Headlines News :
முகப்பு » » தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளர்களாக மாறக் கூடாது - சிவா ஸ்ரீதரராவ்

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் தொழிலாளர்களாக மாறக் கூடாது - சிவா ஸ்ரீதரராவ்


மலையகத்தில் க.பொ.த.சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகளில் சித்தியடைவோரின் தொகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனினும், அநேகமான மாணவர்கள் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல காரணங்களால் உயர் கல்வியைத் தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் சமூகத்தில் சிறந்த அந்தஸ்தைப் பெறும் சந்தர்ப்பத்தையும் இழந்துவிடுகின்றனர்.

இவ்வாறான நிலையை தடுப்பது மலையக சமூகத்தவர்கள் கைகளிலேயே உள்ளது. நாட்டில் பல பகுதிகளிலும் அதிகளவு வருமானத்தை ஈட்டும் நிறுவனங்களாக வணக்கஸ்தலங்கள் உள்ளன. இவற்றை பரிபாலனம் செய்துவரும் சபைகள், அவை இயங்கும் பகுதிகளில் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றுள்ள மாணவர்களுக்கு உதவி வழங்க முன்வரவேண்டும்.

இதேவேளை, மலையகத்தில் ஐம்பதுக் கும் அதிகமான தோட்ட தொழிற்சங்கங்கள் இயங்கிவருகின்றன. இந்தத் தொழிற்சங்கங்கள் தமக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கித் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள் உயர் கல்விபெற மாதாந்தம் நிதியுதவி வழங்க வேண்டும்.

தோட்டத் தொழிற்சங்கங்களும், அரசி யல் கட்சிகளும் தோட்டத்தொழிலாளர்க ளின் பிள்ளைகளின் கல்வி குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. தொழிலாளர்களின் பிள்ளைகளும் நாளை தோட்டத் தொழிலாளர்களாக மாறினால் தமக்கு சந்தாப்பணம் அதிகளவில் கிடைக்கும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

மலேசியா போன்ற நாடுக ளில் தோட்டத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களையும், தொழிலாளர்களின் பிள்ளைகளையும் உயர்கல்வி பெற உதவி வழங்கிவருவதுடன் அவர்களை பல்வேறு துறைகளில் ஈடுபடவைத்து அவர்களுடைய எதிர்காலம் சிறப்பதற்கும் வழிசமை த்துக்கொடுக்கின்றன.

இந்த நாட்டில் அரசியல்ரீதியாக செயற்பட்டு வரும் தோட்டத் தொழிற்சங்கங்கள் இங்குள்ள இந்திய வம்சாவழி தமிழ் மாணவர்களின் கல்வியிலும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வியிலும் அக்கறை காட்டி செயற்படுவதில்லை. ஆகவே பொருளாதார வசதி படைத்த இந் திய வம்சாவளி தமிழர்களும் மலையக அரசியல் கட்சிகளும் தோட்டத் தொழிற்சங்கங்களும் பொருளாதார வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு உதவ முன்வரவேண்டும்.

ஒரு சமுதாயத்தின் ஈடேற்றத்திற்கு கல்வி அத்தியாவசியமாகும். எனவே உயர் கல்வியைப் பெறத்தகைமையுடைய தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி பெற வழியேற்படுத்திக் கொடுப்பதுடன் அவர்க ளைப் பட்டதாரிகளாக்கி அந்தந்தப் பகுதி களில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிக் கச் செய்தால் பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிரந்தரமாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கமுடியும் இதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையை இல்லாதொழித்து எமது சமூகத்தில் கல்வி புரட்சியையும் ஏற்படுத்த முடியும்.

தோட்டத் தொழிலாளர்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தி தோட்ட கம்பனிகளுக்கு இலாபத்தைப் பெற்றுகொடுக்கின்றனர். அப்படி இலாபத்தை பெற்றுகொடு த்தும் தொழிலாளர்களின் படித்த பிள்ளைகளுக்கு தோட்டத்தில் தொழில் வழங்குவது குறைவாகவே காணப்படுகின்றது. தோட்டப்பகுதிகளில் அநேக படித்த இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிகிடக்கின்றார்கள். இவர்களை பற்றி எவறும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை.

நாட்கூலியாக தொழில்புரியும் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தோட்டப்பகுதிகளில் தொழில் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகங்கள் மற்றும் தோட்டக் கம்பனிகள் அக்கறை கொள் வதில்லை. தோட்டப்பகுதிகளில் ஏராள மான தொழில் வெற்றிடங்கள் காணப்படு கின்றன. அவற்றுக்கு தொழிலாளர்களின் பிள் ளைகளை நியமித்தால் தொழில்வாய்ப் புக்கென காத்திருக்கும் இளைஞர், யுவதி களின் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய முடியும்.

எதிர்வரும் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தோட் டத்துறைகளில் தொழில்வாய்ப்பை பெற்று கொடுப்பதில் மலையக தலைவர்கள் தொழிற்சங்கங்கள் மலையக அரசியல்வா திகள் அக்கறையுடன் செயல்பட வேண் டும்.

நன்றி - வீரகேசரி 15.06.2014
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates