நாட்டில் மண் சரிவு அபாயம் நிலவும் நூற்றுக்கணக்கான இடங்கள் அடை-யாளம் காணப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களிலும் இவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்-ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி பணியகத்தின் நீண்ட கால ஆராய்ச்சியின் பின்னரே மண்சரிவு ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்-ளது.
பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, களுத்துறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலேயே அதிகளவில் மண் சரிவு அபாயம் நில-வுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரட்சி மற்றும் வெயில் காலங்களில் மண் சரிவுக்கான எந்தவிதமான அறி-குறிகளும் காணப்படுவதில்லை. எனினும் மழைகாலங்களில் அதுவும் மழை பெய்யத் தொடங்கி மண் ஈரலிப்பானவுடன் மண்சரிவுகள் ஏற்படத்தொடங்கி விடுகின்-றன. ஒவ்வொரு மழைகாலங்களிலேயே அதிகளவில் மண்சரிவுகள் ஏற்படுகின்றன.
கடந்த சில வருடங்களை விட இந்த வருடத்தில் அதிகளவிலான மண்சரி-வுகள் இடம்பெற்றுள்ளதுடன் தொடர்ந்தும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயங்கள் நில-வுகின்றன. எனவே மழைகாலங்களில் ஏற்படும் மண்சரிவுகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டிய நிலையில் மலையக மக்கள் இருக்கின்றனர்.
மீரியபெத்தையில் ஏற்பட்ட மண் சரிவினை நாம் மறக்கவில்லை. இன்னும் அதனை நினைவு கூரக்கூடியதாக இருக்கின்றது. இந்த நிலையில் தற்போது அரநா-யக்க, புளத்கொஹூபிட்டிய, களுபான தோட்டம் முதல் மலையகத்தில் பல்வேறு இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகள் மிக மோசமானவையாகும். பெரும் உயிர்ச்-சேதங்களையும் பொருட்சேதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
தொடர்ந்தும் வேறு சில இடங்களில் மண்சரிவு அபாயங்கள் நிலவுவதாகவும் மண்சரிவு அச்சத்தால் மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி வருவதா-கவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பூண்டுலோயா சீன் தோட்-டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தொழிலாளர்கள் தமது குடியிருப்புக்களை விட்டு வெளியேறியுள்ளனர். 29 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் குடியிருப்புக்களை விட்டு வெளியேறி கலாசார மண்டபத்தில் தங்கியுள்ளனர்.
இந்த 130 பேரில் முதியோர் உட்பட 35 சிறுவர்களும் குழந்தைகளும் அடங்கி-யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதிய வசதிகள் இல்லாத நிலை காணப்படுவ-தாகவும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டளவில் குறித்த பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் உள்ளதாகவும் எனவே மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலவாக்கலை லிந்துலை பகுதியிலுள்ள ஊவாக்கலை தோட்டத்தின் 3 ஆம் இலக்க பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மேற்படி தோட்டத்தின் வேறொரு பகுதியில் தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்-ளனர். பாதிக்கப்பட்டுள்ள பிரதேசத்துக்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்-பினர் எம்.திலகராஜ் சென்று பார்வையிட்டுள்ளார். இவர்களுக்கு விரைவில் வீடு-களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று அவர் அங்குள்ள மக்க-ளிடம் தெரிவித்துள்ளார்.
பெல்மதுளை பொரணுவ தோட்ட மேற்பிரிவில் தொழிலாளர்கள் குடியிருப்-புகள் அமைந்துள்ள பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டதையடுத்து 35 குடும்பங்-களைச் சேர்ந்த 130 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் அவர்கள் தற்காலிக-மாக பொரணுவ தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தெல்தொட்ட மற்றும் கலஹா ஆகிய தோட்டங்களிலும் சீரற்ற காலநியை காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர். 166 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெல்தொட்டையைச் சேர்ந்த 25 குடும்பங்கள் திருவள்-ளுவர் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புளத்கொஹுபிட்டிய களுப்பான தோட்டத்தில் நிலவிய மண்சரிவு அபா-யத்தால் அங்கிருந்த 60 குடும்பங்களை சேர்ந்த 330 பேர் புளதகொஹுபிட்டிய லக்கல சீலானந்த சிங்கள வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இந்த மண்சரிவு அனர்த்தத்தோடு கேகாலை மாவட்டத்தில் பல தோட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
களுப்பான தோட்ட மக்களோடு லெவல தோட்டத்தில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 178 பேரும் எதிராபொல தோட்டத்தைச் சேர்ந்த 17 குடும்பங்களைச்சேர்ந்த 96 பேருமாக மொத்தம் 604 பேர் தற்பொழுது லக்கல சீலானந்த சிங்கள வித்தியால-யத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான நிவாரண உதவி-களை புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகின்றது.
பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மேற்படி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்-ளதால் கிராமவாசிகள் அந்த மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுமாறும் பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அசாதாரண காலநிலை காரணமாகவும் தொடர்ந்தும் மண்சரிவு அபாயம் நிலவுவ-தாலும் அந்த மக்களை உடனடியாக அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்க முடியாத சூழ்நிலை பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்டது. அவர்களை வேறு இடத்தில் தங்க வைக்க முடியாத காரணத்தினால் தொடர்ந்தும் அப்பாடசாலையிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து பாடசாலையில் தங்க வைக்க முடியாத நிலையில் அவர்கள் நிச்-சயம் தத்தமது தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதில் பாதிக்கப்-பட்ட களுப்பான தோட்ட மக்களுக்கு மலையக புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் 100 வீடுகளை கட்டித்தருவதாக உறுதி-யளித்துள்ளார். இந்த வீடுகள் 6 மாதத்தில் கட்டித்தருவதாகவும் வாக்குறுதியளிக்கப்-பட்டிருக்கின்றது.
அதேநேரம் வீடுகள் கட்டிகொடுக்கப்படும்வரை அவர்கள் தற்காலிகமாக வசிப்-பதற்கு கூடாரங்கள் வழங்கப்பட்டன. களுபான தோட்டத்திற்கும் டெனிஸ்வர்த் தோட்டத்திற்கும் 130 கூடாரங்கள் வழங்கப்பட்டன.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே குறித்த தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்த தவறியதன் விளைவாகவே இன்று 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்-டுள்ளன. இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகத்தின் அசமந்த போக்கும் இவர்களின் உயிர்ப்பலிக்கு காரணம் எனலாம். அபாய எச்சரிக்கையின் போதே அவர்களுக்கு பாதுகாப்பான இடத்தில் வீடுகள் கட்டிக்கொடுத்திருப்பின் இந்த அனர்த்தம் ஏற்பட்டி-ருக்காது.
நன்றி - veerakesari
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...