இலங்கையிலிருந்து பலாத்காரமாக நாடு கடத்தப்பட்ட தமிழ் மக்கள் தமிழகத்தில் விரும்பத்தகாத மக்களாக ஆக்கப்பட்ட அவலத்தையும், இலங்கையில் அவர்கள் இந்தியர்களாக அடையாளப்படுத்தப்பட்டது போல தமிழகத்தில் அவர்கள் சிலோன்காரர்களாகவே அழைக்கபடுகிறார்கள். அவ்வாறே கருதப்படுகிறார்கள். இது அவர்களின் சுய அடையாளத்தின் மீது பெரிதும் பாதிப்பை செலுத்தி வருகிறது. அப்பேர்பட்ட அவலத்தின் ஒரு பகுதியை புதிய தலைமுறை 1994இல் தொலைகாட்சி விவரணமாக பதிவு செய்திருக்கிறது. நீங்களும் பாருங்கள்.
நாடு கடத்தப்பட்ட ஏழைப் பெரியவர் ஒருவர் தமது ஏக்கத்தையும், அவலத்தையும் கவிதையாக பாடுவதை இந்த ஆவணப்படத்தில் பல இடங்களில் உருக்கமாக வந்து போகின்றன.
நாடு விட்டு நாடு வந்து
பாடுபட்ட ஏழை மக்கள்
காடு வெட்டி தோட்டமிட்டாரே - தங்கவோர்
வாழ்க்கையின்றி வாழுகின்றாரே
கள்ளிச்செடி வளர்ந்த இடம்
காப்பிச் செடி வளர வைத்தார்
கண்ணீர் விட்டு செழிக்க வைத்தாரே
ஊதகையை உலகின் முன்னே
உயர வைத்தாரே
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...