மத்திய மாகாணசபைக்கு கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்தும் இம் முறை 14 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக கண்டி மாவட்டத் தில் இம்முறை தமிழ்ப் பிரதிநி தித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தளை மாவட்டத்திலும் தமிழரொ ருவர் முதற் றடவையாக வெற்றி பெற்றுள்ளார்.
கல்விப் புரட்சி மூலம் மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜனநா யக மக்கள் முன்னணியின் நிர்வாகச் செயலாளர் வேலுகுமாரும் மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட அவர், 18ஆயிரத்து 109 விருப்பு வாக்கு களைப் பெற்றுள்ளார். அதிகப்படியான தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவின் மூலம் கடந்த முறை எட்டாக இருந்த தமிழ்ப் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வுள்ள மாகாண ஆட்சி 14 ஆக உயர வுள்ளது.
நுவரெலியா மாவட்டம்
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் 11 தமிழ்ப் பிரதிநிதித் துவங்கள் வென்றெடுக்கப்பட்டுள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக் கும், தேசிய தொழிலாளர் சங்கத்துக்கு மிடையில் தேர்தல் பரப்புரைகளின் போது கடும் மோதல் ஏற்பட்டிருந்தது.
எனினும், இரு தரப்புகளிலும் போட் டியிட்ட அனைத்து உறுப்பினர்களும் வெற்றிபெற்றுள்ளனர். இ.தொ.கா. சார்பில் ஆறுபேரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் மூவரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐ.தே.க. சார்பில் சதாசிவமும், மலையக மக்கள் முன்னணியின் சார்பில் ராஜாராமும் வெற்றிபெற்றுள்ளனர்.
யாருக்குப் பலம்
இ.தொ.காவின் ஆறு உறுப்பினர் களின் மொத்த விருப்பு வாக்கு எண் ணிக்கை இரண்டு இலட்சத்து 74 ஆயிரத்து 188ஆக இருக்கின்ற போதிலும் திகாம்பரத்தின் கட்சி சார்பில் போட்டியிட்ட மூவரின் விருப்பு வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 85ஆயிரத்து 566ஆகும். மலையக மக்கள் முன்னணிக்கு கிடைத்துள்ள ஓர் ஆசனம் அக்கட்சியின் அரசியல் பிரிவுத் தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.பியின் மகனுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி, நுவரெலியா...
புதுமுகங்கள்
இ.தொ.காவிலிருந்து இரண்டு புதுமுகங்களும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் இரு புது முகங்களும் இம்முறை மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளன. ராதாகிருஷ்ணனின் மகனுக்கும் இது கன்னி மாகாண அரசியல் பயணமாகும். மலையக மக்கள் முன்னணியின் சார்பில் வெற்றிபெறுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளரும், கல்வியியலாளருமான அ.லோரன்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.
மலையகத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேண்டும்
அதவேளை, நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளபோதிலும், அவர்கள் அனைவரும் அரசின் பங்காளிகளாகவே இருக்கின்றனர். எனினும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக கட்சி, தொழிற்சங்க பேதங்களை மறந்து அனைவரும் ஓரணியில் திரண்டு ‡ ஒன்றாகக் குரலெழுப்பவேண்டும் என்று மலையக புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், தமிழ் இனத்துக்கு எதிராக வரும் பிரேரணைகளைத் தமிழ் உறுப்பினர்கள் எதிர்க்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மலையகப் பிரச்சினைகள் சம்பந்தமாக பிரேரணைகளை சமர்ப்பித்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் எனவும் மலையக புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் வெற்றிபெற்றுள்ள மாகாணசபை உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் கவனஞ்செலுத்தவேண்டும்.
கண்டி மாவட்டம்
கண்டி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் 96இற்குப் பிறகு ஒன்றாக இருந்துவந்த தமிழ்ப் பிரதிநிதித்துவம் இம்முறை இரண்டாக உயர்ந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் வேலுகுமார், இ.தொ.கா. வேட்பாளர் துரை மதியுகராஜா ஆகியோர் மக்களின் ஆணையைப் பெற்று மாகாணசபைக்குச் ய சல்லவுள்ளனர். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ராஜரட்ணம் பெறாவிட்டாலும் குறிப்பிட்டளவு வாக்குகளை அவர் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாத்தளை
மாத்தளை மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஓர் ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது. அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துசாமி சிவஞானம் 6 ஆயிரத்து 539 வாக்குகளைப் பெற்று மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ளார். மாத்தளையில் இருந்து இதுவரை தமிழ்ப் பிரதிநிதித்துவம் மத்திய மாகாணத்துக்கு தெரிவுசெய்யப்படவில்லை. இம்முறை மாத்தளை வாழ் தமிழ் மக்கள் தமிழ்ப் பிரதிநிதியயாருவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, மாத்தளைவாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் இ.தொ.கா. இனி குரல்கொடுக்கவேண்டும் என்பது மலையக சமூக ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மத்திய மாகாணசபை தமிழ்க் கல்வி அமைச்சு யாருக்கு?
மத்தியமாகாணசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு தமிழ்க் கல்வியமைச்சுப் பதவிக்கான போட்டியும் ஆரம்பமாகியுள்ளது.
தேர்தல் பரப்புரைகளின்போது இ.தொ.காவும், தொழிலாளர் தேசிய சங்கமும் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவியைக் குறிவைத்து கருத்துகளை வெளியிட்டன. இவ்விரு கட்சிகளும் மக்களின் ஆணையைப் பெற்றுள்ளன. எனவே, அமையவுள்ள மத்தியமாகாண சபையில் தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி இ.தொ.காவுக்கா அல்லது தொழிலாளர் தேசிய சங்கத்துக்கா என்ற சர்ச்சை தற்போது உருவாகியுள்ளது.
மத்திய மாகாணசபை அமைச்சரவையில் கடந்தமுறை தொழிலாளர் காங்கிரஸுக்கே தமிழ்க் கல்வியமைச்சுப் பதவி வழங்கப்பட்டிருந்தது. போனஸ் ஆசனம் வழங்கப்பட்ட அனு´யா சிவராஜாவுக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது.
இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...