Headlines News :
முகப்பு » , , » இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் - க.சண்முகலிங்கம்

இலங்கையில் பௌத்தம்: தத்துவமும் நடைமுறையும் - க.சண்முகலிங்கம்

இந்தியாவிற்கு வெளியே பௌத்தம் பரவியபோது, அச்சமயம் முதலில் இலங்கைக்குப் பரவியது.

அதன் பின்னரே பௌத்தம் உலகின் ஏனைய நாடுகளுக்குப் பரவியது. இலங்கையில் பரவிய பௌத்தம் தேரவாதம் ஆகும். இலங்கையின் பௌத்தத்திற்கு 2500 ஆண்டு களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வரலாறு உள்ளது. இக்காரணங் களினால் இலங்கையின் பௌத்தம் தனக்கேயுரிய சிறப்பியல்பு களை உடையதாய் இருக்கிறது. இச்சிறப்பியல்புகளை 'தத்து வமும் - நடைமுறையும்' என்னும் தலைப்பில் ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். மேற்போக்கான பார்வையில் முரண் பாடாகத் தோன்றும் விடயங்கள் பௌத்தத்தின் 'நிலைமாற்றம்' (Transformation) செய்துகொள்ளும் திறன் மூலம் இணக்கம் செய் யப்படுவதையும் காண்கிறோம். பௌத்தத்தின் இப்பண்பினை நிலைமாற்றத்திறன் (Transformative Capacity) என ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

கடவுள் மறுப்புக்கொள்கை:

பௌத்தம் கடவுள் மறுப்புக் கொள்கையை கொண்டது. அது ஓர் அற ஒழுக்க இயக்கமாகும் (An Ethical Movement). அதனைச் சம யம் என்று கூறுதல் இயலாது என்று வாதிடுவோர் உள்ளனர். இவ் வாதத்தின் தர்க்கரீதியான முடிவு இலங்கையில் பௌத்தம் என்று ஒரு சமயம் இல்லை . ஓர் அற இயக்கம் அப்பெயரில் இருந்து வந் துள்ளது என்றல்லவா அமைந்து விடும்? இந்த வாதத்தின் பொருத்தமின்மையை கொம்பிரிட்ஜ் என்ற அறிஞர் எடுத்துக் காட் டியுள்ளார். பௌத்த அறக்கருத்துக்கள் பௌத்த சமயத்தின் ஓர் அம்சம் மட்டுமே. அது சமயத்தின் அனைத்துப் பண்புகளையும் உடையதாய் உள்ளது என்று அமைதி காண்பதே சரியானது. குறிப்பாக பௌத்த சமயத்தின் சமூக - நிறுவன வடிவங்கள் அதற்குச் சமயத்தின் பண்புகளை வழங்கியுள்ளது என்பதே அறி ஞர்களின் முடிவாகும். ஆகையால் ஒரு சமூகத்தின் சமூக வர லாற்றின் ஊடாக அச்சமூகத்தின் சமயம் பற்றி ஆராய்வதை அறி ஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடவுள் மறுப்புக்கொள்கை பௌத்தத்தின் நடைமுறைகளுடன் முரண்பாடின்றி இணக்கம் பெறுவதை அடுத்துப் பார்ப்போம். பௌத்த சமயப் பிரபஞ்சவியல் (Cosmology) இவ்வுலகம், அப் பால் உள்ள உலகம் என்ற இருவேறு உலகங்களைக் குறிப்பிடு கிறது. நாம் வாழும் இவ்வுலகம் பெளதிக உலகம் ஆகும். அப் பால் உள்ள உலகம் 'லோகோத்திர' ஆகும். பௌத்த சமயத்தின் பிரபஞ்சவியலில் அப்பால் உலகில் வாழும் கடவுளர்களுக்கும், தேவர்களுக்கும் அல்லது தேவதைகளுக்கும் இடம் உள்ளது. புத் தர்பிரான் உயர் நிலையிலும், அடுத்தபடியில் கடவுளர்களும், தேவர்களும் வைக்கப்பட்டுள்ளனர். ஆவிகள், பிசாசுகள் போன்ற இயற்கையிருந்த சக்திகளுக்கும் பௌத்தத்தில் இடம் உள்ளது. புத்தர்பிரான் முதல் ஆவிகள், பிசாசுகள் வரை ஒருபடிநிலைய மைப்பு உள்ளது. இப்படித் தரக் கட்டமைப்பு (Hierarchy) பௌத்த சமயச் சடங்குகள், நடைமுறைகளை விளங்கிக் கொள்வ தற்கு உதவுகிறது. கடவுளர்களுக்கும், தேவர்களுக்கும், தீய ஆவி கள், பிசாசுகள் என்பனவற்றிற்கும் செயல் வகிபாகம் (Functional Role) உள்ளது. மக்கள் புத்த பெருமானிடம் உலகியல் நன்மை களை வழங்கும்படி கேட்டு முறையிடுவதோ வணங்குவதோ கிடை யாது. உலகியல் நன்மைகளை வழங்குபவர்கள் கடவுளர்களும், தேவர்களும் ஆவர். உலகில் தீய செயல்களைச் செய்பவர்க ளுக்கு தண்டனை வழங்குவன தீய ஆவிகளும், பிசாசுகளுமாகும். இவ்விடயம் சில ஆய்வாளர்களால் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

சமயமும் இனத்துவமும் அரசும் :

இனம், சாதி, மொழி, தேசம் என்ற எல்லைகளைக் கடந்த உலகப் பொதுவான அற ஒழுக்கங்களையும் விழுமியங்களையும் போற்று வது பௌத்த சமயம். அத்தகையதொரு சமயம் இலங்கையில் சிங்களவர் என்ற இனத்துவ அடையாளத்துடன் பிணைக்கப்பட்டு 'சிங்கள - பௌத்தம்' ஆக வளர்ச்சியுற்றுள்ளது. இந்த அடையா ளம் பௌத்தத்தின் உலகப்பொதுமை என்ற விடயத்துடன் முரண் படுகிறது.

பௌத்த சமயத்திற்கும் சிங்கள இனத்திற்கும் இடையிலான பிரிக்கமுடியாத உறவு, இலங்கையின் பௌத்த சமய வரலாற்றின் ஊடாக விளக்கப்படவும், புரிந்து கொள்ளப்படவும் வேண்டும். இலங்கையின் பௌத்த சமய வரலாற்றின் சிறப்புக் கூறுகளாக நான்கைக் குறிப்பிடலாம்.

  • பௌத்த சமயம் இலங்கைக்கு அரச ஆதரவுடன் பரப்பப்பட்டது.
  • துறவிகளான பிக்குகள் பௌத்த சமயத்தின் பரப்புகையிலும், அதனைப்பேணிப் பாதுகாப்பதிலும் முதன்மையான பங்காற்றினர்.
  • சிங்கள மக்கள் என்ற அடையாளமும் பௌத்த சமயிகள் என்ற அடையாளமும் ஒன்றிணைந்து 'சிங்கள - பெளத்தம்' என்ற ஒரு மித்த அடையாளத்தைப் பெற்றது.
  • தொடக்க முதலே இருந்து வந்த அரசு - சமயம் - இனத்துவம் என்ற பிணைப்பு நவீன காலம் வரை தொடந்தது.

தீபவம்சம், மகாவம்சம் போன்ற பௌத்த வரலாற்று நூல்களின் வழியாக கட்டமைக்கப்பட்ட இலங்கை வரலாறு மேற்குறித்த சிறப் பியல்புகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக அமைந்துள்ளது. தீபவம் சம் கி.பி.4 அல்லது 5ம் நூற்றாண்டிலும் மகாவம்சம் 6ம் நூற் றாண்டிலும் இயற்றப்பட்டதென வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின் றனர். இவ்விரு நூல்களும் புராணக் கற்பனைகளையும், பழமரபுக் கதைகளையும் உள்ளடக்கியனவாக உள்ளன.

இலங்கையில் பௌத்த சமயமும் அரசும் பிரிக்கமுடியாத உறவு உடையவை என்ற கருத்தும் தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையேயான இன்னொரு முரண் ஆகும்.

  • பௌத்த சமயம் அதன் தூய தத்துவ வடிவில் தனிநபர் ஆன் மீகத் தேடலை வலியுறுத்துவது. அவ்வகையில் அது தனிமனி தவாதப் பண்புடையது. இலங்கையில் பொதுஜனங்களின் சமய மாக வெகுஜன சமயமாக பௌத்தம் மாறியபோது அதன் தனிமனிதவாதப் பண்புகள் மறைந்தன. துக்கம் - துக்க நீக்கம் என்ற ஆன்மீகம் சார்ந்த விடயங்க ளோடு தொடர்புடைய ஆன்மீகத் தேடல் அரசியலை புறம் தள் ளுவது. ஆகையால் அது அரசியலை விலக்குவது.
  • இலங்கையில் பௌத்தம் நவீன காலத்தில் அரசியலோடு கலப் புற்ற வெகுஜன பௌத்த சமய இயக்கமாகியதும், அரசுடனான பிணைப்பு வலியுறுத்தப்படுவதால் அரச மதம் ஆவதும் இம்மு ரணை வெளிப்படையானதாக்கியுள்ளது.

சொத்துடமை :

சொத்துக்கள் எதுவும் அற்றவரான துறவி, பெளத்த துறவு ஒழுக் கத்தின் இலட்சிய மாதிரி ஆவர். உடைமைகள் இல்லாதவர், வீட் டைத்துறந்தவர், வறுமையில் வாழ்பவர், வனவாசி என்பன துறவின் இலட்சிய மாதிரியின் ஏனைய கூறுகளில் சிலவாகும். உபாசகர்க ளான உலகியல் வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுடன் தொடர்பு கொண்டு வாழும் தேவையும் துறவிக்கு உள்ளது. இவ்வாறான உலகியல் தொடர்பு பல சந்தர்ப்பங்களில் அவரை சொத்தின் உடைமையாளராகவும், சொத்தின் நிர்வாகியாகவும் மாற்றுகிறது. நீதிவாசகம் அல்லது தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையி லான முரண்பாடாகவும் இது அமைந்து விடுவதும் உண்டு. இலங் கையின் பௌத்தத்தின் நீண்ட வரலாற்றில் இம்முரண்பாடு பல வடிவங்களில் வெளிப்பட்டதைக் காணமுடியும்.

இலங்கையில் பௌத்த சமயத்தின் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்தில் ஏற்பட்ட முரண்நிலை ஒன்றைப் பற்றி இங்கு சுருக்கமாகக் கூறுவோம். கண்டி இராச்சிய காலத்தில் 16ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும் 18ம் நூற்றாண்டின் முற்பகுதிக்கும் இடைபட்ட காலத்தில் 'ஹன்னினான்சே' என்ற வகையினர் பௌத்த கோவில்களின் உடைமையாளர்களாக இருந்தனர். 'உப சம்பாத' என்னும் சடங்கு நடத்தப்படாமையால் கோவில்களின் பிக் குகள் முறைப்படி வரிசைப்படுத்தப்பட்டவர்களாய் இருக்க வில்லை. கண்டிப் பகுதியில் கோவில்கள் நில உடைமையாளர் குடும்பங்களின் சொத்துக்களாக இருந்துவந்தன. இக்குடும்பங்கள், தமது குடும்பத்தின் ஆண்மகன் ஒருவரை 'சமனேராவாக' (இளம் துறவி) சேர்த்து, 'உபசம்பாத' சடங்கு நடத்துவித்த பின்னர் துறவி யாக ஆக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. முறைப்படி பிக்கு வாக 'உபசம்பாத' பெற்ற ஒருவர் கோவிலின் உடைமையாளராக இருப்பார். இதற்கு மாறாக கண்டியில் 16ம் நூற்றாண்டு முதல் 'உபசம்பாத' பெறாதவர்கள் கோவில்களின் பிக்குகளாக இருக்கும் நிலை தோன்றியது. இவர்கள் உண்மையில் பிக்குகள் என்ற தகு தியை உடையவர்கள் அல்லர். இவர்கள் 'ஹன்னினான்ச' எனப்பட் டனர்.

18ம் நூற்றாண்டுகளின் தொடக்க ஆண்டுகளின் போது சிங்கள சங்க அமைப்பு துறவிகளுக்குரிய பண்புகளை இழந்த அமைப் பாகச் சீரழிந்திருந்தது (சரத் அமுனுகம 2016:212) சிறியனவும் பெரியனவுமான கோவில்கள் ஹன்னினான்சே' களின் உடைமைக ளாக இருந்தன. நில உடைமையாளர்களான 'ஹன்னினான்சே'கள் தம் பெரும்பகுதி நேரத்தை உலகியல் அலுவல்களிலேயே கழித்த னர். 'சுவாமின்வகன்சே' அல்லது 'உன்னான்சே' என்று மதிப்புடன் அழைக்கப்பட்ட துறவி 'ஹன்னினான்சே' என்று அழைக்கப்படும் தாழ்நிலை ஏற்பட்டது (மேலது பக். 212) ஹன்னினான் சேகளில் பெரும்பான்மையினர் பிரம்மசாரிகளாகக் கூட இருக்கவில்லை. தமது ஆசை நாயகிகளையும் அவர் தம் பிள்ளைகளையும் கோவில் வளவுகளிலும், கோவில்களுக்கு அருகில் உள்ள கோவில் நிலங்களிலும் குடியிருத்தினர். இவர்களது சந்ததியினரின் 'வாசகம்' பெயர்களில் விகார வளவுகே' எனவும் 'விகார கெதரே' எனவும் சொற்கள் இணைந்து கொண்டன. இவ்விதமாக இரத்த உறவு முறைப் பெயர்கள் சொத்துடமை அடையாளத்துடன் கலப் புற்றன. ஹன்னினான் சகள் மஞ்சள் ஆடையை அணியாது வெள் ளுடை தரித்தனர். 'உபசம்பாத' சடங்கு, கைவிடப்பட்டது. சமய நூல்களைக் கற்பதில் இவர்கள் நாட்டம் கொள்ளவில்லை. பாளி மொழிக் கல்வியும் கைவிடப்பட்டது. சோதிடம், மந்திர தந்திரச் சடங்குகள், ஆவிகளுடன் உரையாடுதல் போன்ற விடயங்களில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றனர்.

சங்க அமைப்புக்கு நேர்ந்த இந்த அழிநிலைக்கு எதிர்ப்பு மல்வத்த, அஸ்கிரிய போன்ற மடாலயங்களின் பொறுப்பில் இருந் தோரிடம் இருந்து எழவில்லை. கண்டியின் எல்லைப் பகுதியான 'தும்பன'வில் உள்ள 'வெலிவிட்ட' என்ற கிராமத்தைச் சேர்ந்த 'சமனேரா' (இளம் பிக்கு) ஆகிய வெலிவிட்ட கரணங்கர அவர்கள் இந்த எதிர்ப்பியக்கத்தை தொடக்கி வைத்தார். இதுவே சரணங்கர தேரர் பெயரால் அழைக்கப்படும் 18ம் நூற்றாண்டின் பௌத்த மறு மலர்ச்சி இயக்கமாகும். 'உபசம்பாத' சடங்கு நிகழாமையின் விளைவாக ஏற்பட்ட தீங்குகளைக் களைவதற்கான இந்த மறு மலர்ச்சி இயக்கத்தின் பின்புலத்தில் சொத்துடமையும், நிலப்பிரப் புத்துவ நலன்களும் தொடர்புபட்டிருப்பதையும் காணலாம். சர ணங்கர தேரரின் மறுமலர்ச்சி இயக்கம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான இயக்கம் என்று கருதுவதற்கு இல்லை. சொத்துடமை முறை சங்க அமைப்பில் புகுத்திய தீய அம்சங்களைக் களைந்து அதனைத் தூய்மைப்படுத்தும் இயக்கமாகவே இது அமைந்தது.

சாதியும் சமயமும் :

பௌத்த கோவில்களுக்கு அரசனால் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் கண்டி இராச்சியப் பகுதிகளில் 'விஹாரகம்' என அழைக்கப்பட்டன. அவ்வாறு நிலங்கள் அரசனால் வழங்கப்பட முன்னர் அவை 'கபடாகம்' என்ற பெயரைப் பெற்றன. கண்டியின் 'கபடாகம் கிராமங்களின்' நிலங்களைப் பயிரிட்ட குடியான் விவ சாயிகள் தத்தம் சாதிக்குரிய சேவைக் கடமைகளை அரசனின் 'கபடாகம்' திணைக்களத்திற்கு வழங்கினர். குறித்த நிலங்கள் 'விஹாரகம்' நிலங்களாக மாறியபோது, அந்நிலங்களின் குடியான் விவசாயிகளும் விகாரைகளின் குடியான்களாகவும், சேவைகளை விகாரைகளுக்கு வழங்குபவர்களாகவும் மாற்றப்பட்டன. கண்டியின் நிலப்பிரபுத்துவ சமூக ஒழுங்கமைப்பின் பாகமாக கோவில் என்ற சமய நிறுவனம் விளங்கியது. இதனை கித்சிறி மலல்லகொட என்ற ஆய்வாளர் பின்வருமாறு விளக்கிக் கூறியுள்ளார்.

'நிலமானிய பொருளாதார முறையின் சிக்கலான தொழில் பிரிவினை சாதியை அடிப்படையாகக் கொண்டிருந்தது. மடாலயங்களின் சொத்துக்களின் நிர்வாகக் கட்டமைப்பிலும் இதுபோன்ற தொழில் பிரிவினை இருந்தது. மடாலயங்களுக்குச் சொந்தமான 'முத்தெட்டு' வகை நிலங்களை கொவிகம் சாதியினைச் சேர்ந்தோர் குத்தகைக்குப் பயிரிட்டனர். கோவில்களின் சமயத் துறவிகளுக்கு அவர்களின் அறுவடையின் ஒரு பகுதி வழங்கப்பட்டது. ஏனைய சாதிகளைச் சேர்ந்தவர்கள் கோவில்களுக்குத் தமது சேவைகளை வழங்கினர். இவர்களுக்குச் சேவைக்குரிய கூலியாக அரிசி வழங் கப்பட்டது. அல்லது கோவில் நிலத்தில் பயிரிடும் உரிமை வழங் கப்பட்டது. கோவில்களைக் கட்டுதல், பிறதொழில் நுட்பவேலை கள் தெரிந்த உழைப்பாளர்களையும், சித்திரவேலைகள், வர்ணம் பூசுதல் போன்ற வேலைகளில் தேர்ந்தவர்களான ஆட்களையும் நவண்டன சாதிக்குழு வழங்கியது. செங்கல், ஓடு, மட்பாண்டங் கள், என்பனவற்றைக் கோவில்களுக்கு வழங்குபவர்களாக குயவர் சாதியினர் பணி செய்தனர், கோவில்களதும், மடாலயங்களின் சுவர்களுக்கு வெள்ளையடிக்கவும், நிலத்திற்கு வெள்ளையடிக்க வும், தேவைப்பட்ட சுண்ணாம்பை 'குணு ' சாதியினர் வழங்கினர். 'ரதவ்' எனும் வண்ணார் குலத்தவர் சலவை செய்த துணியையும், விளக்கு எரிப்பதற்கான திரிச்சீலையையும் கொடுத்தனர். 'பெர வயோ' எனப்படும் சாதியினர் மேளமடித்தல், குழல் ஊதுதல், நட னம் ஆடுதல் ஆகிய பணிகளைக் கோவில்களில் நிகழ்த்தினர். 'படுவோ' சாதி ஆட்கள் சுமைகளைத் தூக்கிச் செல்லுதல், கோவி லின் தலைமைத் துறவியைப் பல்லக்கில் வைத்துக் காவிச் செல் லுதல் ஆகிய பணிகளைச் செய்தனர். இவ்விதமாக வெவ்வேறு சாதிகள் கோவிலின் பிரதம துறவிக்கு ஆற்றிய பணிகளை நோக் கும்போது, நிலப்பிரபுவிற்கும் சேவைச் சாதிகளுக்கும் இடையி லான உறவுமுறை கோவில் அமைப்புக்குள்ளே செயல்பட்டதைக் காண்கிறோம்.'

1753ல் சியாம் நிகாய நிறுவப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முன்னர் குறிப்பிட்டோம். சியாம் நிகாய பௌத்த சங்க அமைப்பின் அதிகாரம் மிக்க தலைமைப்பீடம் ஆகியது. 1765ம் ஆண்டில் அரசன் இட்ட ஆணைப்படி மல் வத்தை அல்லது அஸ்கிரிய மடாலயங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே 'உபசம்பாத' சடங்கு நிகழ்த்தலாம் என விதிக்கப்பட்டது. இதனால் கரையோர மாகாணங்களின் கோவில்களின் 'சமனேராக் கள்' (இளம் பிக்குகள்) உபசம்பாத பரீட்சைக்காக கண்டிக்கு அழைத்து வரும் தேவை இருந்தது. இப்பரீட்சையின் மாதிரி வினாக்கள் வருமாறு:

(பரீட்சகரான பிரதம குரு பரீட்சார்த்தியான இளம் பிக்குவை நோக்கிக் கேட்பவை)

பிரதம குரு : உமது பிறந்த இடம் யாது?

இளம் பிக்கு : (பதில் தருகிறார்)

பிரதம குரு: எந்த 'ஹெதர' (வீடு - குடும்பம்)?

இளம்பிக்கு : (பதில் தருகிறார்)

பிரதம குரு: அப்பகுதியின் கௌரவம் வாய்ந்த 'ஹெதர'வாகத் தெரியவில்லையே?

இளம்பிக்கு : (பதில் தருகிறார்)

'நீர் கொவிகம சாதியினரா?' என்ற வினாவே சுற்றி வளைத்து இவ்வாறு பரீட்சார்த்தியிடம் கேட்கப்பட்டது.

(மேற்படி விபரிப்பு எச்.எல். செனிவிரத்தின என்ற ஆய்வாளரின் ஆய்வுக் கட்டுரையில் இருந்து சரத் அமுனுகம அவர்களின் நூலில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது. (பார்க்க: சரத் அமுனுகம் 2016: 79).

கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தர் காலத்தில் ஏற்பட்ட சமூக பொருளாதார மாற்றங்களின் பயனாக சலாகம், கராவ , துராவ சாதியினர் உயர்ச்சி பெற்று மேல்நிலைக்கு வந்தனர். சியாம் நிகாயவின் சாதி மேலாண்மையை எதிர்த்து 'அமரபுர நிகாய என்ற சங்க அமைப்பு 1803ம் ஆண்டு நிறுவப்பட்டது.

19ம் 20ம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பௌத்த சமய வர லாற்றில் இரண்டாவது மறுமலர்ச்சி இயக்கம் இடம் பெற்றது. இவ் விரண்டாவது மறுமலர்ச்சி அலையில் கரையோர மாகாணங்களின் அமரபுர நிகாய அதில் இருந்து பிரிந்து சென்ற ராமண்ய நிகாய என்பன முக்கிய பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உசாத்துணை:

  1. Amunugama, Sarath: The Loins. Roar - Anagarika Dharma, Pala and the Making of Modern Buddhism, Vijitha Yapa Publication (2016) Colombo
  2. Phadnis Urmila: Religion and Politics in Srilanka, 2nd Edition Manohar (2020)
  3. சண்முகலிங்கம்.க. New Delhi இலங்கையின் சமூக பண்பாட்டு வரலாறு, குமரன் புத்தக இல்லம் (2014), கொழும்பு. சென்னை

நன்றி - தாய்வீடு - மார்ச் 2021

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates