Headlines News :
முகப்பு » , » சி. வி. நூற்றாண்டும் மணிமண்டபமும்.

சி. வி. நூற்றாண்டும் மணிமண்டபமும்.

சி. வி. வேலுப்பிள்ளை
மலையக இலக்கிய முன்னோடியும் சிறந்த ஆங்கிலக் கவிஞரும் நாவல், சிறுகதை எழுத்தாளரும், சிறந்த தொழிற் சங்கவாதியும் தலவாக்கொல்லைத் தொகுதியின் முதலாவது பாராளுமன்ற உறுப்பினரும், ஈழத்தின் தாகூர் என்று அழைக்கப் பட்டவருமாகிய அமரர் சி. வி. வேலுப்பிள்ளையின் 29 வது நினைவுநாள் இன்று (19). அவருக்கு முதற்கண் நமது அஞ்சலிகள். அத்துடன் அவரது நூற்றாண்’டும் இதுவாகும். ஆம் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ம் திகதி (14.09.2014) அவரது 100 வது பிறந்தநாள் ஆகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தலங்கமையில் அவரது வீட்டுக் காணியில் அவரது நினைவிடத்தில் இருந்த அவரது அஸ்தி முதலியவற்றை அவரது பிறந்த ஊரான மடக்கொம்பரைக்குக் கொண்டுவந்து நினைவுத் தூபி எழுப்பிய இன்றைய தொழிலாளர் தேசிய சங்கத் தலைமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதே தலைமைத்துவம் தலவாக்கொல்லையில் அல்லது மடக்கொம்பரையில் அவருக்கு மணி மண்டபம் எழுப்பி அதில் வைத்துப் பாதுகாப்பதற்காக அவரது ஆக்கங்கள், கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள், இலக்கிய சேமிப்புகள் மற்றும் நினைவுப் பொருட்கள் யாவற்றையும் எடுத்து வந்து விட்டதாக அவரது மகள் என்னிடம் கூறியிருக்கிறார். ஆனால், இன்று வரை தலவாக்கொல்லையிலோ மடக்கொம்பரையிலோ அவருக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டு வருவதாகவோ அல்லது அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுவதாகவோ தெரியவில்லை. இது மிகவும் கவலைக்குரியது.

எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரமல்லாது அனைத்து மலையாக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள், கலைஞர்கள், தொழிற்சங்கவாதிகள், அரசியல்வாதிகள், சமூகவியலாளர்கள், கற்றோர் மற்றோர் யாவரும் தமது சித்தாந்த அல்லது தனிப்பட்ட வேற்றுமைகளை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு அமரர் சி. வி. வேலுப்பிள்ளைக்கு வசதியான ஓர் இடத்தில் மணிமண்டபம் அமைத்து, அவரது 100 வது பிறந்த நாளில் அதைத் திறந்து வைத்து அவரது புகழையும், நினைவுப் பொருட்களையும் பாதுகாக்க ஒன்று திரளுமாறு வேண்டுகின்றேன். இதுவே அவரது 29 வது நினைவு நாளான இன்று நாம் அவருக்குச்செயும் அஞ்சலியாக அமையட்டும்.

நன்றி. – (ச. ஜேசுநேசன், சட்டத்தரணி).

Share this post :

+ comments + 2 comments

12:48 PM

கவிஞர் சி வி மீதான எனது ஆர்வம் காரணமாகவே அவரது in Ceylon Tea garden ஆங்கில பதிப்பையும் கவிஞர் சக்தீ பால அய்யாவின் தமிழாக்கத்தையும் என்னுடைய பதிப்பகத்தின் முதலாவது முயற்சியாக 2007 ஆம் ஆண்டு செய்து முடித்தேன். அதேபோல அவர் வாழ்ந்த இல்லத்தை அவர் பெயரில் நினைவாலயமாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் எவ்வாறு அரசியல் காரணம் கொண்டு இல்லாமல் செய்யப்பட்டது என்பதையும் பின்னர் அது தோட்டக்கம்பணி உடமயாக்கப்பட்டது என்பதயும் சிறு வயது முதலே அறிந்தவன் என்ற வகையில் 'சி.வி க்கு நினைவாலயம் அமைக்கும் ஆர்வம் என்னுள் உண்டு. அது நண்பர் ஜெசுநேசன் குறிப்பிட்டு இருப்பது போல் மணி மண்டபமாக அமையுமானால் மகிழ்ச்சிதான். ஆனால் எல்லோரும் தனி மண்டபம் கட்டும ஆர்வத்தில் உள்ள காலத்தில் சி விக்கு மணி மண்டபம் கட்டுவது அவரது நூலை மறுபதிப்பு செயவது போன்று இலகுவாக அமையவில்ல்லை. அனால் நானும் முயற்சியை கைவிடவில்லை. அடுத்த ஆண்டு நூற்றாண்டு என்ற வகையில் கை கூடும் என் நினைக்கிறேன்.

12:52 PM

கவிஞர் சி வி மீதான எனது ஆர்வம் காரணமாகவே அவரது in Ceylon Tea garden ஆங்கில பதிப்பையும் கவிஞர் சக்தீ பால அய்யாவின் தமிழாக்கத்தையும் என்னுடைய பதிப்பகத்தின் முதலாவது முயற்சியாக 2007 ஆம் ஆண்டு செய்து முடித்தேன். அதேபோல அவர் வாழ்ந்த இல்லத்தை அவர் பெயரில் நினைவாலயமாக மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் எவ்வாறு அரசியல் காரணம் கொண்டு இல்லாமல் செய்யப்பட்டது என்பதையும் பின்னர் அது தோட்டக்கம்பணி உடமயாக்கப்பட்டது என்பதயும் சிறு வயது முதலே அறிந்தவன் என்ற வகையில் 'சி.வி க்கு நினைவாலயம் அமைக்கும் ஆர்வம் என்னுள் உண்டு. அது நண்பர் ஜெசுநேசன் குறிப்பிட்டு இருப்பது போல் மணி மண்டபமாக அமையுமானால் மகிழ்ச்சிதான். ஆனால் எல்லோரும் தனி மண்டபம் கட்டும ஆர்வத்தில் உள்ள காலத்தில் சி விக்கு மணி மண்டபம் கட்டுவது அவரது நூலை மறுபதிப்பு செயவது போன்று இலகுவாக அமையவில்ல்லை. அனால் நானும் முயற்சியை கைவிடவில்லை. அடுத்த ஆண்டு நூற்றாண்டு என்ற வகையில் கை கூடும் என் நினைக்கிறேன். - மல்லியப்புசந்தி திலகர்-

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates