Headlines News :
முகப்பு » , , » தேசபக்தன் கோ. நடேசய்யர் ஞாபகார்த்த நிகழ்வில் ஒலித்தவைகள் - சு. உலகேஸ்பரா

தேசபக்தன் கோ. நடேசய்யர் ஞாபகார்த்த நிகழ்வில் ஒலித்தவைகள் - சு. உலகேஸ்பரா

மீனாட்சியம்மாள் நடேசய்யர் அவர்களின் பங்களிப்பு பற்றி  - லெனின் மதிவானம் 

மலையகத்தின் தொழிற்சங்க முன்னோடியான தேசபக்தன் கோ. நடேசய்யரின் 65வது நினைவுத்தினத்தை முன்னிட்டு ஞாககார்த்த உரையையும் இந்நிகழ்வை முன்னிட்டு நடாத்தபட்ட போட்டிகளில் கலந்துக் கொண்டவர்களுக்கும் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவையும் மலையக சமூக ஆய்வு மையம்(ம.ச.ஆ.மை) ஒழுங்கமைத்திருந்தது. இந்நிகழ்வு   அருட்தந்தை மா. சக்திவேல் தலைமையில் ஹட்டன் சி. டபிள்யூ எப் மண்டபத்தில் நடைப்பெற்றது. அருட்தந்தை மா. சக்திவேல்  தமது தலைமையுரையில் :

“மலையக சமூகத்தின் வளர்சிக்கு காத்திரமான பங்களிப்பினை செய்த கோ.நடேசய்யர் இன்று பல விதங்களில் மறக்கப்பட்டுவருகிக்றார். எமது சமூகத்தின் வளர்சிக்கான தீபத்தை ஏற்றிவைத்தவர். தீபங்கள் எப்போதுமே நம்மை வாழ வைப்பதற்காக ஏற்றப்படுவதாகும். ஆவகையில் எமது வாழ்வகாக தீபத்தை ஏற்றிய ஒருவரை நாம் நினைவுக் கூறவேண்டியது காலத்தின் தேவையாகும். எங்களது ம.ச.ஆ.மைத்திற்கென்று ஒரு அலுவலகமோ அல்லது கட்டிடமோ இல்லை. அதற்கென்று வங்கி கணக்கில்லை. மக்களை முதன்மையாக கொண்டு அவர்களின் ஆதரவு ஒன்றிலே அது இயங்கிவருகின்றது. அந்தவரகையில் ஒரு மக்கள் மத்தியில் நடமாடும் அமைப்பாக இது காணப்படுவதுடன் தொடர்ந்து மக்கள் நலன் சார்ந்த பதாகைகளை சுமந்து செல்வதில் நாம் முன்னின்ற உழைப்போம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். இந்தவகையில் நாங்கள் மன்னடெக்கின்ற முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாகவே இந்த ஞாபகார்த்த நினைவுப் பேரவையை ஒழுங்கமைத்துள்ளோம்”  என நல்லதொரு தொடக்கத்தை ஆரம்பித்திருந்தார்.
'மலையக சமூக ஆய்வு மையத்தின்' ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை.சக்திவேல் 

தொடர்ந்து இருபெரும் ஆளுமைகள்: கோ. நடேசய்யர் மீனாட்சியம்மாளை முன்னிறத்தி..! என்ற தலைப்பில் உரையாற்றிய  திரு லெனின் மதிவானம் தமதுரையில்:
 ”மீனாட்சியம்மாளும் அவரது கணவர் கோ. நடேசய்யரும் ஒரே அரசியல் அணியில் செயற்பட்ட அப+ர்வமான தம்பதிகளாவர். மலையக மக்களின் துன்பம் தோய்ந்த வாழ்வை எண்ணி அவர்களிடையே விடுதலையுணர்வை ஏற்படுத்தியதுடன் அம்மக்களை ஸ்தாபனமயப்படுத்தும் பணியிலும் ஈடுபாடு கொண்டு உழைத்தார். இவ்வாறு சமூக வாழ்வையும் தமது சொந்த வாழ்வையும் ஒன்றாகச்  சேர்த்து நேசிக்கின்ற பண்பினை நாம் நடேசய்யரில் காண்கின்றோம். இத்தகைய செயற்பாடுகளுக்கு ஆதர்சனமாக அமைந்த நடேசய்யரின் காதலியே- இரண்டாவது மனைவியே மீனாட்சியம்மாள் ஆவார். இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பேராட்டத்தை முன்வைத்திருந்த அதேசமயம் பேரினவாதத்தை காணத்தவறிவிட்டனர்.
இக்காலப்பகுதில் வட-கிழக்கு சார்ந்த அரசியல் தலைவர்களும் புத்திஜீகளும் இலங்கைத் தேசியம் குறித்துக் கவனம் செலுத்தியிருந்தமையினால் பேரினவாதம் பற்றிச் சிந்திக்க தவறிவிட்டனர். சேர்.பொன். அருணாசலம் போன்றோர் பேரினவாத்தை அடையாளம் கண்டிருந்த போதும் அதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அவர் இறந்து விடுகின்றார்.  பின் வந்த தலைவர்கள் அதனைக் கவனத்திலே எடுக்கவில்லை. உயர் மத்திய தர வர்க்க வாழ்க்கை முறைகள், அரசியல் சிந்தனைகள், அரச சலுகைகள் காரணமாகப்  பேரினவாதம் குறித்து அவர்கள் சிந்திக்கத் தவறிவிட்டனர்.
'தப்பு' மலையகத் தொழிலாளர்களை தொழிலுக்கு அழைப்பது முதல் அவர்களது திருவிழா கொண்டாட்டங்கள், மரண ஊர்வலங்கள் வரை பாவிக்கப்பட்டு வந்துள்ள இசைக்கருவி.

பேரினவாதத்தை அரசியல் தளத்தில் சரியாக அடையாளம் கண்டவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவர். பேரிவாதத்தை சாடினார்கள் என்பதற்காக அவர்கள் இனவாதியாக இருக்கவில்லை. எனபது முக்கியமாக கவனத்தில் கொள்ளத்தக்க விடயம். இத்தகைய தெளிந்த சிந்தனையுடன் அமைப்பாக்க செயற்பாடுகளை முன்னெடுத்த இத்தம்பதியினர் உழைக்கு மக்களையே தமக்கு ஆதர்சனமாக கொண்டிரந்தமையினால் அவ்வமைப்பு ஒரு பலமான ஸ்தாபனமாக உருவெடுத்தது. தோட்டத் தொழிலாளி என்ற பத்திரிக்கையை ஆரம்பித்ததுடன் அவற்றிலே அதாழிலாளர்களின் கடிதங்களை பிரசுரித்திருந்தமை இதற்க தக்க எடுத்துக் காட்டாகும்.
இன்று விடுதலையை நாடும் பல அமைப்புகள் மத்தியதரவர்க்கத்தினரையே அதிகமாக முழுமையாக அணித்திரட்டிருந்தமையினால் சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அவர்களது மத்தியதரவர்க்க பண்புகள் தலைக்காட்டுகின்ற போது அவைந ம்பிக்கையீனத்தின் ஓலங்களாக அமைந்திருப்பபை அண்மைக்கால நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே ஒரு உழைக்கம் மக்களின் சுபிட்சத்திற்கானஅரசியல் பண்பாட்டு இயக்கமொன்றினைக் கட்டியெழுப்புகின்ற போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டியதன் அவசியத்தை நாம் நடேசய்யர் தம்பதிகளில் கற்ற வேண்டியுள்ளது. இன்றைய சூழலில் புதிய அரசியல் பண்பாட்டு பாதையில் உருவாகிவரும் எண்ணற்றவர்களுக்கு இவ்வாளுமைகளின் வாழ்வும் வளமும் வழிகாட்டி நின்கின்றன. அத்தகைய பாதையில் உறுதியுடன் மேலும் முன்னேற முனைவதே இத்தம்பதியினருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.” எனக் குறிப்பிட்டார். 
“மலையக மக்கள் தேசிய இனமாக பரிணமித்தமை ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் உரையாற்றிய ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி திரு. வ. செல்வராஐ தமதுரையில்: 
“மலையக மக்கள் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மக்கள் என்றாலும் அவர் இம்மண்ணில் குடியேறிய பின்னர் அவர்கள் தங்களது சமூகவுருவாக்கம் காரணமாகவும் கூடவே அவர்கள் நடாத்திய போராட்டங்களினூடாகவும் தாம் தனியொனதொரு தேசிய இனம் என்ற உணர்வைப் பெற்றனர். மலையக தேசிய இனத்தின் வளர்ச்சியை உழைக்கும் மக்கள் நலன் சார்பான கண்ணோட்டத்தில் நோக்குவது அதன் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வலிகோலும்.
நிகழ்வின் சிறப்பு அதிதி சுமந்து வந்த பரிசுக்குறிய சான்றிதழ்களும, விருதுகளும் கையேற்கப்படும் காட்சி

ஆனால் இன்று வரை இலங்கை அரசாங்கமும் ஏனைய ஏகபோக சக்திகளும் இம்மக்களை குறிப்பதற்காக ‘இந்தியத் வம்சாவழி தமிழர்” என்ற அடையாளத்தையே உபயோகித்து வருகின்றனர். இப்பதமானது இலங்கையின் பெருந்தேசியவாதிகளும் ஏகபோக வர்க்கத்தினரும் இம்மக்களை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதனை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் உறுதியான இனஇ மதஇ மொழி அரசியல் பொருளாதாரஇ பிரதேச வேறுபாடுகளை கொண்டிருக்கின்ற இம்மக்கள் மலையக தமிழர் என்ற உணர்வையே கொண்டு காணப்படுகின்றனர்.
இலங்கையில் இந்திய தமிழர்கள் என்று அழைக்கக் கூடிய, அதே சமயம் மலையகத் தமிழருடைய எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு வர்க்கப்பிரிவினர் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர். பொதுவாக இவர்கள் இலங்கையில் தரகு முதலாளிகளுடன் ஏகபோக வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றவர்களாவர். இந்திய இலங்கை நட்புறவின் மூலம் கிடைக்கின்ற சகல விதமான  சலுகைகளையும் இவ்வர்க்கத்தினரே அனுபவித்து வருகின்றனர். இத்தகைய நலனின் பின்னணியில் தான் மலையக தமிழர் சமுதாயத்தில் தோன்றிய மத்தியதர வர்க்கம் அவ்வப்போது வந்து குடியேறும் இந்தியத் தமிழர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு உழைக்கும் வர்க்கத்தினரை தமக்கு சாதகமாக காட்டி அதனூடாக தமது நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே ‘இந்திய வம்சாவழி தமிழர்” என்ற பதத்தை பிரயோகிக்கின்றனர் . இதற்கு எதிரான உறுதியான தத்தூவாத்த பேராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.” எனக் குறிப்பிட்டார். 
இந்கழ்வில் மலையக சமூகத்தின் அவலத்தை அதன் இருப்பை சிலைநிறுத்தும் வகையிலான பாடல்கள் பாடப்பட்டன. இந்நிகழ்வில் எல்லோரது கவனத்தையும் பெறுவதாக தப்பு கலைஞர்களின் தப்பிசை நிகழ்வு அமைந்திருந்தது. மலையக மக்களின் இன்பத் துன்பங்களை மட்டுமல்ல அவர்கள் தம் முஸ்டிகளை உயர்த்தில் செய்க கலக உணர்வுகளை கூட அவ்விசைநிகழ்வு பிரதிப்பலித்திருந்தமை குறித்துக் காட்ட வேண்டியவைகளாகும். இந்த நிகழ்வில் மிக உச்சமான அம்சமாக அமைந்திருந்தமை விழாவில் பிரதம அதியாக மலையக பெண்தொழிலாளியான திருமதி. சி. வினையாத்தா பிரசன்னமாகி பரிசில்கள் வழங்கும் வைபவத்தை தொடக்கி வைத்தமையாகும்.
மலையக தேசியம் பற்றி விரிவுரையாளர் வ.செல்வராஜா

இறுதியாக ஒன்றைக் கூறி வைத்தல் அவசியமானதொன்றாகும். தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் புரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்கு வழிகோலக்கூடிய புதிய பண்பாட்டு வடிவங்கள் நடைமுறைவாயிலாக கண்டறியப்படுவது அவசியப் பணியாகியுள்ளது. இக்காலத் தேவையைக் கையேற்கத்தக்கது. வர்க்கமாக, முன்னணிப் படையாக தொழிலாளிவர்க்கத்தை வளர்த்தெடுக்கும் வரலாற்றுக் கடமையின் ஒருப்பகுதியாகவே கோ.நடேசய்யர் தம்பதிகளை நினைவுக் கூறுகின்றோம்.   20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பிரமாண்டமான வெற்றிகளை பெற்று சாதனையை நிலைநாட்டியவர்கள் தேசிய ஜனநாயக சக்திகளும் கம்யூனிஸ்டுகளும் ஆவார்.  இந்த நூற்றாண்டிலும் அதனை விட பிரமாண்டமான வெற்றிகளை பெறுவதற்கு இந்த காலம் குறித்த சுய விமர்சனத்துடன் செயற்படவேண்டியுள்ளது. 
மறைந்த அறிஞர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விழாக்கள், நினைவுப்பேருரை, அஞ்சலி உரைகள் ஆகியன நிறைவுப்பெற்ற பின்னர் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் ஏதும் நடைபெறுவதில்லை. அந்தவகையில் அன்றைய உரைகளும் பதிவாக்கபட வேண்டியவையாகும். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மலையக ஆய்வு மையம் சார்பில் சிவம் பிரபாகரன் செய்திருந்தார்.

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates