ராமசாமிகளும் மீனாட்சிகளும்
தென்னிந்தியாவில் இருந்து கோப்பி பயிரிடுவதற்கென தருவிக்கப்பட்ட தமிழ் தொழிலாளர்கள் ஒரு தலைவனின் கீழ் கூட்டம் கூட்டமாகவே வந்தனர். அவ்விதம் தோட்டங்களிலும் கூட்டம் கூட்டமாகவே செயற்பட்டனர். சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுவினர் பல தலைவர்களின் நிர்வாகத்தின் கீழ் இயங்கினர். இத்தகைய குழுவினர் "கேங்' (எச்ணஞ்) என்று அழைத்தனர். இவர்களது தலைவனை கேங் லீடர் (எச்ணஞ் ஃழூச்ஞீழூணூ) என அழைத்தனர்.
பிரித்தானிய தோட்டத் துரைமார்களுக்கும் அதிகாரிகளுக்கும் இத்தொழிலாளர்களைத் தனி தனியாக அடையாளம் காண முடியாதிருந்தது. எல்லோரும் ஒரே மாதிரியான, ஒரே முகங்களாகவே தெரிந்தனர். அவர்களுக்கு வௌ;வேறு பெயர்கள் இருந்தபோதும் ஒட்டு மொத்தமாக "ராமசாமி' என்றே அழைத்தனர்.
துரைமார் யாரைக் கூப்பிட வேண்டுமென்றாலும் "ராமசாமி யைக் கூப்பிடு' என்றே கூறினர். "ராமசாமி' என்ற பெயருக்கு மேலதிகமாக "கருப்பன்' என்ற பெயரும் பொதுவாக பாவனையில் இருந்திருப்பதாக கிறிஸ்டின் வில்சன் என்ற நூலாசிரியர் தனது நூலான "கசந்த கோப்பி' (ஆடிவவழூணூ ஆழூணூணூதூ) என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
ராமசாமிகள் அல்லது கருப்பன்கள் தென்னாபிரிக்காவில் நெசவுத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கொத்தடிமைகளைவிட வித்தியாசமானவர்கள் அல்லர் என ஒரு சமயம் அரச சபையில் சேர். பொன் அருணாசலம் தெரிவித்திருந்தார்.
இந்திய பெருந்தோட்டத் தொழிலாளர் எப்படி இருந்தனர் என்று கருத்துத் தெரிவிக்கையில், அப்போதிருந்த பிரதம குடிசார் மருத்துவ அதிகாரி டபிள்யூ.ஆர்.என்.கின்ஸி (ஈணூ. ஙி.கீ.N. ஓடிணண்தூ) பின்வருமாறு கூறியுள்ளார்.
""இந்தியக் கூலித் தொழிலாளி மிக மெலிந்தவனாக, மத்திய உயரம் கொண்டவனாக, நொய்ந்த, தசை நரம்புகள் புடைத்து வெளித்தெரிந்தவனாகக் காணப்பட்டான். அவனது நிறம் அடர்ந்த கருங்கல் நிறத்தில் இருந்து மஞ்சள் கபில நிறம் வரை வேறுபடுகிறது. ஒரு சிலர் மாநிறமாக இருந்தனர். உருவத்தில் "காக்கேசிய' வார்ப்புக்கள் போலிருந்தார்கள். உருவ அமைப்பில் வேறுபட்டாலும் வெறுக்கத்தக்கவர்களாகவோ, குரூபிகளாகவோ இருக்கவில்லை.
இவர்களின் மண்டையோட்டு அமைப்பின்படி புத்திக் கூர்மை குறைந்தவர்களாகவும் முரட்டுத் தன்மையுடையவர்களாகவும் இருந்தனர். கண்கள் கறுப்பு நிறமாகவும் கண்மணிகள் துருதுருத்தபடியும் இருந்தன. குறுகிய நெற்றி, அகன்ற கன்ன எலும்புகள், நிறைவானதும் சற்றே கீழ்நோக்கித் தொங்கும் உதடுகள், சற்றே கூடுதலான நாசியுடன் காணப்பட்ட இவர்களின் பார்வையில் ஒரு சோகமும் கையறு நிலையும் நிரந்தரமாகக் குடிகொண்டிருந்தது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ழூழூழூ
இலங்கை, இந்தியர் வரலாற்றில் கோப்பிப் பெருந்தோட்ட காலம் மிக சோகமயமானது.
தலைக்கு ஐந்து சதம் "கொமிசனு'க்கு தமிழ் நாட்டில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த கங்காணிகள் வரும் வழியில் எத்தனை பேர் இறந்தனர் என்று ஒரு கணிப்பீடு செய்தனர். வரும் வழியில் கப்பலில் வைத்தும், பின் தலைமன்னாரில் இருந்து நடந்து வரும் வழியில் பல்வேறு துன்பங்களை அனுபவித்து மீளமுடியாமலும் தொழிலாளர்களில் அரை வாசிப்பேர் இறந்து போயினர்.
எனவே, தொழிலாளர்களின் உண்மைத் தேவை 1500 பேர் ஆயின் அவர்கள் 3000 பேரை அழைத்து வந்தனர். 1500 பேர் வரும் வழியில் இறந்து போய்விடுவர் என்பது அவர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது. கப்பலிலும் வரும் வழியிலும் தொழிலாளர்கள் மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். அவர்களுக்கு குடிப்பதற்கு போதுமான தண்ணீர் வழங்கப்படவில்லை. கடுமையான கொலரா நோயால் பீடிக்கப்பட்டு, வாந்திபேதி ஏற்பட்டு, உடல் வரட்சியடைந்து நிறையப்பேர் இறப்பது வழக்கமாகிப் போயிருந்தது.
""தலைமன்னாரில் இருந்து மாத்தளையின் கண்டி வரையில் இவர்கள் வரும் பாதையின் இரண்டு புறங்களிலும் மண்டையோடுகளும், கை, கால் எலும்புகளும் ஆங்காங்கே குவிந்து கிடப்பது வழமையான காட்சி'' அப்போது பிரித்தானிய அரசின் காலனித்துவ செயலாளராக இருந்த பிலிப் அன்ஸ்ட்ரூதர் (கடடிடூடிணீ அணண்வணூதவடழூணூ) (18301845) தனது அறிக்கையில் இப்படித் தெரிவித்திருந்தார். இவர் 1843ஆம் ஆண்டில் தலைமன்னாரிலிருந்து அனுராதபுரம்வரை நடை பாதை ஒன்று அமைத்து இடைக் கிடை தங்குமிடவசதியும், நீர் அருந்த கிணறுகள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார்.
எனினும், நோயுற்றோரை கவனிக்க எந்த மருத்துவ வசதியும் இருக்கவில்லை. சக தொழிலாளர்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நோயுற்றவர்களை சோகத்துடன் அவ்விடத்திலேயே விட்டு விட்டுச் சென்றனர். இறந்தவர்களை ஓநாய்களும், நரிகளும், காக்கைகளும் கடித்துக் குதறுவதை எவரும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
திருச்சிராப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரம் வரும் வழியிலும் தலைமன்னாரில் இருந்து கண்டி வரை வரும் வழியிலும், பின் தமது உடைமைகளுடன் திரும்பிச் செல்லும் வழியிலும் அவர்கள் பலராலும் கொள்ளையடிக்கப்பட்டனர். பல வழிகளில் சுரண்டப்பட்டனர். இம்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர்.
உடைமைகளைக் கொள்ளையடிக்கும்போது பலர் கொலை செய்யப்பட்டனர். 1846 ஜனவரி மாதம் கூடழூ ழுஞண்ழூதிழூணூ பத்திரிகை இவர்களின் நிலையை விளக்கி கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அப்போதைய காலனித்துவ செய லாளராக இருந்த சேர் ஜேம்ஸ் டெனன்ட் (குடிணூ ஒச்ட்ழூண் கூழூணணழூணவ) என்பவர் கூலித்தொழிலாளரின் நலன்கள் கவனிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இலங்கையில் வந்திறங்கியதும் அவர்களுக்கு போதுமான வசதிகளை செய்து கொடுத்தல், பாதுகாப் பான பாதையமைத்தல், அவர்கள் மீதான வன்முறைகளில் இருந்து பாதுகாப்பளித்தல், மருத்துவ வசதி செய்து கொடுத்தல், வழித்தங்க ஓய் விடங்கள் அமைத்துக் கொடுத்தல், மனிதாபிமானத்துடன் நடத்தப்படுதல் என்பன தொடர்பில் அரசுக்கு எழுதிக்கேட்ட போதும் பலன் கிட்டவில்லை. இவை ஒருபோதும் தொழிலாளர்களைச் சென்றடையவும் இல்லை.
ழூழூழூ
கண்டி சீமையிலே அப்படி
என்னதான் கொட்டிக்கிடந்தது?
இலங்கையின் கோப்பிப் பெருந்தோட்டங்களினதும், பின்னர் தேயிலைத் தோட்டங்களிலும் தொழில் புரிவதற்கென இத்தனை பெருந்தொகையான இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள், இவ்வளவு துன்ப துயரங்களுக்கு மத்தியில் ஏன் வந்திருக்க வேண்டுமென பல பொருளியல் மற்றும் சமூகவியலாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் மிகக் கவனிக்கத்தக்கன.
கண்டி சீமையிலே தேயிலைச் செடிக்கடியில் தேங்காயும் மாசியும் விளைகிறதாம். அங்கே காசு பணமெல்லாம் கொட்டிக்கிடக்கிறதாம். தேனும் திணையும் மாவும், பாலும் பருப்பும் திகட்டாமல் கிடைக்கிறதாம் என்ற ஆள் திரட்டும் கங்காணிகளின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கித்தான் நிறையப் பேர் இலங்கைக்கு வந்து இந்த மரணப் பொறியில் மாட்டிக்கொண்டனர் என்ற செய்தி தோட்ட மக்களின் பல வாய்மொழிப் பாடல்களில் காணக்கிடக்கின்றது. ஆனால், இது முற்றிலும் உண்மையாக இல்லாதிருந்தாலும் எல்லாக்காலங்களிலும் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காதவர் இல்லாமல் இல்லை.
பின்வரும் காரணிகளை ஆய்வாளர்கள், இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வர தள்ளு காரணிகளாகவும் இழுப்புக் காரணிகளாகவும் இருந்தன என்று தெரிவிக்கின்றனர்.
01) வறுமையும், வரட்சியுமே மிகப் பிரதான காரணிகளாக இருந்துள்ளன. கிராமங்களில் அதிகரித்த சனத்தொகைக்கேற்ப விவசாயத்தைத் தவிர வேறெந்த தொழில் முயற்சிகளும் இல்லை. விவசாயமும் வரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பசி பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடியது. தென்னிந்தியாவின் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சனத்தொகை ஒரு சதுர மைலுக்கு 240 ஆகக் காணப்பட்டபோது இலங்கையில் சனத்தொகை விகிதாசாரம் 70 ஆக இருந்தது என்று அமித்ராதுத்தா என்ற ஆய்வாளர் கூறுகின்றார்.
02) மெட்ராஸ் மாநிலம் வரட்சியால் காய்ந்து போயிருந்தது. எல்லா இடங்களிலும் பட்டினிச்சாவுகள் ஏற்பட்டன. பாதையோரங்களில் மனிதர்கள் விழுந்து இறந்து கிடந்தனர். பிணவாடை சகிக்க முடியவில்லை. பிணங்களை வல்லூறுகளும், நாய்களும் பிய்த்துத்தின்றன என்று பிரிட்டிஷ் படையதிகாரி ஒருவர் தனது குறிப்புப்புத்தகத்தில் குறிப்பெழுதியிருந்ததாக பிரின்சிப் (ஙச்டூ.ஞி.கணூடிணண்ழூணீ) தெரிவிக்கின்றது.
03) இந்தியாவின் தென்மாநிலத்தில் வரட்சி அதிகரிக்க அதிகரிக்க மக்கள் தமது சகல உடைமைகளையும் இழந்தனர். தமது நிலம், வீடு, ஆடு, மாடு, நகை, நட்டு என்பவற்றை நிலச்சுவாந்தர்களிடம் அடகு வைத்துள்ளனர். அவர்கள் அநாதைகளாக வேறு மாவட்டங்களுக்கு வேலை தேடி புலம் பெயர்ந்தனர். அத்தகையவர்களுக்கு இலங்கையில் வேலை கிடைக்கின்றது என்பதும், சில மைல்கள் படகில் சென்று இலங்கையை அடைந்து விடலாம் என்பதும் பெரிய செய்தியாக இருந்தது.
04) இந்தியாவின் மிகப் பெரிய வரட்சியும், அதனைத் தொடர்ந்த பஞ்சமும் பட்டினியும் 1876 களைத் தொடர்ந்து ஏற்பட்டது. 1881 வரை நீடித்த இப்பஞ்ச காலத்தின் போது 200,000 சதுர மைல் நிலம் வரண்டு போய் விட்டதென்றும் சுமார் 19 மில்லியன் மக்கள் இறந்து போய் விட்டனர் என்றும் இந்த பஞ்சம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பித்த ஆணைக்குழு (1901ஆம் ஆண்டு) தெரிவித்ததாக ஹியூடின்கர் (ஏதஞ்ட வதணடுழூணூ) என்ற ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.
5) மறுபுறத்தில் பல பேர் நில உடைமையாளர்களுக்கு கடனாளிகளாக இருந்தனர். இவர்கள் தமது கடன்களை அடைக்கவும், அடகு வைத்த நிலத்தை மீட்கவும் இலங்கை நோக்கி வந்தனர். வேறும் இலங்கையில் 23 வருடங்கள் வேலை செய்தால் எவ்வளவு வருமானம் வரும் என்று கணக்கு பார்த்து இங்கு வந்தனர். இப்படி வந்தவர்கள் இந்தியா மீண்டதும் காணிகள் கொள்வனவு செய்தனர் என மெட்ராஸ் பல்கலைக்கழக பொருளாளராக பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டர் (எடிடூஞழூணூவ குடூச்வழூணூ) தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
தொடரும்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...