அமரர் பெ.சந்திரசேகரனின் 57 வது பிறந்த தினம் (16.04.2014) இன்றாகும் 2004 ஆம்ஆண்டு டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தில்கல்வியமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் ஆற்றிய உரையின் ஒருபகுதிதொகுப்பு – எச்.எச்.விக்கிரமசிங்க
மலையக மக்களின் கல்வி முன்னேற்றத்தில் அரசு பாராபட்சம் காட்டி வருகிறது.தோட்டப் பாடசாலைகளுக்கு சில அரச சார்பற்ற நிறுவனங்களால் சில வளங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றை தொடர்ந்து பராமரிக்கக்கூட அரசு நிதி ஒதுக்குவதில்லை.ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதிலும் தொடர்ந்து பாராபட்சம் காட்டப்படுகிறது. என மலைய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு குழு நிலைவிவாதத்தில் டிசம்பா; 2004 இல் பேசுகையிலேயே அவர இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும்பேசுகையில் கல்வி அமைச்சின் குழுநிலை விவாத்தில் மலையக கல்வி தொடர்பான சிலஉண்மை நிலைமையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். மலையக சமூகம் சகல மட்டத்திலும்பின்தங்கிய சமூகமாகவே இருக்கின்றதுஇ கல்வி தொழில் வாய்ப்பு பொருளாதார வருவாய்அதிகரிப்பு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் என சகல அம்சங்களிலும் இந்தசமூகத்தின் நிலைமையை புரிந்து கொண்டு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள்முழுமையான திட்டத்தை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமாகும்.இதில் கல்விக்கு முதலிடம் கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது, ஆனால் பாடசாலைகளைபொறுத்த வரையில் வெளிநாட்டு உதவியினால் ஓரளவு தோட்டப் பகுதிகளுக்கு பாடசாலைகட்டிடங்கள் கிடைத்ததை தவிர அதை பராமரிக்க கூட அரச நிதி ஒதுக்கப்படவில்லை.
ஆசிரியர் பற்றாக்குறை என்பது கருத்தரங்குகளிலும் மேடைகளிலும் பேசுகின்றபேச்சாக இருக்கின்றதே தவிர கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இதில் எந்த அரசும்அக்கறை காட்டியதாகக் தெரியவில்லை.கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள அடிப்படை உரிமையாகும். அதிலும் தனது சொந்ததாய் மொழியிலேயே பயிலுகின்ற வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பல தோட்டங்களில்தொழிலாளர்களின் பிள்ளைகள் தாய் மொழி மூலம் கல்வி கற்க வாய்ப்பில்லாமல்இருக்கின்றார்கள். காரணம் தோட்ட பாடசாலைகள் மூடப்பட்டு வருவதால் அருகில் உள்ளவேற்று மொழிப் பாடசாலைக்கு போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.சில தமிழ் பாடசாலைகளில் பெரும்பான்மை இனத்தைச்சார்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்என்பதற்காகவே இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிழக்குப் பகுதிபல்கலைக்கழகத்தை விரிவுபடுத்தவும் ஊவா மாகாணத்திற்கு தனியான பல்கலைக்கழகத்தைஏற்படுத்தவதிலும் அரசு காட்டுகின்ற அக்கறை மலையக மாணவர்களுக்காக காட்டப்படாமல் உதாசீனப்படுத்தப்படுகின்றார்கள்.
மலையக தமிழ் ஆசிரியர்கள் பயிற்சிக்காக வெளிநாட்டு உதவியோடு அமைக்கப்பட்ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி கூட முழுமையாக மலையக தமிழர்களுக்கு பயன்பெறகூடியதாக அமையவில்லை. இன்று சிறு சிறு கிராமங்களில் கூட முழு வசதியுடனான தேசியகல்லூhpகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 15 இலட்சம் மலையக மக்களை கொண்டஇந்திய வம்சாவளி மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் பூரணத்துவமாக ஒரு தேசியபாடசாலை கூட இன்னும் அமையவில்லை.தரம் 5 இல் புலமை பாpசில் பரீட்சையில் சித்தியடைந்த தோட்டத் தொழிலாளர்களின்பிள்ளைகளுக்கு புலமை பரிசிலும் அதற்கான வாய்ப்பும் மறுக்கப்படுகின்றது. இவைஎல்லாம் மனதில் கொண்டு கல்வி அமைச்சு செயல்பட வேண்டும். அதிலும் ஜனாதிபதியின்கீழ் வருகின்ற இவ் அமைச்சு இதில் அக்கறை காட்டத்தவறினால் அனைத்து மலையகமக்களுக்கும் அவர் துரோகம் செய்யததாகக் கருதப்படுவர்.பெருந்தோட்டத்துறையில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகள் காலத்திற்குக் காலம்அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டன. 1962 ஆம் ஆண்டுவரை 24 பாடசாலைகளும்1970ஆம் அண்டு காலப்பகுதியில் இர.சிவலிங்கம் கல்வி அமைச்சில் உயரதிகாரியாக பணியாற்றிய காலகட்டத்தில் 280 பாடசாலைகளும் 1981-1990 காலப்பகுதியில் 421 பாடசாலைகளும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டு தேசிய கல்விஅமைப்பின் கீழேகொண்டு வரப்பட்டன. எல்லாமாக 725 தோட்டப் பாடசாலைகள் அரசாங்கத்த்தினால் இதுவரை பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டதன் பின்னரும் இப்பாடசாலைகள் அடிப்படைவசதிகளற்றவைகளாகவே 1984 ஆம் ஆண்டுவரை இருந்து வந்துள்ளன. 1984 ஆம் ஆண்டிற்குபின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட சீடா நிதி உதவியின் பெருந்தோட்டப் பாடசாலைகளின்கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம் ஜர்மன் தொழில்நுட்ப உதவி – (GTZ)போன்றவற்றின் அபிவிருத்தித் திட்டங்களினால் இதுவரை 480 பாடசாலைகள் பல்வேறு அடிப்படை வசதிகளைப் பெற்றுள்ளன. இன்னும் 350 பாடசாலைகள் ஆகக் குறைந்த அடிப்படைவசதிகளைப் பெறவேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றன.
1945 களில் ஆரம்பிக்கப்பட்ட இலவசக் கல்வியின் தாக்கம் பெருந்தோட்டப்பாடசாலைகளை 1986 ஆம் ஆண்டுகளின் பின்னரே சென்றடைந்தனவென கூற வேண்டும். இதன்பின்னரே தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களினால் பெருந்தோட்டப்பாடசாலைகள் பயன்பெறத் தொடங்கின. 1986 ஆம் ஆண்டளவில் 100 பாடசாலைகளிலேயே இரண்டாம் நிலைக்கான கல்வியை பெறும் வாய்ப்பு பெருந்தோட்டத்துறையில் காணப்பட்டது. இன்று 380 பாடசாலைகளில் இவ்வாய்ப்பு காணப்படுகின்றது.இத்தகையதொரு அபிவிருத்தி கடந்த 10 அல்லது 12 ஆண்டுகளில் ஏற்பட்ட வளர்ச்சியேஆகும். ஆயினும் தேசிய ரீதியில் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சி இலக்குகளைஅடைய பெருந்தோட்டப் பாடசாலைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளன.
இந்த வரலாற்றுப் பின்னணியின் அடிப்படையிலேயே அண்மையில் விதந்துரைக்கப்பட்டுள்ளகல்விச் சீர்த்திருத்தங்கள் எத்தகைய சாதக பாதகவிளைவுகளை பெருந்தோட்டப் பாடசாலைகளில் ஏற்படுத்தவிருக்கின்றன என்பதனை பார்க்க வேண்டியுள்ளது. பொதுக்கல்வியை மறுசீரமைப்பதற்கான பாடசாலைகளிலே பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடியதாகவிருப்பதால் அவை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம்ஏற்பட்டுள்ளது.
எழுத்தறிவின்மை பெருந்தோட்டத் துறையிலேயே அதிகளவில் காணப்படுகின்றதுஎழுத்தறிவு வீதம் நகர்ப் புறத்தில் 92.3 % ஆகவும் கிராமப் புறத்தில்86.9 % ஆகவும்பெருந்தோட்டத்துறையில் 66.6 % ஆகவும் காணப்படுகின்றது. ஆகவே முறைசாராக் கல்விநடவடிக்கை மூலம் கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான விதப்புரைகள் பொதுக்கல்விக்கான சீர்திருத்த ஆலோசனைகளிலே காணப்படுகின்றன. இவ்வாலோசனைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படாதவரை இவை வெறும்ஆலோசனைகளாகவே தான் இருக்கப் போகின்றன. கல்வி அமைச்சின் மூலமாக முறைசாராகல்விச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும் பெருந்தோட்டத்துறையைப் பொறுத்தவரை இதுவரை இதற்கான ஏற்பாடுகள் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...