தோழர் லயனல் போபகேஇப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்டு அவ்வழக்கின் இரண்டாவது குற்றநபர். வருடக்கணக்கில் சிறையில் இருந்து மீண்டவர். ஜே.வி.பியில் இருக்கும் போதே தமிழ் மக்களில் சுய நிர்ணய உரிமைக்காக உட்கட்சிப் போராட்டத்தை முன்னெடுத்தவர். அது பற்றி தனியான நூலையும் அக்காலத்தில் எழுதியவர். அது சாத்தியமாகாத நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறியவர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு இப்போது பொறியியலாளராக பணியாற்றிவந்த போதும் இலங்கை அரசியலில் தொடர் அவதானிப்பையும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். அன்றைய அரச பயங்கரவாதத்தின் வடிவத்தைப் பற்றிப் பேசும் இந்த முக்கிய கட்டுரையை “நமது மலையகம்” வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க ஏகாதிபத்திய ஆட்சி மற்றும் இராணுவ அடக்கு முறை ஆட்சியே நடைபெற்றது. அல்லது ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன. இலட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்து, இந்தோனேஷியாவில் சுகர்னோவின் ஆட்சியைக் கவிழ்த்து ஜெனரல் சுகர்தோவின் தலைமையில் இராணுவ ஆட்சியை உருவாக்கியமை, பொதுவாக இடதுசாரித்துவத்துக்கும் விசேடமாக மக்கள் விடுதலை முன்னணியாக பின்னர் உருவான ”அமைப்புக்கும் மிகவும் ஆழமான அனுபவமாக இருந்தது. அத்துடன் மிகுந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தியது.
இதற்கிடையில் அமெரிக்காவுக்கு சார்பான பெட்டிஸ்டா ஆட்சிக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்ற கியூபா விடுதலைப் போராட்டமும், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க முன்னெடுக்கப்பட்ட பல்வேறு விதமான விடுதலைப் போராட்டங்களும் அக்காலத்தில் தாம் சமூகவாதிகள் என இனங்கண்ட முற்போக்கு சமூக சக்திகள் மற்றும் நாடுகளும் எமக்கு முன்னோடியாக விளங்கின.
தேசிய ரீதியில் 1964ல் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தனவாதத்துக்குள் பிரவேசித்தன. இதே வகையில் மக்கள் ஐக்கிய முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாளித்துவத்துக்குள் பிரவேசித்தது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளிருந்த முதலாளித்துவ தரப்பு, விசேடமாக அதில் நிதி அமைச்சராகவிருந்த ஜே.ஆர். ஜயவர்தன, புதிய ஏகாதிபத்திய தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையின் தேர்தல் வரைபடத்தை இருபது ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கப் போவதாக தெரிவித்தார். அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தார்.
1968ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்து ஐக்கிய முன்னணியொன்றை ஆரம்பித்தன.
இந்த ஐக்கிய முன்னணி அடுத்த தசாப்தத்தில் முதலாளித்துவ சக்தியாக உருவெடுத்தது. சம்பிரதாயபூர்வமான இடதுசாரிகளின் சீர்குலைவு, புதிய இடதுசாரிகளாக உருவான "அமைப்பு”க்கு சம்பிரதாயபூர்வமான இடதுசாரி தரப்புகளுக்குள் பிரவேசித்து அவர்களது உறுப்பினர்கள் அதேபோல் நெருங்கியவர்களையும் அமைப்பு”க்குள் ஈர்ப்பதற்கு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. "அமைப்பு” தெற்கில் பல பிரதேசங்களில் மிக வேகமாகப் பரவியது. சம்பிரதாய பூர்வமான இடதுசாரிகளை முந்திக் கொண்டு முன்னோக்கி பயணித்தது. அன்றளவில் அமைப்பு” க்குள் சம்பிரதாய பூர்வமான இடதுசாரி தரத்தில் பிரவேசித்தவர்களே "அமைப்பில் அதிகமாக இருந்தனர்.
இதனால் சம்பிரதாயபூர்வமான இடதுசாரிகளுக்கும் அமைப்புக்குமிடையே எதிரான அரசியல் போக்கே காணப்பட்டது. சம்பிரதாயபூர்வ இடதுசாரிகளுக்குள் முன்னால் வந்த அவர்கள், ஒன்றாக அறிமுகமாகியிருந்த, அரசியலில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நபர்களை உள்ளடக்கிய புதிய இடதுசாரி தலைமைத்துவத்துக்கு எதிராக, இளைஞர் அமைப்பின் தலைமைத்துவத்துக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தூற்றி சேற்றை வாரி இறைக்க ஆரம்பித்தனர். வதந்திகள் மூலம் அதேபோல் "அத்த" மற்றும் "சமசமாஜய" போன்ற அவர்களது ஊடகங்களைப் பயன்படுத்தி அமைப்பின் இளைய சமூகத்தினரை வலைத்துப் பிடிப்பதற்காக உருவாக்கப்பட்ட CIA ஐப்போல தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு முறையற்ற வகையில் நடந்து கொண்டதன் மூலம் தெளிவாகின்றது.
"அமைப்பு தொடர்பாக அரச இயந்திரம் முதன் முதலாக இதன் மூலம் தனது கவனத்தை செலுத்தியது. முதலாவதாக ரோஹண விஜேவீர சகோதரரையும், மேலும் அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரையும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சகோதரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடுக்க முன்வந்தது மற்றும் ஆதரவாகவிருந்தது. லங்கா சமசமாஜ் கட்சியின் ஆனந்த பிரேமசிங்க, மார்ஷல் பெரேரா மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகம் போன்ற சில சகோதரர்களே MI5 (Military Intelligence 5 ) போன்ற அரச புலனாய்வு சேவைகள் ஆச்சரியத்துக்குள்ளாகியிருந்தன. அவர்களால் புலனாய்வு செய்த இந்த அமைப்பு” குறித்து ஆச்சரியமடைந்தனர். இந்த அமைப்பின் அளவு, தரம் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை . இதன் காரணமாக அரச புலனாய்வு சேவையும், செய்தி ஊடகங்களும் எமது "அமைப்பை” ”சேகுவேரா” என்றழைக்க ஆரம்பித்தன.
இக்காலத்தில் ”அமைப்பின்” பிரதான நோக்கமாகவிருந்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான அமெரிக்க சார்பான ஏகாதிபத்திய அரசாங்கம் அமைவதைத் தடுப்பதாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட அன்று இருந்த இந்த அபாயத்தின் போக்கை புரிந்து கொண்டிருந்ததை அதன் தலைமைத்துவம் பகிரங்கமாக விமர்சித்ததிலிருந்து தெரிய வந்தது.
சர்வதேச மட்டத்தில் இடம்பெற்ற, இடம்பெற்று வந்த அரசாங்கங்களை கவிழ்ப்பது, அரசியல் அமைப்புகளை அழிப்பதும், ஐக்கிய தேசியக் கட்சி தலைமைத்துவத்தால் இலங்கையில் புதிய ஏகாதிபத்திய ஆட்சியை உருவாக்க முயற்சியை "அமைப்பு” கவனத்தில் கொண்டது. புதிய ஏகாதிபத்தியவாத ஆதரவு மற்றும் அனுசரணையுடன் அமைக்கக் கூடிய அதுபோன்ற இராணுவ ஆட்சிக்கு ஆயுதம் தாங்குவதன் மூலமே முகம் கொடுக்க முடியுமென ”அமைப்பு” தீர்மானித்திருந்தது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன இணைந்த முதலாளித்துவ ஐக்கிய முன்னணி கூட்டு பலமிக்க முதலாளித்துவத்துக்கு எதிரான கொள்கைகளை முன்வைத்து 1970 பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. "அமைப்பின் ஆதரவைப் பெற்ற ஐக்கிய முன்னணி கூட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேர்தலில் வெற்றி பெற்றது. இருந்தும் அதிக காலம் செல்வதற்கு முன்னரே ஐக்கிய முன்னணி கூட்டு முன்வைத்த ஏகாதிபத்திய விரோத கொள்கைகளை குறுகிய காலத்திலோ அல்லது முழு ஆட்சிக் காலத்திலுமோ நிறைவேற்ற முடியாதென முன்னணியின் குறிப்பாக லங்கா சமசமாஜ கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைப்பின்" சகோதரர்கள் பிற்காலத்தில் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 1970 ஜூலை மாதத்தில் அமைப்பு நடத்திய முதலாவது பகிரங்க சொற்பொழிவு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன முன்வைத்த CIA போன்ற குற்றச்சாட்டுக்கள் சேறு பூசுவதற்கு பதிலளிப்பதாகவிருந்தது. பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை கைவிட்டு மக்களுக்கு எதிரான பழைய கொள்கைகளையே செயற்படுத்துவது தொடர்பாக, 1970 இறுதிக் காலப் பகுதியில் மக்களின் அதிருப்தி எழுந்தது. இந்த அதிருப்தியின் மத்தியில் மக்கள் விடுதலை முன்னணி அப்போது சிறியதாக இருந்த போதும், நாட்டின் பிரதான இடதுசாரி சக்தியாக கட்டியெழுப்ப முடியுமாகவிருந்தது. 1970 ஓகஸ்ட் 10ம் திகதி நடத்தப்பட்ட முதலாவது கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பொதுத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதென்றால் அரசுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தது.
ஆனால் அன்றைய தினமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் செயலாளர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றை பத்திரிகைகள் வெளியிட்டிருந்தன. அந்த அறிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி பின்போக்கு சக்தியென்றும் மக்கள் அதற்கெதிராக போராட வேண்டுமென கேட்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் நிரந்தர செயலாளர் ஆத்தர் ரட்னவேல் மக்கள் விடுதலை முன்னணி மக்களின் முதலாவது எதிரியென்றும் அதை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டுமென்று தெரிவித்திருந்தார்.
1971 முற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியை முக்கிய அச்சுறுத்தலாகக் கருதிய கூட்டரசாங்கம் அதை ஒழித்துக் கட்டுவதற்காக திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தது. மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக தொடர்பை மேற்கொள்ள இராணுவம் மற்றும் பொலிஸ் "கிளர்ச்சிக்கு எதிரான பிரிவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு முக்கிய பங்களிப்பை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதய செயலாளராகவிருந்த பீட்டர் கெனமன் வழங்கினார். முதலாளித்துவ கூட்டு அரசாங்கத்தின் வீடமைப்பு தொடர்பான அமைச்சராகவிருந்த அவர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அரசியல் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்.
அதிகரித்து வரும் இப்போக்கை நிறுத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி சில முயற்சிகளை மேற்கொண்டது. எனக்கு ஞாபகமுள்ள ஒரு உதாரணம் என்னவென்றால் சகோதரர் ரோஹண விஜேவீர சுனேத்ரா பண்டாரநாயக மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்படி கேட்டார். எமக்கு தேவைப்பட்டது என்னவென்றால், கூட்டரசாங்கத்தின் பகுதியாக சம்பிரதாய இடதுசாரியான மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்குவதற்கு தங்கள் சக்தியை பயன்படுத்துவதை தெளிவுபடுத்தி அரசியல் ரீதியாக இடைகருவில் சமாதானத்துக்கு நுழையாததுடன், இந்த அச்சுறுத்தலை நிறுத்துவதற்கே பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் கோரப்பட்டது. இருந்தும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. வேறு வழிகளிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை நான் அறிவேன்.
அதுமட்டுமல்ல, இங்கு சபையிலுள்ள பொரளை ஒஸ்மண்ட் சகோதரரின் தாய் காலஞ்சென்ற சகோதரி சீலவதி, லங்கா சமசமாஜக் கட்சியின் மகளிர் அமைப்பின் தலைவியாகவிருந்து மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்த தலைமை சகோதரியும், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அந்த சகோதரியின் தலைமையிலான சபையும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைமைத்துவ சபையும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இருந்தும் அந்தப் பேச்சுவார்த்தையில் CIA அமைப்பு மக்கள் விடுதலை முன்னணிக்கு அனுப்பி வைத்த காசோலையொன்று அவர்களிடம் இருப்பதாக அப்போதைய நிதி அமைச்சரான கலாநிதி என்.எம். பெரேரா தெரிவித்தார். அந்தக் காசோலையை பத்திரிகைகளில் பிரசுரிக்கும்படி சகோதரி சீலவதி அந்த பேச்சுவார்த்தையின் போது என்.எம். பெரேராவுக்கு சவால் விடுத்த போதும் இன்று வரையில் அதுபோன்ற காசோலையொன்றை பார்க்கக் கிடைக்கவில்லை. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற் குழுவிலுள்ள சில சகோதரர்களுடனும் தாம் இந்நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இதுபோன்ற பேச்சுவார்த்தைகளில் நாம் எதிர்பார்த்த வகையில் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.
அக்காலத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைத்திருந்த தகவல்களின்படி சட்டமா அதிபர் மக்கள் விடுதலை முன்னணியை ஒழித்துக் கட்டுவதற்கு தேவையான விசேட சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தார்.
''சட்டம் மற்றும் ஒழுங்கு" பாதுகாக்கும் பெயரில், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் போன்ற சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் முறையான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இளைஞர் அமைப்புகளுக்கிருந்த உரிமைகளை மீறிச் செயற்பட்டன. பொதுக் கூட்டங்கள் மற்றும் சொற்பொழிவுகளை நடத்துதல், தனிப்பட்ட அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல், கட்சிப் பத்திரிகை மற்றும் கையேடுகளை அச்சிடல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், கட்சியின் பிரசார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றன.
1971 மார்ச் 6ம் திகதியன்று, "மாவோ இளைஞர் முன்னணி" மக்கள் விடுதலை முன்னணிக்கு CIA யின் நிதியுதவி கிடைப்பதாகவும் அதை உடனடியாக நிறுத்தும்படி அழுத்தம் கொடுத்து அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஊர்வலமொன்றை நடத்தியது. அதில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்தார். இந்த ஊர்வலத்தின் தலைவர்கள் மற்றும் கூட்டு அரசாங்கத்தின் இடையிலிருந்த அரசியல் தொடர்பு குறித்து மக்கள் விடுதலை முன்னணிக்கு அறிந்து கொள்ளக் கிடைத்தது. இச்சம்பவத்துடன் எதுவித சம்பந்தமும் இல்லையென்று மக்கள் விடுதலை முன்னணி உடனடியாக அறிவித்தது. இருந்தும் கூட்டரசாங்கம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவசர காலநிலையை பிரகடனப்படுத்தியது. மக்கள் விடுதலை முன்னணி தடை செய்யப்பட்டது. 1971 மார்ச் 13ம் திகதி சகோதரர் ரோஹண விஜேவீர, கெலி சேனநாயக உட்பட சில சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.
1971 மார்ச் 16ம் திகதி அரசாங்கத்தைக் கவிழ்க்க மக்கள் விடுதலை முன்னணி சூழ்ச்சி செய்வது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்தது. அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 24 மணித்தியாலய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி இலங்கையின் அரச இயந்திரத்துக்கு எந்தவொரு நபரையும் தன்னிச்சையாக கைது செய்யும் அதிகாரம் கிடைத்தது. எனக்கு நினைவிலுள்ளபடி மார்ச் 21 ம் திகதி அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தின் மூன்றாவது பகுதியை அவசர காலச் சட்டத்தின் 15 வது ஷரத்தை அமுல்படுத்தியது. மரண விசாரணைகளை மேற்கொள்ளாமல், உறவினர்களுக்கு அறிவிக்காமல் எந்தவொரு சடலத்தையும் அழித்தொழிப்பதற்கு பாதுகாப்பு படையினருக்கு இதன் மூலம் அதிகாரம் கிடைத்தது.
அக்காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் இருக்கவில்லை . 1947 பொது மக்கள் பாதுகாப்புச் சட்ட மூலம் அவசர காலச் சட்டத்தின் அடிப்படையாகக் காணப்பட்டது. பொது மக்கள் பாதுகாப்பு சட்ட மூலம் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் கட்டுப்படுத்தவும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளால் நிறைவேற்றப்பட்ட இறுதி சட்ட மூலமாகும். இந்த அவசரகாலச் சட்டத்தின் 15 ஆவது ஷரத்து ஏகாதிபத்திய காலத்தில் இருந்து நடைமுறையிலுள்ள பழைய ஆணையாகும். இது ஏகாதிபத்திய காலத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. விசேடமாக நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காக 1818 மற்றும் 1848 ஊவா மற்றும் கண்டியில் கிளர்ச்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களின் பின்னர் இச்சட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சந்தேகத்துக்கிடமின்றி மக்கள் விடுதலை முன்னணி இதை அரசாங்கம் யுத்தத்தை பிரகடனப்படுத்தும் முதலாவது செயற்பாடு எனவும் ”தேடியழிக்கும்” தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தியதாகவுமே பார்த்தது. மார்ச் இறுதிகாலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி என சந்தேகித்த சுமார் ஐயாயிரம் பேரை கைது செய்ததாக சகோதரர் பாயாசம்போ ஒரு ஆணைக்குழு முன்னால் தெரிவித்திருந்தார். 1971 ஏப்ரல் மாதமளவில் வெடித்து சிதறும் நிலை இவ்வாறே ஏற்பட்டது.
இங்கு, 1972 இந்த கூட்டரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட இந்த குற்ற நீதி ஆணைக்குழு (விசேட ஒழுங்கு விதிகள்) சட்ட மூலம் குறித்து இங்கு குறிப்பிடாவிட்டால் அதை பெரும் குறைபாடாக நான் கருதுகின்றேன். ஏனென்றால் இந்த சட்ட மூலம் அன்றிருந்த அரசாங்கத்தின் அடக்கு முறையின் ஒரு அம்சமாகும். இந்த சட்ட மூலத்தில் அன்றிருந்த அரசியலமைப்பை மாத்திரமல்ல, அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரங்களை பிரித்தொதுக்கும் சித்தாந்தங்களையும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தையும் மீறுவதாகவிருந்தது. இந்த சட்ட மூலத்தை தயாரித்த அன்றைய நீதியமைச்சர் பீலிக்ஸ் டயல் பண்டாரநாயக பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து இவ்வாறு தெரிவித்தார்.
''தற்போதுள்ள சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது அதில் முதலாவதாகும்.
இது ஒரு முறை இதன்படி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் எப்போதாவது ஒரு வழக்கை கூட உங்களால் நிரூபிக்க வழியில்லாமல் போகும். எல்லோரையும் விடுதலை செய்வதற்கு தேவையென்றால் அந்த செயற்பாட்டை அங்கீகரித்தால் பிழையில்லை ( 1972 ஏப்ரல் 4 ஹன்சாட் 107 பக்கம் )
இந்த ஹான்சார்ட் அறிக்கையை வாசித்தால் அன்று பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் எவ்வாறு நீதியமைச்சர் நடந்து கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.
இதேபோலத்தான் அன்று சாட்சி சட்டமூலம் ஒரு பக்க சார்பாக மாற்றப்பட்டது.
முறைப்பாட்டாளர் தரப்பால் குற்றவாளியென நிரூபிக்கும் வரை சாதாரண சட்டத்தின் கீழ் சந்தேக நபரொருவர் நிரபராதி என கணிக்கப்பட்ட போதும், இந்த புதிய சட்டத்தின் கீழ் சந்தேக நபர் நிரபராதியென் சந்தேக நபர் நிரூபிக்கும் வரை சந்தேக நபர் குற்றவாளியாக கருதப்படுவார். எந்த நிலையின் கீழாக இருந்த போது சந்தேக நபரிடமிருந்து பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை சந்தேக நபருக்கும் ஏனையோருக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டது. சந்தேக நபர்கள் தாம் நிரபராதியென நிஷரூபிக்க அழைக்கப்பட்ட சாட்சிகள் அவ்வாறு அழைக்கப்படுவது தடுக்கப்பட்டது. இலங்கை சரித்திரத்தை முதன் முறையாக ஒரு சம்பவம் இடம்பெற்ற பின்னர் (Post Facto) அச்சம்பவம் தொடர்பாக நெருக்குவாரங்களை பிரயோகித்து மேற்கொள்ளப்படும் அநீதியான விசாரணைகளின் பின்னர் அந்த சம்பவத்துக்கும் அந்த விசாரணைகளின் பிரதிபலன்களுக்கும் ஏற்றாற்போல் அச்சுறுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் நியாயமானதாக இருக்குமா?
1971 எழுச்சியை அடக்குவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பாகிஸ்தான், இந்தியா, சோவியத் நாடுகள் மற்றும் சீனா உட்பட அநேக நாடுகள் இலங்கை அரசுக்கு யுத்த உதவிகளை வழங்கியது. இவ்வாறு வழங்கப்பட்ட யுத்த உதவிகளில் பொலிஸ் மற்றும் புலனாய்வு நடவடிக்கை தொடர்பான அதிகாரிகளும் ஆலோசகர்களும் உள்ளடங்குவர்.
இந்தியா போன்ற நாடுகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை பாதுகாக்க விமானப் படையினரை ஈடுபடுத்தல், சில கிராமங்களுக்கு குண்டுத் தாக்குதலை மேற்கொள்ளும் ஹெலிகொப்டர்களைச் செலுத்த விமானப் படையினரை ஈடுபடுத்தல், இந்திய கடற்பரப்புக்கு அருகில் கடற்படை பாதுகாப்பு வழங்க யுத்த கப்பல்கள் அதேபோல் கடற்படையினரை ஈடுபடுத்தல் போன்ற விடயங்கள் குறித்து பேசுவதை விட 1971 ஏப்ரல் எழுச்சியை அடக்கி கொன்றொழிக்க பிரிட்டன் அரசு மேற்கொண்ட பங்களிப்பை ஆராய்ந்து பார்ப்பது முக்கியமென் தான் கருதுகின்றேன்.
முதலாவதாக அன்றளவிலும் இலங்கையில் சோல்பரி - அரசமைப்பின் கீழ் ஆளப்பட்டது. டொமினியன் என்பதால் இரண்டாவதாக, 1971 எழுச்சியுடன் தொடர்புடைய சமீபத்திய சம்பவம் ஆசியாவில் குறிப்பாக மலயாவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அடக்குவதற்கு பிரித்தானிய அரச இயந்திரம் மற்றும் அதன் பாதுகாப்பு படை ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறையாகும்.
சகோதர சகோதரிகளுக்கு ஞாபகமிருக்கலாம் அக்காலத்தில் கொல்லுபிட்டியில் நிறுவப்பட்டிருந்த MI5 என்ற யுத்த தகவல்களுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவின் அலுவலகம் இந்த அலுவலகத்தில் தான் இரகசிய பொலிஸ் ஆய்வாளர் ஷர்னி விஜேசூரிய மற்றும் ஜெகநாதன் ஆகியோர் கடமையாற்றினர். இரகசிய பொலிஸ் ஆய்வாளர் உபாலி செனவிரத்ன கோட்டை இரகசிய பொலிஸ் தலைமையகத்தின் நான்காவது மாடியில் பணிபுரிந்தார்.
வெளியான தகவல்களின்படி 1970 முதல் 1974 வரை ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவிருந்த எட்வர்ட் ஹீத்தின் அனுமதியுடன் பிரிட்டனின் MI5 என்ற யுத்த தகவல்களுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவு எழுபதாவது தசாப்தம் முழுவதும், இலங்கை அதிகாரிகளுக்கு கலகமடக்கும் ஆலோசனைகளை இரகசியமாக வழங்கி வந்துள்ளது. அப்போது இலங்கையிலிருந்து MI5 பாதுகாப்பு இணைப்பதிகாரி இலங்கை பொலிஸ் மா அதிபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த போதும் இலங்கையில் அக்காலத்தில் இடம்பெற்று வந்ததாக அவர்கள் அறிந்திருந்த வன்முறை நடவடிக்கைகளை தடுப்பதற்கு அவர் விருப்பமின்றியிருந்ததாக அல்லது முடியாமலிருந்ததாகவே தெரிகின்றது.
அதுமட்டுமின்றி அப்போதைய பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க MI 5 நடவடிக்கைகள் குறித்து எவ்வளவுதான் தெளிவாக அறிந்திருந்தாரென்றால் இலங்கையின் விசேட பணியகத்தின் முக்கியஸ்தர்கள் சிலரின் பயிற்சியளிக்கும் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக கொழும்பு பிரித்தானிய தூதரகத்தின் நிலை நிறுத்தப்பட்டிருந்த MI5 யுத்த தகவல்களுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவின் அதிகாரியான ஜிம் பெட்ரிக்கை அவரது அரசாங்கத்தின் கலவரமடக்கும் நிபுணராக நியமிக்கப்பட்டிருந்தார்.
1971 ஏப்ரல் எழுச்சியை அடக்குவதுடன் தொடர்புடைய அரச அடக்குமுறையின் தன்மையை புரிந்து கொள்வதென்றால், இலங்கையின் அரச அடக்கு முறை சரித்திரம் தொடர்பாக சுருக்கமாகவேனும் பேச வேண்டும். இது தொடர்பாக முதலாவதாக எனது எனது ஞாபகத்தில் எழுவது 1953 ஹர்த்தால் என்ற பெயரில் இனங்காணப்பட்ட மாபெரும் வேலை நிறுத்தமாகும். 1971 ஏப்ரல் எழுச்சியை விட முற்றிலும் மாறுபட்டதாக இருந்த போதும், அந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சியாகும். ஏனைய இடதுசாரிக் கட்சிகளும் தொழிற் சங்கங்களும் அந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தது. அல்லது அனுசரணை வழங்கியது.
அப்போது டட்லி சேனநாயக பிரதமராகவிருந்தார். நிதியமைச்சராக ஜே.ஆர்.ஜயவர்தன பதவி வகித்தார். கொழும்பில் தொழிலாளர்கள் ஊர்வலம் நடத்தினர். வேலை நிறுத்தப் போராட்டம் பரவியது. கொழும்பு துறைமுகம், போகல சுரங்கம், வெள்ளவத்தை புடவை நெசவாலையில் பிரதான வேலை நிறுத்தம் நடைபெற்றது. அன்றைய நாட்களில் முக்கிய பிரச்சினையாகவிருந்தது. என்ன வென்றால் அரிசி விலை அதிகரிக்கப்பட்டது, பல்வேறு நிவாரனங்களும் சம்பளமும் குறைக்கப்பட்டது. ஊழியர் குறைப்பு மற்றும் அவர்களை பணியிலிருந்து நீக்கியதாகும். இந்த கிளர்ச்சி வேலை நிறுத்த செயற்பாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படவில்லை. கிராமியத் தொழிலாளர்களும் தமது நகர வாழ் சகோதர சகோதரிகளுடன் கைகோர்த்துக் கொண்டனர். தென் மாகாணத்தில், குறிப்பாக காலி மாவட்டத்தில் கிராமத்தவர்கள் போக்குவரத்தில் ஈடுபட்ட ரயில் வண்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியது ஞாபகத்திலிருக்கின்றது. வேலை நிறுத்தம், ஊர்வலம், போக்குவரத்து சேவைகள் ஸ்தம்பித்தது, கடைகள் மூடப்பட்டது, எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்துவது, கருப்பு கொடி ஏற்றல் ஆகிய தன்மைகளில் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பிலிருந்து மாத்தறைக்கும்,
இரத்தினபுரிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகள் பரவியது. நாட்டின் ஏனைய மத்திய பிரதேசங்கள் தவிர்த்து சரித்திரத்தில் முதன் முறையாக நாட்டிலுள்ள தொழிலாளர்கள் விவசாயிகளுடன் முதலாளித்துவ முறைக்கு எதிராக ஒன்றுபட்டு கிளர்த்தெழுந்தனர். அரசாங்கம் அச்சமடைந்தது. அரசாங்கம் வேலை நிறுத்தம் சட்டவிரோதமென அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கைது செய்ய ஆரம்பித்தது. கொழும்பில் பொலிஸார் ஊர்வலத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வீ. கந்தசாமி என்ற சகோதரர் உட்பட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட பல சகோதரர்களை கொன்று குவித்தது. மேலும் பலருக்கு படுகாயங்களை ஏற்படுத்தியது. மிக விரைவில் இடம்பெறவுள்ள புரட்சி குறித்து அச்சமடைந்த அமைச்சரவை கொழும்புத் துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிடப்பட்டிருந்த யுத்த கப்பலில் கூடியது.
தொழிலாளர்கள் சில தீர்மானங்களை விலக்கிக் கொள்ளும்படி அரசாங்கத்திடம் வலியுறுத்தி உறுதியான நிலைப்பாட்டில் இருந்து கொண்டு போராடினர். இதன் காரணமாக நிதியமைச்சராகவிருந்த ஜே.ஆர். ஜயவர்தன அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அரிசி விலை குறைக்கப்பட்டது. கூப்பன் அரிசியன் அளவு அதிகரிக்கப்பட்டது. இருந்தும் அரசாங்கம் பின்பற்றிய பொருளாதார கொள்கைகளிலும் பிரபுகளுக்கு வழங்கப்பட்டிருந்த வரப்பிரசாதங்களில் மாறுதல் ஏற்படவில்லை . கைத் தொழில் அபிவிருத்தி, வேலை வழங்கல், வருமானம் அநீதியாக பகிர்ந்து செல்லல் போன்ற பிரச்சினைகள் மென்மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டன. இந்தப் பிரச்சினைதான் பின்னர் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிலும் பொருளாதார, சமூக மற்றும் இனமோதல்கள் என்ற தன்மையில் வெளிப்பட்டது.
ஹர்த்தாலை தொடர்ந்து முன்னெடுத்திருந்தால் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றவும், உழைக்கும் மக்களது அரசாங்கத்தை ஏற்படுத்தவும் அதன் மூலம் வழிபிறக்குமென்பதே அன்றிருந்த சிந்தனையாகும். மக்கள் ஒன்றிணைந்து போராடினால் எவ்வளவு சக்திமிக்கதாக இருக்குமென்பது நன்றாக தெளிவாகியது. எப்படியிருந்தும் ஹர்த்தால் இடை நடுவில் நிறுத்தப்பட்டது. இடைநடுவில் சமாதானத்தை தெரிவு செய்ததன் காரணமாக பிரயோசனைத்தை இழந்த மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் ஒரு சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காமற் போய்விட்டது.
இருந்தும் அன்றிருந்த அரசாங்கம் அந்த மக்கள் எழுச்சியை முன்னிருந்து நடத்திய லங்கா சமசமாஜக் கட்சியையோ, அதன் தலைமைத்துவத்தையோ கொன்றொழிக்க, அடங்கியொருக்கு முயற்சி மேற்கொள்ளவில்லை. இந்த நிலைக்கு பாகரணமாக பல்வெறு விடயங்களை சுட்டிக் காட்ட முடியும். ஹர்த்தாலை ஆரம்பித்தது, அதை முன்னெடுத்துச் சென்ற அரசியல் தலைமைத்துவத்தினாலேயே அந்த ஹர்த்தாலை இடைநிறுத்தி இடைநடுவில் சமாதான பாதையை தெரிவு செய்தமை, ஏகாதிபத்தியவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட விடுதலை போராட்டத்தை அடக்கியொருக்கும் உபாய மார்க்கமாக, புதிய ஏகாதிபத்தியத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த கால கட்டத்தில் இந்த எழுச்சி சம்பவத்தை,
ஹர்த்தாலை முன்னெடுத்த அரசியல் தலைமைத்துவம் அரசாங்கத்தின் அரசியல் தலைமைத்துவத்துடனான நெருங்கிய வர்க்க ரீதியான, குடும்பம் மற்றும் கலாசார தொடர்புகள் இதில் முக்கிய பங்கு வகித்ததாகக் கருதமுடியும்.
அக்காலத்தில் ஏகாதிபத்திய மாதிரியிலான போராட்டத்துக்கு எதிராக 1948 க்கு முன்னரும் 1948 க்கு பின்னரும் உலகம் முழுவதும் பல்வேறு வடிவத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்பு பிரித்தானியாவால் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் பிரித்தானிய அரச இயந்திரம், அதன் பாதுகாப்பு படைகள் அதே போல் பிரிட்டனுக்கு சார்பான ஏகாதிபத்தியத்துக்கு சார்பான சக்திகளின் பங்களிப்புடன் அந்த நாடுகளின் சுதந்திரம் சுயாதீபத்தியத்தைக் கைப்பற்றுவதற்காக போராடிய தலைவர்கள் சமூக சக்திகள் மற்றும் நபர்களை வன்முறையினாலும் கொடூரமான முறையிலும் அடக்கி ஒடுக்கினர். உதாரணமாக இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியாவால் கென்யாவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு குற்றங்கள் விதிமுறைகள் அதேபோல் 1971ல் இலங்கையில் கிளர்ச்சியை அடக்குவதற்கு சாதகமான முறையில் பயன்படுத்தலாமென்ற கருத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
1953 முதல் 1960 வரையிலான காலப் பகுதியில் கென்யாவில் மாவு மாவு அமைப்பை தோற்கடித்தது தொடர்பாக வாசிப்பதற்கு சிபாரிசு செய்யப்பட்ட புத்தகப் பட்டியலுடன் இயன் ஹெண்டர்சன் எழுதிய "கிமந்தி வேட்டை” என்ற புத்தகமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த ஹண்டர்சன் என்ற ஏகாதிபத்திய விசேட பணியக அதிகாரிதான் அப்போது உயிரோடிருந்த மாவு மாவு தலைவரான டேடான் கிமந்தியை பிடித்துள்ளார். பிரிட்டனால் 1957 ல் கிமந்தி தூக்கிலிடப்பட்டார். கென்யாவில் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான கிளர்ச்சியை தோற்கடிக்க பங்களிப்புச் செய்த பிரதான நபர் இயன் ஹெண்டர்சன் என்று கிழக்கு ஆபிரிக்காவில் அப்போதிருந்த பிரித்தானிய படைத் தளபதி தெரிவித்திருந்தார். 1963 ல் ஏகாதிபத்திய ஆட்சி கென்யாவை விட்டுச் சென்ற போது அவர்கள் மேற்கொண்டிருந்த குற்றங்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கோப்புகள் எரிக்கப்பட்டன் அல்லது இந்திய கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டன.
இருந்தும் பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோப்புகளின் மூலம் 2012 ம் ஆண்டில் வெளிவந்துள்ள விடயங்ளின்படி, பிரித்தானிய படையினரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்கு நஷ்ட ஈடாக, கென்யன் இனத்தவர்கள் 5228 பேருக்கு சுமார் 20 இலட்சம் பவுண்களை வழங்க RCO (The Foreign and Commonwealth Office) நிறுவனம் இணக்கம் தெரிவித்தது. பிரிட்டனின் வெளிவிவகாரம் தொடர்பான செயலாளர் விலியம் ஹோக், 2013 ஜூன் 6ம் திகதி பிரிட்டன் பாராளுமன்றத்தில் இதை ஏற்றுக் கொண்டார். கென்யாவில் மாவுமாவு இயக்கத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட உபாயங்கள் சூட்சுமங்கள் தொடர்பாகவும், அந்த உபாயங்கள் சூட்சுமங்களில் அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தல், அரசியல் அமைப்புகளை தடை செய்தல், வழக்கு விசாரணைகள் இன்றி நபர்களை தடுத்து வைப்பதற்கு சட்ட திட்டங்களை பிரயோகிப்பது, வகை தொகையின்றி ஆட்களை கொன்று குவிப்பது, புனர்வாழ்வு வேலைத் திட்டங்கள் மூலம் நபர்களை சிறைப்படுத்தி வைத்திருத்தல் போன்றவை அங்கு இடம்பெற்றன. எழுபதாவது தசாப்தத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரச அடக்குமுறையிலும் இதேபோன்று உபாயங்கள் சூட்சமங்கள் பயன்படுத்தப்பட்டதென்பது தெளிவாகின்றது.
தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள, தொடர்ந்தும் இரகசியமற்ற முறையிலான ஆவணங்களின்படி, அக்காலம் முதல் இன்று வரையும் பிரிட்டன் இலங்கையில் வன்முறை அரசியல் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் சதியின் மூலம் பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்த ஆவணங்களின்படி எழுபதுகளில் மக்கள் விடுதலை முன்னணியை அடக்கு ஒடுக்குவதற்கு அன்றிருந்த அரசாங்கத்துக்கு கலகத்தை அடக்குவதற்காக தேவையான ஆலோசனைகளை வழங்க எட்வர்ட் ஹீத் அனுமதியை வழங்கியுள்ளார். யுத்த உபகரணங்களுக்கு மேலதிகமாக பிரித்தானிய படை அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனரா? என்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் 1971 மே 6ம் திகதி எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்து பாதுகாப்பு அமைச்சர் வைட்ஹோல் இலங்கை அரசாங்கம் இதுபோன்ற எந்தவிதமான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இருந்தும், அப்போதும் கூட சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர்கள் இருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
முதலாவதாக, அப்போது இடம்பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை The New Yort Times மற்றும் Le Monde போன்ற மேற்கத்திய ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன. அரசாங்கம் கேகாலையில் மீள நடத்திய தாக்குதலில் பிடிக்கப்பட்ட கைதிகளை அந்த நேரத்திலேயே படுகொலை செய்தது தொடர்பாக அந்த ஊடகங்கள் மார்ச் 17ம் திகதி, 20ம் திகதியளவில் முதன் முதலாக அறிக்கையிட்டிருந்தது. கைதிகளை, கிளர்ச்சியாளர்கள் என சந்தேகப்பட்டதால் அவர்களை மயானத்துக்கு கொண்டு சென்று அழித்தொழித்ததாக ஒரு அதிகாரி தெரிவித்திருந்தார். அரசாங்கம் அந்நாட்களிலேயே இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தது உண்மை . இருந்தும் நூற்றுக் கணக்கான இளைஞர் யுவதிகளின் சடலங்கள் கொழும்பு களணி கங்கையில் மிதந்து கொண்டிருந்ததாகவும், பின்புறம் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்ததாகவும், படை வீரர்கள் இந்த சடலங்களைச் சேகரித்து தீமூட்டியதை பலர் நேரடியாக பார்த்திருந்தனர்.
இச்சம்பவம் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் இடம்பெறவில்லை. குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசங்களில், காலி மாவட்டத்தில், தடெல்ல மயானத்தில் ஜிங் கங்கையில், எல்பிட்டியில், மாத்தறை மாவட்டத்தில், மெத்தவத்த, அக்குரஸ்ஸ், நில்வலா கங்கையில், அநுராதபுரத்தில், பொலன்னறுவையில், ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில், களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் இதுபோன்ற பல்வேறு பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளை கொன்று குவித்து, உடல்கள் தீமூட்டி எரிக்கப்பட்டிருந்தது. இதன்படி பார்த்தால் இலங்கையின் பல பிரதேசங்களில் இன்னும் வெளிவராத பல குழுக் கொலைகள், புதை குழுக்கள் இருக்கலாம்.
ஏப்ரல் எழுச்சி சமயத்தில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜக் கட்சி ஆகியன பொலிஸ் நிலையங்களைப் பாதுகாக்கவும், மக்கள் விடுதலை முன்னணிக்கு தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர்களைத் தேடி அழிக்கவும் தங்களது இளைஞர்களை (Home Guards) ஈடுபடுத்தியது. கூட்டரசாங்கம் தொழில் சட்டங்களை மாற்றி வேலைக்கு வராத ஊழியர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. அனுமதி பெறாமல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், சுவரொட்டிகளை ஒட்டுவதும் தடை செய்யப்பட்டது. இவ்வாறு வேலைத் தளங்களை கிரமமாக சுத்தப்படுத்தும் அதேவேளை, அரசாங்கம் 35 வயதுக்கு குறைந்த எவரும் ஆயுதப் படைகளில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் என அறிவித்தது. போராட்டக்களத்தில் நூற்றுக் கணக்கான சகோதர சகோதரிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர். பனிப்போரில் அரசியல் எண்ணங்களுக்குள் பழக்கப்பட்ட பயிற்றப்பட்ட இராணுவத்தினரால் போராட்டக் களத்திற்கு வெளிப் பிரதேசங்களிலிருந்து கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான சகாக்கள் அழித்தொழிக்கப்பட்டனர்.
கலகமடக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் பிரேமாவதி மனம்பேரி போன்ற சகோதரிகள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டும் மேலும் பல சகோதரிகள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பின்னர் சகாக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். பத்தேகம் அமைப்பாளராகவிருந்த கமலபந்து சகோதரர் போன்ற சிலர் மரங்களை அறுக்கும் வாள்களால் துண்டு துண்டாக அறுத்துக் கொலை செய்யப்பட்டனர். திருமதி பண்டாரநாயக்க அரசிடம் சரணடையும்படி விடுத்த அறிவிப்பின்படி சரணடைந்த சில சகாக்களும் கொலை செய்யப்பட்டனர்.
குற்ற நீதி ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்பட்ட தகவல்களின்படி, மக்கள் விடுதலை முன்னணி 41 சிவலியன்களின் மரணங்களுக்கும் 63 படை வீரர்களது மரணங்களுக்கும், 305 படை வீரர்கள் காயமுற்றதற்கும் பொறுப்புக் கூறவேண்டுமென்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஐக்கிய முன்னணி கூட்டரசாங்கத்தின் நடவடிக்கையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 5000 முதல் 10,000 நபர்களின் மரணங்களுக்கும், 15000 முதல் 25000 பேர் வரையிலானவர்களை சிறையிலடைத்தது. தொடர்பாக அரச படையினர் பொறுப்புக் கூறவேண்டும். இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மக்கள் விடுதலை முன்னணியின் சகலருக்கும் எதிராக வழங்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட போதும், இது தொடர்பாக பாதுகாப்பு படைகளிலுள்ள மிகக் குறைவானவர்களுக்கே வழக்கு தொடரப்பட்டது.
பிரிட்டன் அரசாங்கத்தின் ஆவணங்களின்படி இதுபோன்ற யுத்த குற்றங்களை அக்காலத்தில் இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருந்ததாக பிரிட்டன் அரசாங்கம் அறிந்திருக்கவில்லை . கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்திலிருந்து 1971 ஏப்ரல் 19ம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட தொலைபேசி தகவலில் படையினர் மற்றும் பொலிஸ் கொலைப் படையினர் இதுபோன்ற மிலேச்சத்தனமான கொலைகளை மேற்கொண்டு வருவதாக உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இலங்கை அரச அதிகாரிகள் மக்கள் விடுதலை முன்னணியைப் பூண்டோடு ஒழித்துக் கட்டவும், அதற்காக எந்தவொரு மிருகத்தனமான முறையிலும் வன்முறை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் தயாராகவிருந்ததாக 1971 ஏப்ரல் 20ம் திகதி பிரிட்டன் தூதரகம் குறிப்பிட்டிருந்தது.
அவர்கள் ஆடம்பரமாக தெரிவித்ததாவது,
”ஏப்படியிருந்தும் மிகவும் முக்கியமானது மகாராணியின் அரசாங்கத்தால் மிகவும் துரிதமாகவும் தீர்க்கமாகவும் அழுத்தங்களை ஏற்படுத்தி வழங்கப்பட்ட சிறு அளவிலான ஆயுதங்கள், வெடி மருந்து, ஆயுதம் தாங்கிய வாகனங்கள் மற்றும் ஏனைய அவசியங்களும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து கவனத்தில் எடுத்த போதும் பொறியியல் மற்றும் முன்வைக்கும் காரணங்களுக்காக அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது கைவிடப்பட்டது. அக்காலத்தில் இருந்த பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் எலெக் டக்ளஸ் ஹோம் நாபாம் குண்டுகளுக்குப் பதிலாக பெல் ஹெலிகொப்டருடன் விநியோகிக்கப்படும் மெஷின் துப்பாக்கிகள் மாற்றாக இருக்குமென மதிப்பீட்டிருந்தார்.
இவ்வாறு ஆயுதங்களை வழங்குவதற்கு மேலதிகமாக அந்த யுதங்களை மென்மேலும் செயற்திறனுடன் அடக்கி ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது எவ்வாறென்பது குறித்து பிரிட்டன் தண்டர் நிறுவனத்தின் படை, பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இலங்கை அரச அதிகாரிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கினர். கோவைகளில் அடங்கியுள்ள விடயங்களின்படி ஏப்ரல் 21 முதல் 28 வரையான காலப் பகுதிக்குள் ஐந்து நாள் ஆலோசனை வேலைக்காக தண்டர் நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டிருந்த ஆலோசகர்களுக்குள் உலகம் முழுவதும் பல்வேறு பிரதேசங்களில் ஏகாதிபத்திய விரோத கலவரங்களை அடக்குவதில் அனுபவத்தைப் பெற்றிருந்த கேர்ணல் ரொஜர் மேதா முன்னர் உகண்டாவில் பொலிஸ் ஆணையாளராக அது போன்ற அனுபவங்களைப் பெற்ற வெளிவிவகார நடவடிக்கை தொடர்பான பொலிஸ் ஆலோசகர் மைக்கல் மெக்குன் ஆகியோரும் அடங்குவர்.
இந்த சேவைகளில் அடங்கியுள்ள தகவல்களின்படி 1971 மே மாதத்தில் மெக்குன் இலங்கை பொலிஸாருக்கு பெற்றுக் கொள்ள வேண்டியிருந்த யுத்த தளபாட்களை, பொருட்கள் மற்றும் தேவைகள் தொடர்பான பட்டியலை வழங்கியிருந்தார். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பதற்றமான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுக்கும் போது இடைநடுவில் சமாதானத்துக்குச் செல்லும் போக்கை தவிர்த்து விடும்படியும், பொலிஸ் நடவடிக்கைகளிலும் பொது மக்கள் ஒழுக்கத்துடன் வைத்திருந்த பரா மிலிடரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதில் சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.
நான் மேலே குறிப்பிட்டிருந்தபடி, அப்போது பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க அவரது அரசாங்கத்தின் கலகமடக்கும் நிபுணராக நியமிக்கப்பட்டிருந்த MI5 யுத்த தகவல்கள் தொடர்பான புலனாய்வுப் பிரிவில் ஜிம் பெட்ரிக்கிடமிருந்த முக்கிய தகுதி என்னவென்றால் 1948-1960 இடைப்பட்ட காலத்தில் மலயாவின் விசேட பணியகத்தில் மாவோவாத ஏகாதிபத்திய விரோத கலகத்தை அடக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர் பெற்ற அனுபவமாகும். மலாயாவில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அடக்கும் உபாயங்கள் பிரிட்டன் விசேட பணியகத்தின் நடவடிக்கைகளுடன் இணைந்தவாறு முன்னெடுக்கப்பட்டு வந்தது.
மலயாவில் மேற்கொள்ளப்பட்ட அடக்கியொடுக்கும் செயற்பாட்டில் சில அனுபவங்களை இச் சந்தர்ப்பத்தில் நாம் மறந்து விடக்கூடாது. ஏனென்றால் அதுபோன்ற அனுபவங்கள் உலகளாவிய அதேபோல் தேசிய ரீதியில் தற்காலத்துக்கும் பொருந்தும் என்பதால் இந்த அனுபவங்கள் எம் அனைவருக்கும் பொதுவானதும் 1971 கிளர்ச்சிக்கும் 88-89 கிளர்ச்சிக்கும் அதேபோல் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற தமிழ் போராளிகளது கிளர்ச்சிக்கும் இந்த அனுபவங்களை பொதுவானதாகும்.
இலங்கையில் முப்பது வருடங்களுக்கு அதிக காலம் முழுவதும் இடம்பெற்ற யுத்தத்தில் தமிழர்களைப் போல முஸ்லிம்களும் சில கிராமப் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றப்பட்டது போல் மலாயாவில் சுமார் ஐந்து இலட்சம் சீன மக்கள் பலாத்காரமாக 500 புதிய கிராமங்களில் குடியேற்றப்பட்டனர். மலாயாவிலும் பலர் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டனர். உதாரணமாக பிரித்தானியாவால் மேற்கொள்ளப்பட்ட "மீலாய்" கொலைகள் என இனங்காட்டப்படும் சம்பவத்தைப் பார்ப்போம். Scots Guardls என்ற படைப் பிரிவில் பட்டன் காலி” என்ற கிராமத்தில் ஆயுதம் ஏந்தாத கிராமவாசிகள் 24 பேர் பச்சை பச்சையாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். நான் முன்னர் குறிப்பிட்ட எட்வர்ட் ஹீத்தின்
அரசாங்கம் 1970ல் இந்தக் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு போதுமான சாட்சிகள் இல்லையெனக் கூறி இடை நடுவில் விசாரணைகளை நிறுத்தியது. அதற்கு பல தசாப்தங்களுக்குப் பின்னர் அக் கொலைகளை மேற்கொண்ட படைப் பிரிவின் வீரரொருவர் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் அன்று விசாரணைகளை மேற்கொண்டவர்களிடம் இருந்ததாக தகவல் வெளிவந்தது. அந்த ஒப்புதல் வாக்குமூலத்தின்படி அவர்களது உயர் அதிகாரிகள் அக் கொலைகளைச் செய்யும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் 2012 வரை மறைக்கப்பட்டிருந்தது. இறுதியில் அந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.
1971 ல் பிரித்தானியா இலங்கையின் உள்விவகார நடவடிக்கைகளில் இரகசியமாக தலையிடுவது நாட்டை அவர்களது ஏகாதிபத்திய ஆட்சிக்குப் பின்னரான வேலைத் திட்டத்தின் ஒரு பகுதி மாத்திரமே ஜிம் பெட்ரிக் இலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற பின்னர் மலாயாவில் MI 5 புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகவிருந்த ஜெக் மோர்டன் 1979ல் இலங்கைக்கு வந்தார். 1971க்குப் பின்னர் இலங்கையில் செயற்படுத்தப்பட்ட அறிவுபூர்வமான தகவல் வலையமைப்பு ஜெக் மோர்டன் உருவாக்கிய "மோர்டன் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியா இலங்கையின் உள்ளக நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடு தொடர்பான தகவல்கள் 30 வருடங்கள் கடக்கும் வரை தடைக்குட்படுத்தப்பட்டிருந்தது. அது எப்படியிருந்தும் பல்லின அடக்கு முறை வியூகத்தை உருவாக்குவதில் பிரித்தானியாவால் நிறைவேற்றப்பட்ட ஆரம்ப வேலை திட்டம் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக 1983 முதல் 1989 வரை மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையிலும், 30 வருடங்களுக்கு அதிக காலம் முழுவதும் இடம்பெற்ற தமிழ் போராளிகளின் கிளர்ச்சிக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறையிலும் தெளிவாக காணக் கூடியதாகவிருந்தது.
1971 ஏப்ரல் எழுச்சி இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட போராட்டமா? இன்னும் அது தொடர்பான எனது எண்ணம் எமது அரசியலுக்காக, எமது அரசியல் நடவடிக்கைக்காக எமக்குள்ள உரிமையை பாதுகாத்து கொள்வதற்காக நடத்தப்பட்ட செயற்பாடாகுமென்பதே. மறுபுறம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது மக்கள் விடுதலை முன்னணியின் நீண்ட கால நோக்கமாக இல்லாவிட்டாலும் அதன் இருப்புக்கு வேறு உபாயங்களுடனான காரணங்கள் இருக்கவும் இல்லை. இருந்தும் புரட்சி மற்றும் ஆயுதமேந்திய எழுச்சிக்குமிடையே இருக்கும் அந்நியோன்ய தொடர்புகள் குறித்து எமக்கு தெளிவான கருத்து இருக்கவில்லை. ஏனென்றால், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்ளுக்காக எமது கட்சி இரண்டறக் கலந்திருந்ததால், மக்கள் விடுதலை முன்னணி, சொந்தப் பாதுகாப்புக்காக முதலில் ஆயுதம் ஏந்த வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானம் புரட்சிக்காக ஏற்பட்ட கட்சி ஆயுதமேந்திய எழுச்சியை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியின் கைகளில் அதிகாரத்தைப் கைப்பற்ற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டதே. எனவே மக்கள் விடுதலை முன்னணி பரந்த பல்லின் செயல்பாடுகள் தொடர்பாக நம்பிக்கை வைத்து செயற்படவில்லை.
மக்கள் விடுதலை முன்னணி மட்டுமன்றி, எழுதாவது தசாப்தத்தில் மாத்திரமின்றி, இன்றைய நாளில் இயங்கும் பல்வேறு விதமான போராட்ட அமைப்புகள் கூட இந்தக் குழப்பத்தில் தவிக்கின்றன. சமூகப் புரட்சி என்பது கட்சியொன்றால் ஒன்றுபட்டு ஏற்படுத்தும் ஆயுத எழுச்சிக்கு ஒப்பாகாது. புரட்சியென்பதன் பொருள் என்னவென்றால் பரந்த பல்லின் செயற்பாட்டில், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டின் உச்ச சந்தர்ப்பம் என்பதை நாம் புரிந்து கொள்ளாததால் மக்கள் விடுதலை முன்னணி தொழிலாளர் வர்க்கத்துக்காக இணைந்து கொண்டது.
இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி ஆயுதம் தாங்கிய எழுச்சி மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதற்காகத் தயாராகியது. இதன் காரணமாக பரந்த பல்லின மக்கள், தொழிலாளர் வர்க்கம், உழைக்கும் மக்கள் அவர்களுக்கேயான எழுச்சியை நோக்கி ஒன்றுகூட்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு முடியாமற் போனது. இந்த நிலை முதலாளித்துவ அரச இயந்திரத்துக்கு சாதகமாக அமைந்தது. பரந்த பல்லின மக்களது செயற்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தால் சில வேளை மக்கள் விடுதலை முன்னணிக்கு எழுதாவது தசாப்தத்தில் இடம் பெற்ற அரச அடக்குமுறைக்கு மேன்மேலும் சாதகமான முறையில் முகம் கொடுத்திருக்கலாம்.
"தேடியழிக்கும் அரசாங்கத்தின் அநீதியான திட்டத்துக்கு எதிர் செயற்பாட்டை மேற்கொள்ளவும், எதிர்ப்பு தெரிவிக்கவும், பல்லின் மக்களின் செயற்பாட்டின் மீது நம்பிக்கை வைத்து ஆரம்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற வேறு மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபடவும் மக்கள் விடுதலை முன்னணிக்கு முடியுமாகவிருந்ததென்பதை சரித்திரத்தை திரும்பிப் பார்க்கும் போது நினைக்கத் தோன்றுகிறது.
அத்துடன் நான் ஒரு விடயத்தை வலியுறுத்த விரும்புகின்றேன். இன்றைய நிலை அன்றை விட மிக மோசமாகவுள்ளது. இன்றைய நாளில் முதலாளித்துவ ஆட்சி லிபரல் வாதத்தைக் கொண்டது. அது தேசிய எல்லைகளையும் மீறி செல்லக் கூடியது. அதன் அடக்குமுறை இயந்திரம் அன்றை விட அளவிலும் குணத்திலும் பெருமளவில் அதிகரித்து காணப்படுகின்றது. அடக்கு முறை நடவடிக்கைகளுக்காக மிகவும் முன்னேற்றகரமான தொழில்நுட்ப வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய லிபரல்வாதம் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள உலகின் எப்பகுதியிலும் ஒரு வினாடியில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது. எனவே சமூக மாற்றத்துக்காக நடவடிக்கை மேற்கொள்ளும் சகோதர சகோதரிகள் இந்த நிலையில் இதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் உபாயங்களை வகுத்து செயற்பட வேண்டுமென நான் அறிவுறுத்துகிறேன். சமூகப் புரட்சியென்பது கட்சி ஆயுதம் தாங்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதல்ல. தொழிலாளர் வர்க்கம் மற்றும் பரந்த உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டின் உச்ச சந்தர்ப்பம். அதேபோல் புரட்சி என்பது கட்சியொன்றின் ஆணையையோ அல்லது முறையற்ற தன்மையை சமூகத்தின் மீது நிலை நிறுத்துவதல்ல. தொழிலாளர் வர்க்கம் பரந்த உழைக்கும் மக்களாலேயே அவர்கள் தொழில் புரியும் நிறுவனத்துக்குள் அவர்களது ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதேயாகும். இது வெளிநிறுவனமொன்றால் மேற்கொள்ளக்கூடிய தொன்றல்ல.
எப்படியிருந்தும் எழுதாவது தசாப்தத்தின் மேலெழுப்பிய வன்முறை நடவடிக்கைகள் பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. சில புத்திஜீவிகள் இன்றும் இந்த எழுச்சி வழிதவறிச் சென்ற இளைஞர் சமூகத்தின் முறையற்ற செயற்பாடு, பைத்தியக்காரர்களின் வேலை எனக் கூறி அதைக் கண்டிப்பது கவலைக்குரியது. இந்த புத்திஜீவிகள் காலத்துக்குக் காலம் இலங்கையில் ஏற்பட்ட வன்முறை நிலைக்குக் காரணமான பொருளாதார, சமூக, அரசியல் நிலைமை குறித்து பார்க்கும் போது குருடர்களைப் போல் செயல்படுகின்றனர். இதன்படி எடுத்துக் கொண்டால் இந்த மோசமான சமூக முறையை பாதுகாக்க அவர்கள் நியாயப்படுத்த விடயங்களை முன்வைக்கின்றனர். செயற்பாடற்ற சமூகத்தை நிரந்தரமாக பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள் சமூக முன்னேற்றத்துக்கு முன்னால் அதற்கு இடையூறு விளைவிப்பவர்களாக இருக்கின்றனர். இப்படியானவர்களிடம் நாம் கேட்க முடிந்தது ஆயுதப் படைகளிடம் அரசியல் கருத்துக்களடங்கிய பிரசுரங்கள் மீது தமது கண் பார்வையை செலுத்துங்கள் என்பதே. பிரித்தானியாவிலுள்ள சென்டஹர்ஸ்ட்டிய பயிற்சி பெற்ற கேகாலை மாவட்டத்தின் இராணுவ இணைப்பதிகாரியாகவிருந்து பின்னபர் வெளிநாட்டு தூதுவராக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் கர்ணல் சிரில் ரணதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“நாங்கள் வியட்னாமிடமிருந்தும் மலேஷியாவிடமிருந்தும் தேவைக்கதிகமாகவே பாடங்களை படித்திருக்கின்றோம். நாம் அவர்களை முற்றாக ஒழித்துக் கட்டவேண்டும்''
அக்காலத்தில் கூட்டரசாங்கத்தில் தொலைதொடர்பு நடவடிக்கை தொடர்பான அமைச்சராகவிருந்த சமசமாஜக் கட்சி தலைவர்களில் ஒருவர் லெஸ்லி குணவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.
''அவசர காலச் சட்டம் அமைச்சரவையின் முழு ஆதரவுடனேயே அமுல்படுத்தப்பட்டது. கிளர்ச்சியாளர்களை துடைத்தொழித்து சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட ஆயுதப் படைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது"
உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...