கடந்த பாராளுமன்ற காலத்தில் 40% வீதத்துக்கும் குறைவான தடவைகள் பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தவர்களில் இருவர் பிரதம மந்திரிப் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். ஒருவர் மகிந்த ராஜபக்ஷ, அடுத்தவர் சஜித். இந்த இருவருமே இம்முறை பிரதான தேசிய கட்சிகளுகளின் பிரதான போட்டியாளர்களாக காணப்படுபவர்கள்.
www.manthri.lk என்கிற இணையத்தளத்தின் கணிப்பின் பிரகாரம் மொத்த 225உறுபினர்களில் 22 உறுப்பினர்கள் 40% வீதத்துக்கும் குறைவான தடவைகளே சமூகமளித்துள்ளனர். 2015 ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் தெரிவான இவர்கள் கடந்த நான்காண்டுகளுக்குள் மொத்தம் 414 தடவைகள் பாராளுமன்றம் கூடியது. அதில் மகிந்த ராஜபக்ஷ 33% வீதம் தான் கலந்துகொண்டுள்ளார். சஜித் பிரேமதாச 39% வீதம் மட்டும் தான் கலந்து கொண்டுள்ளார்.
சமூகமளிப்பில் மோசமான இடத்தில் இருக்கும் இருவர் பிரேமலால் ஜயசேகர 21%, ஆறுமுகம் தொண்டமான் 22% ஆகியோரே.
பாராளுமன்ற உறுப்பினர்களின் வினைத்திறனை கண்காணித்து ஆய்வுத் தகவல்களை வெளியிட்டுவரும் www.manthri.lk இணையத்தளம் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக இருப்பதால் அவ்விணையத்தளம் அடிக்கடி தடைகளுக்கும், இணையத் தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...