ஹூகோ எழுதிய இரண்டு பிரதான நூல்களையும், இது குறித்த திரைப்படங்கள் பற்றிய விபரங்களையும் இங்கே காணலாம்.
பாரிஸ் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தின் முக்கிய பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளன. கிட்டத்தட்ட 9 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. பாரிசின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்பட்டு வந்தது. இதனைப் பாதுகாக்கவேண்டும் என்றும் மீள புனரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இன்று நேற்றல்ல இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழுத்தமாக எழுந்தது. இரண்டு உலக யுத்தங்களிலும் இருந்து இந்த தேவாலயம் தப்பியிருக்கிறது.
ஆனால் அதற்கு முன்னமே உள்நாட்டு போராட்டங்களால் பாதிப்பட்டிருக்கிறது. ஜெர்மனின் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்கிற அச்சத்தில் மூலஸ்தானத்தில் இருந்த நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்ட பழம்பெரும் கண்ணாடிகள் முன்னெச்சரிக்கையாக அங்கிருந்து அகற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்ததும் மீண்டும் அவை இருந்த இடங்களில் பொருத்தப்பட்டன.
பிரான்சின் வரலாற்று நிகழ்வுகளோடு நெருங்கிய நேரடி தொடர்புடைய தேவாலயமாக இருந்து வந்த இந்த தேவாலயம் 1790 பிரெஞ்சு புரட்சி காலத்தில் புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. அரசுக்கும் தேவாலயத்துக்கும் இருந்த தொடர்புகளின் காரணமாக தேவாலயம் இலக்கு வைக்கப்பட்டது ஆச்சரியமில்லை. அங்கிருந்த 20க்கும் மேற்பட்டு முக்கிய பழமையான பெரிய சிலைகள் சிதைக்கப்பட்டன. 1977இல் அச்சிலைகளில் 21 தலைகள் மாத்திரம் கண்டெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 1792 செப்டம்பரில் நிகழ்ந்த படுகொலைகளின் போது பல பாதிரியார்கள் கொல்லப்பட்டும், சிறைகளில் அடைக்கப்பட்டுமிருந்தார்கள்.
பிரான்சில் புகழ்பெற்ற எழுத்தாளரான விக்டர் ஹூகோ 1831ம் ஆண்டு நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தைப் பற்றி விரிவாக பல விபரங்களுடன் The hunchback of Notre Dame (பிரெஞ்சு மொழியில்: Notre-Dame de Paris, "Our Lady of Paris") நாவல் வடிவில் ஒரு நூலை வெளியிட்டார். மிகவும் முக்கியமான வரலாற்றுச் சின்னமான அந்த தேவாலயத்தின் அன்றைய அவல நிலையைப் பற்றியும் அது பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியத்துவமும் அந்த நூலில் பொதிந்திருந்தது.
ஹூகோ இந்த நூலுக்கு முன்னரே பாரிசில் உள்ள புராதன சின்னங்களைப் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை “Guerre aux Démolisseurs” (War to the Demolishers) எழுதியிருந்தார். அதன் விரிவாக்கமாகத் தான் ஒரு பதிப்பாளருக்கு இந்த நூலை எழுதி முடிக்க ஒத்துக்கொண்டார். அதன்படி 6 மாதங்களில் அவர் அதனை முடித்துக்கொடுத்தார். மிகவும் பிரபல்யமான நூலாக அது கருதப்படுகிறது.
இந்த நூல் பாரிசின் தொல்பொருள், அதன் முதுசம் பற்றிய அக்கறையை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்த தேவாலயத்தின் கட்டடக் கலை குறித்து நிறைய விபரங்களைப் பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த தேவாலயம் 1844இல் மீண்டும் புனரமைக்கப்பட்டது.
ஹூகோவின் The hunchback of Notre Dame நாவல்...
- 1923இல் திரைப்படமாக ஆக்கப்பட்டது.
- 1996இல் உலகப் பிரசித்தி பெற்ற வோல்ட் டிஸ்னி நிறுவனம் சிறுவர்களுக்கான கார்ட்டூன் திரைப்படமாக தயாரித்திருந்தது.
- 1997இல் மீண்டும் இன்னொரு வடிவத்தில் திரைப்படமாக வெளிவந்தது.
- பாரிசில் நாடக வடிவத்திலும் மேடையேற்றப்பட்டிருக்கிறது.
- தமிழில் கூட இது மொழிபியர்க்கப்பட்டு ‘நாத்தார்தாம் கூனன்’ என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது.
கடந்த வாரம் 14ஆம் திகதி அதன் திருத்த வேலைகளின் போது 16 புனிதர்களின் வென்கலச்சிலைகள் வெளியில் இருந்து உள்ளே வைக்கும் நிகழ்வைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருருந்தனர். 100 மீட்டர் உயரத்துக்கு உயர்த்தி உள்ளே கொண்டுசென்று வைக்கப்பட்டது
இதில் உள்ள அவலம் என்னவென்றால் இந்த தேவாலயத்தை நுணுக்கமாக சீர்திருத்தும் புனருத்தாபன பணிகளின் போது ஏற்பட்ட தீயே இப்போது இருந்ததையும் அழித்து விட்டிருக்கிறது என்பது தான்.
பிரெஞ்சு மொழியில் ஹூகோவின் நூல்
https://drive.google.com/open?id=14BZ0qMzcNBQ2sT7CsIgMg88D-xkbefJl
ஆங்கில மொழிபெயர்ப்பு
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...