மரணங்கள் மரணித்தவருடனான முரண்களை முடிவுக்கு கொண்டு வருக்கின்றன என்று நேற்று மனோ கணேசன் ஒரு பதிவை இட்டிருந்தார். உண்மை தான். ஆறுமுகம் தொண்டமான் பற்றிய அரசியல் விமர்சனங்கள் எத்தகையதாக போதும் இந்த நேரத்தில் அவரின் பெருமைகளைத் தான் பேச முடியும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் மலையகத்தில் நீண்டகாலமாக ஏகபோக அரசியலை முன்னெடுத்தார். தென்னிலங்கை அரசியல் தலைமைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரின் ஏகபோக அரசியலை பேணுவதற்கு அவரது பேரன் ஆறுமுகன் தொண்டமானுக்கு இயலாது போனது ஒரு புறம் இருந்தாலும் மறுபுறம் அவரின் ஆளுமைக்கு நெருக்கமாகக் கூட ஆறுமுகனுக்கு வர முடியவில்லை.
இ.தொ.க அதிகாரம் இல்லாது தவித்த காலமென்பது "மைத்திரிபால - ரணில் நல்லாட்சி"யில் தான். அதிகாரமும் செல்வாக்கும் இல்லாத காலத்தில் தான் நிறைய படிப்பினைகளும் ஆருக்கு கிடைத்தன. அப்போது இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கோட்டபாய ஆட்சியில் அவர் அதிகமாக உழைக்க வேண்டியிருந்தது. நேற்று இறப்பதற்கு சற்று நேரத்துக்கு முன்னர் வரை மகிந்தவுடன் மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இருந்ததாக பிரதமர் மகிந்த தெரிவித்திருந்தார். அதற்கும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் மலையகத்துக்கான இந்திய வீடமைப்புத் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தையில் இருந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் படத்துடன் டுவீட் செய்திருந்தது.
மலையகத்தின் பேரம் பேசும் ஆற்றால் சௌமியமூர்த்தி தொண்டமானின் இறப்போடு சரிந்தது. நிச்சயமாக ஆறுமகன் தொண்டமானின் இழப்பும் இன்னுமொரு படி சரிவை கொடுக்கும். அந்த இடைவெளியை நிரப்ப சரியான மாற்று அரசியல் இன்று வரை மலையகத்துக்கு எட்டவில்லை.
ஆறுமுகன் தொண்டமானின் மரணம் மலையகத்தின் அரசியல் எதிர்காலத்துக்கான எச்சரிக்கையையும் மிச்சம் வைத்து விட்டு சென்றிருக்கிறது.
அவருக்கும் ஆரின் இழப்பால் துயருறும் அனைவருடனும் நாமும் இணைந்துகொள்கிறோம்.
நமது மலையகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...