Headlines News :
முகப்பு » » மலையக நாவல்கள் பற்றிய தகவல்கள் திரட்டுவதற்கு காலம் அரும்பியுள்ளது – சாரல் நாடன்

மலையக நாவல்கள் பற்றிய தகவல்கள் திரட்டுவதற்கு காலம் அரும்பியுள்ளது – சாரல் நாடன்


தமிழ் நாவல்களில் 'தேடலும் திரட்ட லும்' என்ற தலைப்பில் 2004இல் கோவை ஞானி ஒரு நூலை அச்சில் தந்துள்ளதைப்போல நம்மில் ஒருவர் மலையக நாவல்க ளைப் பற்றிய தகவல்களை தேடித் திரட்டுவதற்கான காலம் அரும்பிவிட்டது என்று நினைக்கிறோம்.

சின்னப்ப பாரதியின் சங்கம் 1962களில் இந்திய கொல்லிமலை வட்டாரத்தின் நிலைவரங்களை வைத்து எழுதப்பட்ட நாவல் என்று கூறும் ஞானி, நாவல் எழுதத் தொடங்கிய காலம் 1978என்றும் 1978 – 1983 காலச் சூழ்நிலைகள் நாவலில் இடம்பெறவில்லை என்றும் கூறுகிறார். இலங்கை தேயிலைத் தோட்டங்களிலிருந்து திரும்பிய சீரங்கன் மூலம் தொழிற்சங்க அறிவைப் பெறும் சடையன், சிறையிலும் வெளியிலும் தலைவர்களை சந்திப்பதைக் கூறி அவர்களால் ஆட்கொள்ளப்படுவதை சித்தரிக்கிறார். மொத்தம் 37பேரின் நாவல்கள் இந்நூலில் கூறப்பட்டிருக்கின்றன.

எஸ்.கிருஷ்ணன் என்பவர் ஜனசக்தி இதழில் எழுதிய 'தேயிலைத் தோட்டத்திலே,' புதுமைப்பித்தன், மணிக்கொடி இதழில் எழுதிய 'துன்பக்கேணி' இரண்டும் இலங்கைக்கு நேரடியாக வருகை தராமலேயே தமிழக எழுத்தாளர்கள் இலங்கையை அற்புதமாக படம்பிடித்து எழுதியமைக்கு உதாரணங்கள். 1930 காலப்பகுதியில் இவ்விதம் கதைகள் தோன்றியதன் பின்னால் இலங்கையின் இந்திய வம்சாவளியினர் அனுபவித்த கொடுமைகளை வைத்து புனையப்பட்ட நாவல் என கோகிலம் சுப்பையா எழுதிய 'தூரத்துப் பச்சை'1964இல் வெளியானது. இது தமிழகத்தோடு நேரடி தொடர்பு பேணியவரால் எழுதப்பட்ட நாவல். இந்நாவல் உருவாவதற்கும் வெளியாவதற்கும் சிதம்பரம் ரகுநாதன் நிறைய பங்களித்துள்ளார். இதே ஆண்டில் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து நந்தி எழுதிய 'மலைக்கொழுந்து' நாவலும் வெளி வந்தது. நான்கு ஆண்டு இடைவெளியில் பெனடிக்ற்பாலன் எழுதிய 'சொந்தக்காரன்' நாவலும் சென்னையிலிருந்து வெளி வந்தது.

வாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படு த்தும் 'தூரத்துப்பச்சை' நாவல் இலங்கை –இந்தியர் வாழ்க்கைனா ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தால் அந்தர பிழைப்பாக இருந்த சந்தர்ப்பத்தில் சந்தர்ப்ப பெறுமானம் பெற்ற நாவலாக இது வெளிவந்தது. முதன்முதலாக இலங்கை – இந்தியர் வாழ்க்கையைக் கூறும் தூரத்துப்பச்சை பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியிலும் யத்தன்சைட் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியிலும் பாட நூலாக வைக்கப்பட்டு பெருமைக்குள்ளானது. தமிழக அரசின் பிரதம காரியதரிசியாக விளங்கிய செட்டூர் இந்நாவலுக்கான முன்னுரையில் இந்தியாவின் நிலையைப் பற்றிய இந்திய ஆசிரியரே எழுதிய ஒரு அபூர்வமான நாவல் என்று கூறுகி றார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் கோகிலம் சுப்பையாவை அமெரிக்காவில் ஒரு கருத்தர ங்கில் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்த தைப் பற்றி மலையக அறிவு ஜீவி என்னி டம் கூறினார். தூரத்துப்பச்சை நாவலைப்பற்றி அவரிடம் கதைக்க முற்படுகையில் அவர் எந்தவிதமான சிரத்தையும் காட்டாதது தனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணி அந்த நாவலின் உருவாக்கத்தில் சிதம்பரம் ரகுநாதனின் பங்களிப்பை ஊர்ஜிதம் பண்ணியது என்றார். இந்த நூல் இரண்டாம் பதி ப்பைக் கண்டபோது பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த நாவலை செம்மைப்படுத் தியதில் சிதம்பரம் ரகுநாதன் பங்களிப்பு இருந்தது என ஒத்துக்கொண்டார்.

1968இல் தமிழகத்தில் அச்சாகி புத்தக வடிவில் இலங்கைக்கு வந்த நாவல் சொந்தக்காரன். குயீன்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த சின்னக் கலப்பன் தனது மகன் வீரமுத்துவுக்கும் தங்கை மகள் கண்ணம்மாவுக்கும் திருமணம் செய்து வைக்க முனைகிறான். தான் வாழும் காம்பரா இடவசதி போதாதிருப்பதால் தனியான ஒரு காம்பரா மகனுக் காக துரையிடம் கேட்கிறான். துரை அதற்கு சம்மதிக்கவில்லை. தொழிற்சங்கத்தலைவர் அண்ணாமலையிடம் ஆலோசனை கேட்டு தன் காம்பராவுக்கு எதிரில் தரிசு நிலத்தில் ஒரு குடிசை கட்டுகிறான். அதை உடைத்து விட்டு வர வேண்டுமென்று துரை கூறி விடுகிறான். மலைத் தோட்டத்தில் இருநூறு வருடங்களாகியும் இன்றுவரை அவர்களின் நிலைமை இதுதான்.

தொழிலாளிகளின் நிலைமை இன்றும் அதே விதத்தில் தானிருக்கிறது. வேலை செய்கிற வரைக்கும்தான் அவர்களுக்கு வீட்டில் குடியிருக்கும் நிலை. இல்லாது போனால் அடுத்த மாதமே அவர்கள் நடு ரோட்டில் நிற்க வேண்டிய நிலைமைதான்.

மலைக்கொழுந்து நாவலாசிரியர் நந்தி யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட வர். தொழில் நிமித்தம் பல ஆண்டுகள் மலையகத்தில் வாழ்ந்தவர். மலையக எழுத்தாளர் சிலரோடு நேரடியாக ஊடாடியவர். மலையகத் தோட்டத்து வைத்தியர்கள் சிலர் பொறுப்பற்று நடந்து கொள்வதையும் தனது முன்னேற்றத்துக்கான செயல்களை செய்வ தையும் டிஸ்பென்சர் பதியின் பாத்திரப்படைப்பில் வெளிப்படுத்துகிறார். தோட்ட த்து லயன்களில் காணப்படும் சுகாதார சீர்கேடுகள், பிள்ளை மடுவங்களின் நிலைமை கள், இருப்பிட வசதிக்குறைவுகள் என்பவ ற்றை அவதானித்து அழகுற ஆங்காங்கே கூறியுள்ளார்.

மலைக்கொழுந்து நாவல் தினகரன் ஏட் டில் தொடர் கதையாக வந்தகையோடு புத்தகமானது.
தமிழகத்தில் இருக்கின்ற பலருக்கும் இலங்கையின் தமிழர்கள் வாழ்வில் புகுந்திருக்கும் சோகம் நன்கு தெரிந்திருக்கிறது. போதாததற்கு அங்கிருந்து இங்கு சுற்றுப்பய ணம் மேற்கொள்ளும் எழுத்தாளர்கள் இங்குள்ள இந்திய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளில் கவனம் காட்ட தொடங்கியிருக்கிறார்கள்.

1970களில் தமிழகத்திலிருந்து இலங்கை வந்த தீபம் ஆசிரியர் நா. பார்த்தசாரதி 'மேகங் கள் மூடிய மலைகளுக்குப் பின்னால்' என்று ஒரு குறுநாவல் எழுதியிருந்தார். பின்பு வந்த ராஜம் கிருஷ்ணன் என்ற நாவலாசிரி யர் 'மாணிக்கக்கங்கை' என்ற பெயரில் ஒரு நாவலை 1986இல் எழுதி வெளியிட்டார்.

ஆங்கில ஆட்சியில் நாடு இருந்த காலத்தில் சேர் பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணப் பகுதியை சிலோன் நாட்டிலிருந்து பிரித்து சென்னை மாகாணத்தில் ஒரு மாவ ட்டமாக இணைக்க வேண்டுமென்று முயற்சித்தார் என்று கண. முத்தையா தன் பதிப்புரையில் கூறி இருந்தார். கதை பிறந்த கதை என்று தானெழுதிய முன்னுரையில் தேயி லைத் தோட்டங்களில் பணி புரிபவர்களின் பணி அல்லது வாழ்க்கை பற்றிய அவலமான செய்திகளெல்லாம் தனக்குப் பின்நாட்களில் கிடைத்ததாகவும் அது குறித்தெல்லாம் தான் சில கதைகளை எழுதி பார்த்ததாகவும் என்று கூறுகிற ராஜம் கிருஷ்ணன்.'

எழுத்து மனித உணர்வுகளின் பாதிப்புக ளின் எழுச்சிகளை வெளிக்கொண்டு வரும் வடிகால் என்பதால் இதுபோன்ற நாவலைத் தான் படைத்ததாகக் கூறியுள்ளார். மாணிக்கக்கங்கை நாவலை வாசித்து முடிக்கும் ஒரு வர் முருகேசு கதாபாத்திரத்தை மறக்க முடியாது. உண்மையில் 1986க்குப் பிறகு இலங்கைக்கு இந்திய இராணுவம் வந்தது. அதை நாவலாசிரியர் தன் நாவலில் தன் கற்பனைத்திறத்தால் முன்னமே ஊகித்தறிந்து எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இலங்கையில் ஏற்பட்ட இன வன்முறைக்குப் பின்னர் இங்கு பலர் வந்து போயினர். இந்த மண்ணிலிருந்து எழுதிய இலக்கிய குரலாக இருக்க முயற்சித்துள்ளனர்.

பாலகுமாரன் என்ற நாவலாசிரியரும் சின்னப்பப் பாரதி என்ற நாவலாசிரியரும் அப்படி முயற்சித்துள்ளனர்.
இறுதியாக இப்படி ஒரு முயற்சியை செய்துள்ளார் பா.வெங்கடேசன் என்கிற 1964இல் பிறந்த சென்னை வாசி. 'மானுடப்பண்ணை' என்ற நாவல் 1996இல் தமிழக அரசின் விருது பெற்றது. இன்னும் பல தொகுதிகளையும் தொகுப்புகளையும் தந்திருக்கிறார். இவரது எழுத்து வண்ணத்தில் உருவானது தான் 'வனசாட்சி' என்ற நாவல் உயிர்மை பதிப்பகத்தினரால் நூலாக்கம் பெற்றது.

நாவலை எழுத்தில் தருவதற்கு முன்னர் இலங்கைக்கு வந்து சிலரை சந்தித்துச் சென் றுள்ளார்.

1983இல் இலங்கை வந்து சிலரைச் சந்தித் ததை ராஜம் கிருஷ்ணன் கூறியுள்ளதையும் 2011இல் இலங்கை வந்து சிலரைச் சந்தித்த தையும் நாம் கருத்திற் கொண்டு இப்படி வந்து போய் கதை எழுதுவது கதையாகவே முடிந்து போகிறது என்பதைக் கவனத்திற் கொள்ளலாம். இதய சுத்தியோடு ஒரு பிரதேச மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எழுத் தில் வடிப்பதற்கு அவர்களின் வரலாற்றைப் பற்றி தெரிந்திருத்தல் வேண்டும். அவர்களின் வரலாற்றைப் பற்றி மேலோட்டமான ஒரு கருத்தை வைத்துக் கொண்டு எழுத முற்படு வது தவறான முன்னுதாரணமாகி விடும்.

நன்றி - வீரகேசரி 18.05.2014

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates