ஒரு காலத்தில் நாட்டின் தேசிய வரு மானத்தில் பெரும் பகுதியை பெருங் தோட்டத் தேயிலை உற்பத்திமூலம் மலையகப் பெண்கள் பெற்றுக்கொடுத்தனர். இன்று வெளிநாடுகளுக்குப் பணிப் பெண்களாகச் சென்று அதிக அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுக்கின்றனர். இரண்டு தொழில் துறையிலுமே இவர்கள் சுகத்தை அனுபவித்தார்களா? அல்லது நல்ல வாழ்க்கையை பெற்றுக் கொண்டார்களா? என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே தொடர்கிறது.
மலையகப் பெண்கள் குறிப்பாக பெருந்தோட்டப் பெண்கள் உழைப்பதற்கு மட்டுந்தான் பிறந்தவர்களா? தோட்டங்களில் கடுமையாக உழைத்த இவர்கள், வேலை முடிந்து வீட்டுக்கு வந்தும் சமையல், வீட்டுவேலைகள், பிள் ளைகளை கவனித்தல் போன்றவற்றைச் செய்கின்றனர். தோட்ட வேலையில் கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தில் குடும் பத்தை பராமரிக்க முடியாத நிலையிலேயே மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்கின்றனர். அங்குள்ள செல்வந்தர்களின் வீடுகளில் மட்டுமன்றி சாதாரண குடும்பத்தவர்களின் வீடுகளிலும் வீட்டுப்பணிப் பெண்களாகவும், பிள்ளை பராமரிப்பாளர்களாகவும் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்.
உண்மையில் அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். எவ்வளவுதான் வேலை செய் தாலும் அதில் திருப்தியடையாத வீட்டு எஜமானர்களும், அவர்களின் குடும்பத்தவர்களும் வீட்டுப்பணிப் பெண்களை பிழிந்தெடுக்கின்றனர். இனியும் முடியாதென சற்று ஒய்வெ டுக்க முற்படும் போது பணிப்பெண் களை அடித்து துன்புறுத்துகின்றனர். உணவு வழங்குவதில்லை. சித்திரவ தையும் செய்யப்படுகின்றனர். மட்டு மன்றி உயிரையும் இழக்க வேண்டிய சங் தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு எமது நாட்டுப் பெண்களை சித்திர வதை செய்து கைவிரல்களில் உருக்கு ஆணிகளை ஏற்றிய சம்பவங்கள், கைகால்களை முடமாக்கிய சம்பவங்கள் ஏராளமாகும். அது மாத்திரமன்றி, ஈவிரக்கமின்றி கொலை செய்து சடலங்களாக அனுப் பப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகமாகும்.
இது இன்று வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு கொலை செய்யப்படும் அல்லது மரணத்தைத் தழுவும் பெண் களின் உடல்களை உடனடியாக நாட் டுக்கு அனுப்பிவைப்பதுமில்லை. அப்படி அனுப்புவது பற்றி அவர்களுக்கு அக்க றையும் இல்லை. இதுதான் உண்மை. அந்த வகையில் மஸ்கெலியா ஸ்ட்ரெத்ஸ்பி தோட்டப் சூரியகந்த பிரிவைச் சேர்ந்தவர்தான் 41 வயதான பழனியாண்டி கற்பகவள்ளி என்ற குடும்பப் பெண். சவூதி அரேபியாவின் ரியாத்திலுள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த இவர், உயிரிழந்த நிலையில், சடலமாக கடந்த 25 ஆம் திகதி விமானத்தினூடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இவரது சடலத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினர் கற்பகவள் ளியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண்ணின் சகோதரன் இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து, கொழும்பில் நடத் தப்பட்ட பிரேத பரிசோதனையில் பெண்ணின் இடுப்பு, கழுத்து போன்ற பகுதிகளில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட அடையாளங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், சவூதி அதிகாரிகள் மாரடைப்பால் உயிரிழந்ததாக சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு நீதி கொடுக்கப்பட வேண்டுமென்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கற்பகவள்ளியின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் அவரை கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, தமது 3 பிள்ளைகளையும் பராமரிப்பதற்காகவும், அவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டும் 2015 ஆம் அக்டோபர் மாதம் சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் ணாகச் சென்றுள்ளார். சவூதி அரேபியாவுக்குச் சென்ற இவர் முதல் ஆறு மாத காலம் வரை வீட்டாருடன் தொடர்புகளைக் கொண்டிருந் துள்ளார். அதன் போதுதான் பணிபுரியும் வீட்டிலுள்ளோர் தன்னை துன்புறுத்துவ தாக வீட்டுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
ஆனால், ஆறு மாதங்களின் பின்னர் அவரிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை என குடும்பத்தார் தெரிவித் துள்ளனர். இவ்வாறான ஒரு நிலையில், கடந்த வருடம் நவம்பர் 1 ஆம் திகதி சவூதி அரேபியாவிலுள்ள 'ஒலேயா பாபா என்ற தடுப்பு முகாமிலிருந்து வீட்டாருக்குத் தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தகவலில் குறித்த 'பணிப்பெண் உயிரிழந்து விட்டதாக அவரது சகோ தரனுக்கு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மரணம் தெடர் பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுமார் 4 1/2 மாதங்களின் பின்னர் கடந்த 25 ஆம் திகதி (23.03.2017) அன்று சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கற்பகவள்ளியின் சடலத்தை அவரது குடும்பத்தினர் பெற்று, தோட்டத்தில் அடக்கம் செய்தனர். இவரது மறைவால் குடும்பத்தினர் குறிப்பாக அவரது பிள் ளைகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள் ளனர்.
குடும்பம் - பிள்ளைகளின் எதிர் காலத்துக்காக உழைப்பதற்கு சவூதி சென்ற பெண் தன் உயிரையும் பறி கொடுத்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற எத்தனையோ பெண்கள், தாய்மார்கள் சித்திரவதைக்குள்ளாகி, சிலவேளை தமது உயிரையும் இழக்கின் றனர். சிலரது மரணங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன, சிலரது மரணங்கள் யாரும் அறியா வண்ணம் மூடிமறைக்கப் படுகின்றன. 1980 களின் பின்னரே இலங்கையி லிருந்து அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக அனுப்பும் நடவ டிக்கை ஆரம்பமானது. ஆரம்பத்தில் இத் துறையில் மலையகப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஏனைய பிரதேச பெண்களே அதி கமாக சென்றனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வெளிநாடு செல்வதில் சடுதியாக பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து, வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்களின் கவனம் மலை யகப் பெண்கள் மீது திரும்பியது. 'அதிக சம்பளம் உழைக்கலாம், சொகுசாக வாழலாம் என்று ஆசைக்காட்டி அவர் களை வலைக்குள் சிக்கவைத்தனர். இந்த நிலையில் ஏற்க னவே பொருளாதார சுமையில் சிக்கித் தவித்த மலையக பெண்கள் 'அதிக பணம் உழைக்கலாம்' என்ற பெருங்கனவு களோடு வெளிநாடு செல்ல ஆரம்பித் தனர்.
அவ்வாறு ஆரம் பித்த வெளிநாட்டு மோகம் இன்று சமூக, சீர்கேடுகள், குடும் பத்தில் குழப்பம், பிள்ளைகள் பராமரிப் பின்மை, பிளவுகள் சித்திரவதைகள் என தொடர்ந்து தற்போது உயிரிழப்புகளும் இடம் பெறுகின்றன.
பல்வேறு பிரச்சினைகளுக்கும், சமூக சீர்கேடுகளுக்கும் வெளிநாடு களுக்கு பணிப்பெண்களாக அனுப் புவதும் ஒரு காரணம் என்று சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சமூக மற்றும் அரசியல் தலைவர்களும் கூட பெண்களை பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டுமென்று பேசிவருகின்றனர். ஆனால், நடைமுறையில் அதனை
செயற்படுத்துவதாக இல்லை. காரணம் நாட்டுக்கு கிடைக்கும் வெளிநாட்டு செலாவணி பாதிப்படையும் என்பதே அவர்களின் கவலையாகும்.
ஆனால், ஓர் ஆரோக்கியமான, சந்தோஷமான, குடும்பப்பற்றுள்ள சமுதாயத்தை உருவாக்கி சில அர்ப்பணிப்புகளை செய்ய வேண்டியது மிக மிக அவசியமாகும். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு எமது நாட்டுப் பெண்களை பணிப் பெண்களாக அனுப்புவதை உடனடியாக, முற்றாக தடைசெய்ய வேண்டும். அதுவே இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...