மலையக மக்களின் வீடமைப்பு தொடர்பான விடயங்கள் மலையக மக்க ளிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இந்த வீடமைப்பு பற்றிய செய்திகள் தகவல்கள், கருத்துக்கள் என்பவற்றுக்கு ஊடகங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
மலையக சமூகம் சார்ந்த அமைப்புக்கள், மன்றங்கள், இயக்கங்கள் என்பன இந்த விடயத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றன. வழக்கம் போல ஒரு சில தொழிற்சங்கங்கள் தமக்கு சாதகமாக இதனை பயன்படுத்திக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
வீடமைப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அவ்வப்போது தத்தமது கருத்துக்களை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தற்போது மலையக மக்களுக்கான வீடமைப்பு இரண்டு வகையில் மக்களிடையே முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளன.
* அரசின் 50 ஆயிரம் தொடர் மாடி வீடு கள்
* இந்திய அரசின் 5 ஆயிரம் வீடுகள்
இந்த வீடமைப்புத்திட்டங்கள் தொடர் பில் குறித்த இரு தரப்புக்களும் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் மாடி வீடு வேண்டாம் தனித் தனி வீடுகளே அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தர ப்பிலிருந்து ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டு வருகின்றன. அதையே மலையக சமூக அமைப்புக்களும் ஒரு சில தொழிற்சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
அத்துடன் இந்திய வீடமைப்புத் திட்டம் குறித்த ஒருசில அரசியல் தொழிற்சங்கங்களிடையிலோ அல்லது அமைப்புக்களிடம் வழங்கப்படக்கூடாது என சில மலையக தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதுமட்டுமன்றி இந்திய உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்து தமது கோரிக்கையை வலியுறுத்தியும் உள்ளன.
அதேவேளை, இந்திய வீடமைப்புத்திட்டத்தில் வேறு எவரும் உரிமை கொண்டாட முடியாது. தமது அமைப்புக்கு மாத்திரமே அது பற்றி பேசுவதற்கு உரிமை இருக்கிறது என்று வேறு சில மலையக அமைப்புக்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.
வீடமைப்பு தொடர்பில் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் இந்த அமைப்புக்கள் "நான். நீ" என அடித்துக் கொள்ளத் தொடங்கி விட்டன. இந்த அரசியல் தொழிற்சங்கங்களின் சண்டையினால் அறிவிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுமா? என்ற ஒரு சந்தேகம் கூட எழுந்துள்ளது.
எவ்வாறெனினும், இந்த அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் பற்றி இந்தியா நன்கு அறிந்திருக்கின்றது என்றும் எனவே தமக்கே உரிய திட்டமிடலுடன் அந்த நாட்டு அரசு வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுக்கும் என்றும் மலையக செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
உண்மையில் வீடுகள் இல்லாத மலையக மக்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும். அங்கு கட்சி அரசியல் தொழிற்சங்க பாகுபாடுகள் இருக்கக்கூடாது. வீடற்ற, வறிய, இந்திய வம்சாவளி மக்கள் அனைவருக்கும் வீடுகள் பெற்றுக் கொடுக்கப்படுமானால் அது வரவேற்கப்படக்கூடியதாகும்.
தமது தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் அல்லது தங்களது அரசியல் ஆதரவாளர் என்பதற்காக சகல வசதிகளுமுள்ள ஒருவருக்கு வீடு வழங்கப்படுமானால் அது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். இதனால் பாதிக்கப்படுபவர்கள் வறியவர்களாகும்.
ஒரு சில கட்சிகளுக்கு இந்த வீடமைப்புத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படக் கூடாது. அனைவருக்கும் சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென்பதே சமூக நோக்குள்ள அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
எனவே இந்த சந்தர்ப்பத்தை மலையக அரசியல் சமூக தலைமைகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, மலையகத்தில் அரசாங்கத்தினால் வீடமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல தோட்டங்களில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடனுதவியுடன் சுயவீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தோட்ட நிர்வாகத்தில் 7 பேர்ச் காணி வழ ங்கப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கடனுதவியுடன் தொழிலாளர்களே சுயமாக வீடுகளை அமைத்துக் கொள்ளும் இந்தத் திட்டம் தொழிலாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அதன் பின்னர் ஒரு சில தோட்டங்களில் தொடர்மாடி வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன.
இன்னும் சில தோட்டங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் வீடமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வீடமைப்புத்திட்டங்களை ஆரா ய்ந்து பார்த்ததில் தனித்தனி வீடுகளுடனான வீடமைப்புத் திட்டங்களே சிறந்தவை என்று பல்வேறு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். எனவே அது போன்ற வீடமைப்புத்திட்டங்களே தேவையென்று தற்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் வீடமைப்புத்திட்ட ங்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மலையக அரசியல் தலைமைகள் முன்வர வேண் டும் என்பதே எதிர்பார்ப்பாகும். அரசாங்கத்தின் 50 ஆயிரம் தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் மற்றும் இந்திய அரசின் 5 ஆயிரம் வீடமைப்புத் திட் டங்களின் அறிவிப்புக்கள் மலையக தொழி ற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிக ளிடையே முரண்பாடுகளையும் கருத்து வேற்றுமைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன என்பது வெட்ட வெளிச்சமாகும். இவை அனைத்தும் களைந்தெறியப்பட வேண்டும்.சமூக நலனைக்கருத்திற் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகள் தொழிற் சங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் அனை த்தும் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும். அதன் மூலம் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணமுடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நன்றி - வீரகேசரி 25.05.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...