Headlines News :
முகப்பு » » 1945இல் வெளியான இலங்கை - இந்திய மாதர் சங்கத்தின் அறிக்கையொன்று

1945இல் வெளியான இலங்கை - இந்திய மாதர் சங்கத்தின் அறிக்கையொன்று


வந்தேமாதரம்,
பெண்மை வாழ்க!
அகில இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கத்தின் அறிக்கை .

அவைத்தலைவி அவர்களே!
சகோதர சகோதரிகளே!

இலங்கை இந்திய மாதர் காங்கிரஸ் ஆரம்ப விழாவைக் கொண்டாடுவதற்காக தம் து அழைப்பிற் கிணங்கி இங்கு சமூகமளித்துள்ள உங்கள் அனைவருக்கும் நமது இலங்கை இந்திய மாதர் காங்கிரஸின் பெயரால் யான் நல்வரவு கூறுகின்றேன்.

குறிப்பாகத் தோட்டத் தொழிலாளப் பெண் சமூகத் திடையே, ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், தைரியம், ஐக்கியம், சமத்துவம் சகோதரத்துவம், கால் தூற்றல் அறியாமையைப் போக்குதல் தற்காலத்தில் பெண் சமூகத் திற்குக் கல்வியை பெருக்குதல், ஆணிலிருந்து பெண் எந்த வகையிலும் அடிமை என்ற மனப்பான்மையை ஒழித்துத் தன்னம்பிக்கையோடு வாழவும், அரசியல், பொருளாதாரம், சமூகம், கல்வி, கேள்வி ஞானம் ஆகிய வற்றில் அடிமைப்பட்டுக் கிடப்பதை ஒழித்து அவர்களும் ஆண் மக்களால் சம உரிமையோடு நடத்துவதற்காகவுமே' கலாப் பகுதியில் 7-12-41ல் மாதர் ஐக்கிய சங்க அங்குரார்ப்பணக் கூட்டம் அட்வகேட் லெஷ்மி இராஜரத்னம் அவர்களின் தலைமையில், விமரிசையாக நடத்தப்பட்டது. அன்னாரின் தலைமை உரைக்குப்பின் நிர்வாகஸ்தர்கள் தேர்தலையும் நடத்தி வைத்தோம். ஆனால் நிர்வார்கஸ்தர் கள இன்றையவரையிலும் பொறுப்பற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள்.

யான் வீட்டுக்குள்ளேயே பூட்டி வைக்கப்படாமலும், பெண்கள் வெளிப்பட்டால், ஈரேழு பதினான்கு உலகுகளும் இடிந்து விழுமென்ற கொள்கைகளைக் கையாளாமலும், ஆர்வத்துடன் முன் வந்து பொதுச் சேவை செய்யப் பூரண சுதந்திரமளித்தும், சேவையே சிறந்த பாக்கியமென என் நலத்தையும் வாழ்வையுங் கருதாது, என்னைச் சேவைக்காக அர்ப்பணஞ் செய்த எனது தந்தை ஸ்ரீ என். எம். பழனிசாமி அவர்களுக்கு என் மனப்பூர்வமான வந்தனமளிக்கின்றேன்.

இலங்கை வாழ் இந்திய மூன்று லக்ஷம் இந்திய மாதர்களின் குறிப்பாகத் தோட்டத்தொழிலாளப் பெண் மக்களின் வாழ்க்கை நிலையைச் சீர்திருத்துவதற்காகவும், அவர்களின் நலத்துக்காகவும் சமூகத்திற்குத் தொண்டுபுரியவும் பயிற்சியளிப்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட இவ் இலங்கை இந்திய மாதர் ஐக்கிய சங்கமானது, வளர் பிறைச்சந்திரன் போன்று வளர்ந்தோங்கி வருவது தங்கள் போன்ற அபிமானிகளுக்குப் பெருமையையும், என் போன்ற ' ஊழியர்களுக்கு, மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்குமென்பது நிச்சயம்!

முடிவுரையாக அகில இலங்கை இந்திய மாதர் ஐக்ய சங்கத்தின் முன்னேற்றத்திற்காக என்னுடன் சகல விஷயங்களிலும் பூரணமாக ஒத்துழைத்த எல்லோருக்கும் என் மனப்பூர்வமான வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு என து இவ்வறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப் பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்ஙனம்,
சிவபாக்கியம் பழனிசாமி
அகில இலங்கை இந்திய மாதர் ஐக்ய சங்கத் தலைவி.
25-11-45.


நன்றி நூலகம் நண்பர்கள்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates