நாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்
nawalapitiyaநாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூட்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்; சுமார் 600 குடும்பங்களை அத்தோட்டத்திலிருந்து வெளிற்றுவதற்கான முனைப்பினை தனியார் கம்பனியும் அரசாங்க நிறுவனங்களும் மேற்கொள்வதையொட்டி மலையக சிவில் சமூகம் தனது கவனத்தினை செலுத்தியுள்ளதுடன் கவலையை வெளிப்படுத்துகின்றது.
காடாக இருந்த இலங்கையின் மலைப்பிரதேசத்தில் காடுகளை வெட்டி, மலைகளை சரித்து, பாறைகளை உடைத்து கோப்பி, கருவா, தேயிலை என பயிரிட்டு வீதிகள் புகையிரதப்பாதைகள் என அமைத்து ஓர் நாடாக மாற்றியது இம் மலையக சமூகமேயாகும். ஆங்கிலேயர் இலங்கைக்கு வரும் முன் மலையகத்திலே பெருந்தோட்ட பயிர்களோ, குடியிருப்புகளோ இல்லாத நிலையில் வெறும் காடாகவே காணப்பட்;டது. மலையக மக்களே இந்நாட்டினை பூரணமாக செப்பனிட்டு, செழிப்படையச் செய்தனர்.
1820ஆம் ஆண்டு காலம் தொட்டே படிப்படியாக இலங்கையில் குடியேறத் தொடங்கி குடியிருப்புகளையும் பெருந்தோட்டங்களையும் உருவாக்கி தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் வாழும் நிலங்கள் இலங்கை சுதந்திரமடைந்ததும் அரசுடமையாக்கப்பட்டன. பின்னர் தனியார் கம்பனிகளுக்கு அந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன இவை தனியார் கம்பனிக்கு சொந்தமானவையல்ல.
அரசு தனது நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகளையும் (சுiபாவ வழ டகைந யனெ சுiபாவ வழ ர்யடிவையவ) வாழ்வதற்கான இட உரிமையையும் வழங்க கடமைப்பட்டுள்ளது.
இலங்கை சனநாயக சோலிசக்குடியரசின் அரசியலமைப்பு இலங்கை பிரஜைகளுக்கு வாழும் உரிமைகளையும், வதிவிட உரிமையையும், நடமாடும் உரிமையையும், வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற நிலையில் அவ்வுரிமைகளை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள், அவர்களும் அரசியலமைப்பின் 4ம் உறுப்புரையின்படி இறைமையுடையவர்களே என்ற அடிப்படையில் போஹில் தோட்ட மக்களை பலாத்காரமாக வெளியேற்றுவது அரசியலமைப்பினை மீறும் செயல்பாடு என்பதோடு அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (Universal Declaration of Human Rights) சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் (International Convention on Civil and Political Rights) என்பவற்றுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறும் செயற்பாடு என்பதோடு இவை Genocide Convention படி இனப்படுகொலையாகும் என்பதையும் மலையக சிவில் சமுகம் சுட்டி காட்டுகின்றது.
எனவே தனது நாட்டில் தனித்துவமான கலாசாரம், மொழி கொண்ட இனக்குழுவான மலையக மக்களின் வாழும் உரிமை, வதிவிட உரிமையை உறுதி செய்ய காணியுரிமை வழங்குமாறும், தோட்ட மக்கள் தனியார் கம்பனிகளினாலும், அரசாங்க அதிகாரிகளாலும் வெளியேற்றப்படுவதை தடுக்குமாறும் அதிமேதகு சனாதிபதி அவர்களிடமும் இலங்கை பாராளுமன்றத்திடமும் மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
மீண்டுமோர் யுத்தம் இடம்பெறாத வகையில் அனைத்து மக்களது சுய நிர்ணய உரிமை, தேசியம் மனசாட்சி, சிந்தனை, சலாசாரம், நம்பிக்கை என்பவற்றை மதித்தும் போற்றியும், காத்தும் அரசியலமைப்பில் உள்ளது போன்று அவற்றினை பின்பற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் பேதமற்ற சுபிட்சமான நாடாக கட்டியெழுப்ப சிறுபான்மைக்கெதிரான ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி பூண வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.
நன்றி
இப்படிக்கு
செயலாளர்
எஸ்.மோகனராஜன் சட்டத்தரணி – மலையக சிவில் சமூகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...