒழுக்க விழுமியங்களை பேணக்கூடியவராகவும் இருக்க வேண் டும். குறிப்பிட்ட ஒரு சிலரின் செயற்பாடு இவ்வாறு இல்லாமல் இருப்பது எமது மலையக சமூகத்திற்கு வேதனையைத் தரு கின்றது.
எனவே, நாடு போற்றக்கூடிய நற்பிரஜை களை உருவாக்குவதற்கு எமது மலையக ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அதற்கு மாணவர்களது பெற்றோர்களும் உறுதுணை யாயிருக்க வேண்டும். மலையக கல்வியில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண் டும். தவறை உணர்ந்து செயற்பட வேண் டும். இதுவே பெருந்தேட்ட மலையக சமூ கத்திற்கு நாம் செய்யும் பாரிய நற்பணி யாகும்.தோட்டப்புற இளம் சிறார்களின் எதிர்காலம் உங்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. அதற்கு ஒப்ப நடந்து கொள்வது எம் அனைவரினதும் தார்மீகக் கடமையா கும்.
பண்டாரவளை ரி.லிங்கம்
நன்றி - வீரகேசரி 01.06.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...