புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.
இந்த புதிய தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையானது எதிர்வரும் ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
வரவு செலவுத் திட்டம் மீதான விவாதங்களின் பின்னர் இந்த தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனைத் திட்டம் குறித்து பாராளுமன்றில் விவாதம் நடத்தப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தினால் உத்தேசிக்கப்படும் இந்த புதிய தேர்தல் நடைமுறையின் பிரகாரம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் மறுசீரமைப்பு தொடர்பான உத்தேச சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபரினால் இது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் 70 வீதமான உறுப்பினர்கள் தொகுதி வாரியாகவும், 30 வீதமான உறுப்பினர்கள் விருப்பத் தெரிவின் மூலமாகவும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதேவேளை, தேர்தல் தொகுதி மீள் நிர்ணய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்
புதிய உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்தபட உள்ளதால் தற்போது கிராம சேவகர் பிரிவுகளின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதுடன் புதிய கிராம சேவகர் பிரிவுகளும் உருவாக்கப்பட்டு வருகின்றது
இதன் மூலம் மலையக தமிழ் மக்கள் செரிவாக வாழ்கின்ற பகுதிகளில் சனசெறிவை குறைத்து தமிழ் பிரதிநிதிதுவத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கபடுவதாகவும் தெரிய வருகின்றது.
இந்த எல்லை நிர்ணயம் சம்மந்தமாக எந்தவொரு மலையக தமிழ் கட்சியும் ஆர்வம் கட்டவோ அரசுக்கு கோரிக்கையோ ஆலோசனையோ உத்தியோக பூர்வமாக முன்வைக்க வில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இதனால் எதிர்காலத்தில் மலையக தமிழ் மக்களின் இருப்பு கேள்விகுறியாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ள நிலையிலையே எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மலையக மக்கள் எதிர்கொள்ளவுள்ளனர்.
நன்றி - மலையோசை
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...