'தோட்ட சேவையாளரின் கூட்டு ஒப்பந்தம் மகிழ்ச்சியை வழங்கியதா? ஏமாற்றத்தை கொடுத்ததா? என்ற தலைப்பில் கி.கிருஸ்ணமூர்த்தி என்பவர் எழுதிய கட்டுரை 13.04.2014 ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டின் ''குறிஞ்சி'' பகுதியில் வெளிவந்தது.
இதுதொடர்பாக சில விளக்கங்கள் மற்றுமொருவரால் எழுதப்பட்டுள்ளது. அது இங்கு பிரசுரமாகிறது.
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் என்பது 94 வருட வரலாற்றைக் கொண்ட ஓர் சங்கமாகும். 1920ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சங்கம், இன்றுவரை தோட்ட சேவையாளரின் உரிமைகளுக்காகவும், சலுகைக்காகவும் போராடி வருகின்றது. இன்று பெருந்தோட்டத்துறையில் வேலை செய்யும் அனைத்து தோட்ட சேவையாளர்களும் அனுபவிக்கும் சம்பளம், சலுகைகள் எல்லாமே இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் பெற்றுக் கொடுத்தவைதான்.
2014.04.12ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் 25% சதவீத சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடிந்தது. இச்சம்பள உயர்வு தோட்ட சேவையாளர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பள உயர்வு பற்றி கட்டுரையாளரே அங்கத்தவர்களை திசைதிருப்ப முயல்கின்றார். எனவே, அவரின் கேள்விகளுக்கான பதிலை அளிக்க விரும்புகின்றோம்.
தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைக்கும்போது பெற்றுக்கொள்ள முடியாத சம்பள உயர்வுகளையே முன்வைக்கும். பேரம்பேசும் முறையிலேயே இப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்படும். தொழிற்சங்க வரலாற்றை பின்நோக்கிப் பார்த்தால் இதுபுரியும்.
இ.தோ.சே.சங்கம் முதலில் 55% சதவீத சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை வைத்தது.
முதலாளிமார் சங்கம் இக்கோரிக்கையை நிராகரித்து ஒவ்வொரு மாதமும் ரூபா 1000/= தருவதாக கூறினர்.
பின்னர் 2000/= ரூபாய் தருவதாக கூறினர். 2013ஆம் ஆண்டு 1000/=மும், 2015ஆம் ஆண்டு ரூபா 1000/=மும் கொடுப்பதாக கூறினர். இதை சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறு குறைந்த சம்பளத்தை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி செய்யப்பட வேண்டிய கூட்டு ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது. தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக கீழ்காணும் சலுகைகளை பெற முடிந்தது.
2013ஆம் ஆண்டு முதலாம் திகதியும், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதியிலும் தொழில்புரிந்தவர்களுக்கு 25% சதவீத சம்பள உயர்வு கிடைத்தது.
வீடுகளுக்கு மின்சாரம் கொடுக்கப்படாவிட்டால் அதற்காக 15 லீற்றர் மண்ணெண்ணெய் கொடுக்கப்பட்டது. அது தற்போது 25 லீற்றராக உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவ மாது ஒருவருக்கு சீருடைக்காக கொடுக்கப்பட்ட ரூபா 1500/=க்கு பதிலாக 2000/= ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
உத்தியோகத்தர் ஒருவர் தொழிலில் இருக்கும்போது மரணம் சம்பவிக்குமாயின் அதற்காக கொடுக்கப்பட்டு வந்த 25,000/=யிரம் ரூபா 50,000/= ஆயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
வருடாந்த சம்பள உயர்வாக பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது.
கனிஷ்ட பிரிவு
சாரதிகள், சிறுவர் நிலைய காரியஸ்தர் ரூபா 150/=, 200/=இலிருந்து ரூபா 300/= வரை
உதவியாளர்கள்
உதவி எழுதுவினைஞர், உதவி தொழிற்சாலை அதிகாரி ரூபா 200/=, 250/=இலிருந்து ரூபா 400/= வரை
சிரேஷ்ட உதவியாளர்கள்
சிரேஷ்ட கணக்காளர், சிரேஷ்ட தொழிற்சாலை அதிகாரி ரூபா 325/=, ரூபா 250/=இலிருந்து ரூபா 500/= வரை.
வெளிக்கள உத்தியோகத்தர்
ரூபா 250இலிருந்து ரூபா 500/= வரை விசேட வெளிக்கள உத்தியோகத்தர் ரூபா 500இலிருந்து ரூபா 900/= வரை.
தேயிலை தொழிற்சாலை அதிகாரி
ரூபா 500இலிருந்து ரூபா 750/= வரை. விசேட தேயிலை தொழிற்சாலை
பொறுப்பதிகாரி
ரூபா 750இலிருந்து 1000/= வரை.
குடும்பநல உத்தியோகத்தர்
ரூபா 200/=இலிருந்து 300/= வரை.
தலைமை குமாஸ்தா
ரூபா 500இலிருந்து 750/= வரை.
விசேட தலைமை குமாஸ்தா
ரூபா 750/=இலிருந்து 1000/= வரை.
பயிற்சி மருத்துவர்
ரூபா 200/=இலிருந்து 500/= வரை.
மருத்துவர்
ரூபா 750இலிருந்து 900/= வரை.
ஓய்வு வயது
ஓய்வு வயதெல்லை 58 வயதிலிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இச்சம்பள உயர்வு 25% சதமாக உயர்த்தப்பட்டாலும், உண்மை சம்பள உயர்வு இதைவிட அதிகமாகும்.
உதாரணமாக 20,000/= ரூபா சம்பளம் பெறும் ஒரு உத்தியோகத்தர் இக்கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பின்வரும் சம்பளத்தை பெறுகிறார்.
மாதச்சம்பளம் 20,000/= என வைத்துக்கொண்டால் ரூபா. 20,000/=, 25% சம்பள உயர்வு 5000.00 ரூபா வருடாந்த சம்பள உயர்வு 400.00 ரூபா மருத்துவ உதவிப்பணம் 500.00 ரூபா E.P.F. சேமலாப நிதி 750.00 ரூபா 6650.00 ரூபா உண்மையான சம்பள உயர்வு 33.25% ஆகும்.
ஒப்பந்தத்தின் காலஎல்லை
2008ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான கால ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளாம்.
2014ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் எல்லை மூன்று வருடங்களாகும். இதனால் நன்மை பெறுவது யார் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
மின்சாரம்
வாகன சாரதிகளுக்கான மின்சாரம் மிகவும் மோசமான முறையில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டாம் திகதி (2009.04.02) கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தை புரட்டிப் பார்த்தால் உண்மை விளங்கும். அந்த கூட்டு ஒப்பந்தத்திலும் 105 அலகுகளே வழங்கப்பட்டு வந்துள்ளது. அதைத்தான் 2014ஆம் ஆண்டு கூட்டு ஒப்பந்தத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இவர்க ளுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கட்டுரையாளர் கூறுவது ஏன் என்று தெரியவில்லை.
நன்றி - வீரகேசரி 04.05.2014
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...